Wednesday, March 26, 2014

பெண்கள் செய்யும் வீட்டு வேலைகளில் உள்ள உடற்பயிற்சிகள் என்ன என்ன என்று உங்களுக்கு தெரியுமா?( House hold work and benefits)

பெண்கள் செய்யும் வீட்டு வேலைகளில் உள்ள உடற்பயிற்சிகள் என்ன என்ன என்று உங்களுக்கு தெரியுமா?
நாம் அன்றாடம் செய்யும் வேலைகளிலேயே உடற்பயிற்சிகள் அடங்கியுள்ளன. அவைகள்…
1.துணி துவைத்துப்பிழிதல்- கை அழுத்தப் பயிற்சி
2.பெருக்குதல், வீடு துடைத்தல்- இடுப்புப் பயிற்சி
3.பாத்திரம் கழுவுதல் – கைப் பயிற்சி
4.சப்பாத்தி இடுதல்-முழுங்கை அசைவுப் பயிற்சி
5.மாவு பிசைதல் – விரல்களுக்கான பயிற்சி
6.தேங்காய் துருவுதல்- தோல் பயிற்சி
7.வீடு ஒட்டரை அடித்தல்- கழுத்துப் பயிற்சி
8.தோசை சுட்டு உபசரித்தல்- ஓட்டப் பயிற்சி
9.பரணியிலிருந்து பொருட்களை இறக்குதல்,ஏற்றுதல்- கணம் தூக்கும் பயிற்சி
10.வீட்டை சுற்றி வந்து பொருட்களை ஒழுங்குபடுத்துதல் -நடைப்பயிற்சி
11.குழந்தைகளை குளிப்பாட்டுதல்- அடிவயிற்றுப் பயிற்சி.
ஆனால் இதில் உள்ள வேலைகள் நம் பெண்கள் நிறைய மறந்து விட்டார்கள் காரணம் தொழில் நுட்பம் தான் , அதனால் தான் பெண்களுக்கு இன்று அதிகமாக நோய்கள் வர காரணமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள்.


 Thanks to Unavey Marunthu

மார்ச் 26: மகா கலைஞன் பீத்தோவன் நினைவு தின சிறப்பு பகிர்வு(Beethovan)

மேற்குலக இசையுலகின் சூப்பர் ஸ்டார்கள் என்றால் மொஸார்ட் மற்றும் பீத்தோவன் ஆகிய இருவரையும் குறிக்கலாம். இதில் மொஸார்ட் பிறவி மேதை ; பீத்தோவன் குறைபாடுகளில் வலிகளோடு நகர்ந்து உன்னதம் அடைந்தவர்.
பீத்தோவனின் குடும்பத்தில் எண்ணற்றோர் இசைக்கலைஞர்கள். இவரின் தந்தையும் நல்ல இசைக்கலைஞர். மொஸார்ட் எனும் மாமேதை அப்பொழுது உச்சத்தை அடைந்துகொண்டு இருந்தார். அவரைப்போல தன் மகனும் ஆகவேண்டும் என்று நிற்க வைத்து மணிக்கணக்காக இசைப்பயிற்சி தந்தார் தந்தை. கால் வலிக்கிறது என்று சின்ன வயது பீத்தோவன் அழுதால் அழுதால் முட்டியை அடியால் பெயர்த்து விடுவார். கை விரல்களின் நடுவே பிரம்பால் அடித்து சித்திரவதையின் மூலம் இசைப்பெருக்கை கொண்டு வந்து விட அவர் முயன்ற தருணங்களில் எல்லாம் பீத்தோவன் உள்ளுக்குள் குமுறினார்.
மொஸார்டுடன் இணைந்து இசைப்பணியாற்ற கிளம்பிய அவர் அம்மா இறந்து போனதால் வீட்டுக்கு திரும்ப நேரிட்டது. தந்தை இன்னமும் மோசமாக குடிக்க ஆரம்பித்து இருந்தார். இரண்டு தம்பிகள் வேறு இருந்தார்கள். அவர்கள் எல்லாரையும் காப்பாற்ற வேண்டிய சூழலில் இசைப்பயணத்தை கொஞ்சம் நிறுத்தி வைத்தார்.
மீண்டும் இசைக்க ஆரம்பித்து எண்ணற்ற அற்புதமான கோர்வைகளை தந்தார். அவரின் ஒரு சில இசைக்கோர்வைகளை உருவாக்க எட்டு வருடங்கள் கூட எடுத்துக்கொண்டார் என்பது அவரின் அசாத்திய உழைப்பை காட்டும். எத்தனையோ இசைக்கோர்வைகள் வந்தாலும் அவருக்கு மனதில் நிம்மதி உண்டாகவே இல்லை.

