Thursday, October 25, 2012

பார்த்ததில் ரசித்தது :)

அன்பு தோழமைகளே!!
வணக்கம் :)

பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன் ஒரு சமயம். அப்பொழுது என் கண்ணில் பட்ட ,நான் மிகவும் ரசித்த படத்தை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நிச்சயமாக நீங்களும் ரசிப்பீர்கள் என்று நினைக்கிறேன் :).





எப்படிதான் இப்படி யோசிக்கிறாங்களோ!! ரூம் போட்டு யோசிப்பாங்களா இருக்கும். :)
 

Tuesday, October 09, 2012

இங்கிலிஷ் விங்கிலிஷ் --- திரைவிமர்சனம்




 

செந்தூரப்பூவே! செந்தூரப்பூவே! ஜில்லென்ற காற்றே!!........ என்ற பாடலுக்கு தாவணி விசற ஊஞ்சலில் ஆடும் ஸ்ரீதேவியை அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியுமா என்ன? ஆம் மீண்டும் ஸ்ரீதேவி தலைக்காட்டியிருக்கும் படம் இது. ஒவ்வொரு வயதிலும் பெண்மை அழகாக மிளிரும் என்பது எவ்வளவு உண்மை. அதை மெய்பித்திருக்கிறது. ஸ்ரீதேவி அவர்களின் நளினமும்,அழகும். நடிப்பில் மீண்டும் அசத்தியிருக்கிறார்.

 

ஒரு பெண் எத்தனையோ அவதாரங்கள் எடுக்கிறாள். ஒரு தாயாக , ஒரு மனைவியாக, ஒரு மருமகளாக இருக்கும் பெண்களுக்கும் மனசு இருக்கும் மற்றவர்களைப் போல, அதில் வலியும் இருக்கும் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்கள். கணவன் , மனைவியை எப்படி மதிக்க வேண்டும், அவளுடைய திறமையை எப்படி ஊக்கப்படுத்த வேண்டும் என்பதும் நன்றாக சொல்லியிருக்கிறார்கள். சஷி(shashi) என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்ரீதேவி அவர்களுக்கு ஆங்கில அறிவு குறைவாக இருக்கும். தன் தாய்க்கு ஆங்கில அறிவு இல்லை என்பதை அவமானமாக கருதுகிறது பெண் குழந்தை. தன் தந்தையிடம் மட்டும் அனைத்தையும் பகிர்கிறாள். மொழி அறிவு , தாய்க்கும், குழந்தைக்கும் இடைவெளி ஏற்படுகிறது. ஒரு தாய்க்கு குழந்தையின் விலகல் எவ்வளவு வேதனையான விஷயம்.அதை அழகாக வெளிப்படுத்தி இருப்பார். ஆங்கிலம் தெரியாமல் உடைந்து அழும்பொழுது, நம் கண்களிலும் கண்ணீர்.
 
 


சஷி சிறு தொழிலாக லட்டு செய்து விற்பதை கணவன் கேலி செய்வது , சிறு விஷயத்தில் கூட மனைவியை ஊக்கப்படுத்தாமல் புண்படுத்துவது எவ்வளவு வலிகளை உண்டு பண்ணுகிறது என்பதை ஆண்களுக்கு கொடுத்திருக்கும் குட்டு. அங்கங்கு சர்க்கரைப் பொங்களில் வரும் முந்திரியைப் போல் நகைச்சுவையையும் இயக்குனர் கலந்திருக்கிறார்.


சஷி சூழ்நிலைக் காரணமாக நியூயார்க் செல்கிறார் தனியாக. அங்கேயும் ஆங்கிலம். நொந்து விடுகிறார் சஷி. ஒரு ஆங்கிலம் கற்று கொடுக்கும் விளம்பரம் பார்க்கிறார். ஆங்கில வகுப்பில் போய் சேர்கிறாரா ? இல்லையா? வாழ்வை எப்படி சுவையாகவும் சுவாரஷ்யமாகவும் மாற்றுகிறார்? இதுதான் கதை. இயக்குனரின்(Gauri Shinde) முயற்சியை நிச்சயமாக பாராட்ட வேண்டும். மிக நுண்ணிய உணர்வுகளைக் கூட அழகாக சொல்லியிருக்கிறார்.படம் பார்த்துட்டு உங்களோடு கருத்தையும் இங்கே பதிவு பண்ணுங்க.


சின்ன சின்ன விஷயங்கள் கூட நச்சுன்னு உரைக்கும். சஷி செய்திதாளை கையில் எடுத்து பிரிக்கும் நேரம், கணவன் "சஷி டீ கொடு" என்ற குரல் வரும். செய்திதாளை கணவன் கையில் கொடுத்து விட்டு, ஏக்கமாக பார்த்து செல்வார். முதல்முறை என்பது ஒரு முறை மட்டுமே வரும் விஷயம், அதை நம்பிக்கையோடும், சந்தோஷத்தோடும் எதிகொள்ளுங்கள் என்று ஒரு வசனம் வரும். ரொம்ப நன்றாக இருக்கும். சமையல் "ஆண் செய்தால் கலை , அதுவே பெண் செய்தால் வேலை" என்று ஒரு வசனம் வரும். அழகாக சொல்லப்பட்டிருக்கும். ஒரு மொழி தெரிந்து பேசினால் சிறப்பு, ஆனால் தெரியாத மொழியை முயன்று பேசினால் அது அதைவிட சிறப்பு ஆமாதானங்க!!!
 
சின்ன சின்ன பாராட்டுக்களும் , ஊக்கங்களும் பெண்களுக்கு என்றுமே உற்சாக டானிக். அது அவர்களை இன்னும் உயரத்திற்க்கு எடுத்து செல்லும் ஒரு ஊர்தி.சரி 
படிச்சிட்டு, படத்தை பார்த்துட்டு உங்க கருத்த சொல்லுங்க !! மீண்டும் சந்திபோமா....