Wednesday, November 09, 2011

மேகமே! மேகமே!


மேகமே! நீ க‌லைந்து போவ‌துற்க்குள் மழையாகு

மொட்டே! நீ க‌ருகிப் போவ‌துற்க்குள் க‌னியாகு

தென்றலே! நீ புய‌லாக மாறுவ‌த‌ற்க்குள் வீசிவிடு

அலையே! நீ சுனாமியாக மாறுவ‌த‌ற்க்குள் க‌ரையைச் சேர்ந்து விடு

நண்பனே! நீ மண்ணாகும் முன் ம‌னித‌னாகு

மனிதா! நீ காலம் க‌ரைவ‌த‌ற்க்குள் காரிய‌மாற்று.

இளைய ச‌முதாயமே!


இளைய ச‌முதாயமே!

உருகி போவ‌த‌ற்க்கு நீ மெழூகுவ‌ர்த்தியா ?

காற்றில் க‌ரைந்து போக நீ க‌ற்பூரமா?

உதிர்ந்து போவ‌த‌ற்க்கு நீ பூக்களா?

ஓய்ந்து போவ‌த‌ற்க்கு நீ காற்றா?

ப‌ய‌முறுத்த வ‌ரும் சுனாமியா நீ?

ஒரு ப‌க்கம் இலட்சிய‌த்தாலும்,

ஒரு ப‌க்கம் விடாமுய‌ற்சிய‌லும்,

ஒரு ப‌க்கம் த‌ன்ன‌ம்பிக்கையாலும்,

ஒரு ப‌க்கம் ம‌னித‌நேய‌த்தாலும் சூழப்பட்ட தீவு நீ!!!

அற்ப விசயங்களைப் பார்த்து பின் தங்கி விடாதே!!!
துணிந்து நில்!!


முடியும் தோழி!!!


முடியும் என்று மனம்
முனைப்பாய் இருக்கயில்
முடக்கம் எதற்க்கு
முனைந்து செயல் படுவோம்
இதோ மிக அருகில் வெற்றி!!