காதலை தொடர்ந்து தேடிக்கொண்டே இருந்த அவருக்கு முழுமையான ஒரு காதல் கிட்டவே இல்லை. காதலியை நிலா வெளிச்சத்தில் சந்தித்து முத்தமிட்டதை மூன் லைட் சோனாட்டா என்று இசையாக மாற்றுகிற அளவுக்கு அவருக்கான ஒரே வடிகாலாக இசை இருந்தது.
பீத்தோவன் இறந்த பின்னர் அவரின் கடித குவியலில் இருந்து “immortal beloved” என்று ஒரு பெண்ணுக்கு எழுதிய காதல் ததும்பும் கடிதங்கள் கிடைத்தன. அவர் யாரென்றே தெரியவில்லை. அதில் இருந்த வரிகள் இவை :
ஏன் மிகவும் நேசிக்கிற ஒருவரிடம் இருந்து பிரிந்தே இருக்குமாறு நேரிடுகிறது ? வியன்னாவில் என்னுடைய வாழ்க்கை துன்பமயமாக இருக்கிறது. உன் காதல் மாந்தருள் மிகுந்த மகிழ்ச்சி கொண்டவனாகவும்,சோகம் நிறைந்தவனாகவும் ஆக்கியிருக்கிறது….அமைதியாக இரு. என்னை காதலி ! இன்று-நேற்று-எத்தகைய கண்ணீர் தரும் காத்திருப்பை உனக்கு நான் தந்திருக்கிறேன். உனக்காக,என் வாழ்க்கையான உனக்காக… தொடர்ந்து என்னை காதலி ! உன் காதலனின் நன்றி
மிகுந்த இதயத்தை எப்பொழுதும் தவறாக எடை போட்டு விடாதே.
இருபத்தி ஆறு வயதில் தான் பீத்தோவனின் காதுகளில் மணி யடிப்பது போல தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. படிப்படியாக காது கேட்காமல் போனது. டின்னிடஸ் எனும் அரிதான நோய் அது. போர்களில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த
மன்னர்கள் அவரை கவனித்துக்கொள்ளவில்லை. வருமானத்துக்கு வழியில்லாமல் தன்னுடைய இசைக்கோர்வைகளை மிக சொற்ப விலைக்கு விற்றார் அவர்.
முழுமையாக காது கேட்காமல் போன பிறகு நடந்த முதல் இசை நிகழ்ச்சி பெருந்தோல்வியில் முடிந்தது. மனந்தளர்ந்து வேசிகளிடம் போய் அமைதி தேடினார் அவர். அப்பொழுதும் அவரால் அமைதி பெற முடியவில்லை. அவரின் இசைக்கோர்வைகள் எப்படி தங்களை உத்வேகப்படுத்தின என்று நண்பர்கள் எழுதிக்கொண்டு வந்து கொடுத்தார்கள். அதைப்படித்து மீண்டும் இசைக்கலாம் என்று கனத்த மவுனத்துக்கும், சோகத்துக்கும் நடுவில் பீத்தோவன் வந்தார்.
பல்லாயிரம் பேர் நின்று கொண்டு இருந்தார்கள். இசைக்கருவியை தொட்ட பொழுது வெறுமை மட்டுமே அவரை சூழ்ந்திருந்தது. சுற்றியிருந்த எதுவுமே கேட்கவில்லை ; நிச்சயமாக எதுவுமே ! ஒவ்வொரு கட்டையாக அழுத்திய பொழுது எழுந்த அதிர்வை மட்டுமே கொண்டு இசைத்தார் அவர். வாசித்து முடித்ததும் கூர்மையான விமர்சனப்பார்வை கொண்ட கூட்டத்தின் எல்லாரும் எழுந்து நின்று அவரின் இசைக்கு எல்லாரும் கைதட்டிய பொழுது பொங்கி அழுதார் அவர்.
அதற்கு பிறகு மிகப்புகழ் பெற்ற இசைக்கொர்வைகளை உருவாக்கி தள்ளினார் அவர். அவரின் இசை எப்படி காலங்களை கடந்து நிற்கிறது என்பதற்கு ஒரே ஒரு சம்பவத்தை எடுத்துக்காட்டாக சொல்ல முடியும். உலகப்போர் சமயத்தில் துவண்டு போன பிரிட்டன் வீரர்கள் மற்றும் மக்களை உற்சாகப்படுத்த பீத்தோவனின் ஐந்தாவது சிம்பனி தொடர்ந்து இசைக்கப்பட்டது. துவண்டு கிடந்த தேசம் நிமிர்ந்து நின்று போராடி வென்றது.
அவரின் இசை காலங்களை கடந்து மொஸார்ட்டின் கோர்வைகளுக்கு இணையாக கொண்டாடப்படுகிறது. இருவருக்கும் சில வித்தியாசங்கள் உண்டு. மொசார்ட் பிறவி மேதை ; பீத்தோவன் தன்னுடைய வலிகள், தோல்விகள், உடற்குறைபாடுகள் எல்லாவற்றுக்கும் இசையின் மூலம் வடிகால் தேடினார். பீத்தோவன் உருவத்தில் குள்ளம், காது கேட்காமல் போனது. இருந்தாலும் அவரின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு நூற்றாண்டுகளை கடந்து அவரை நினைக்க வைக்கிறது. சோகங்களை தன்னுடைய கலையில் தோய்த்து கொடுத்த மகா கலைஞன் அவர். அவரின் நினைவு தினம்
இன்று.
- பூ.கொ.சரவணன்

விமானங்கள் நடு வானில் காணமல் போகிறது. . தெரிந்து கொள்வோமா?

விமானங்கள் நடு வானில் காணமல் போகிறது. . தெரிந்து கொள்வோமா? இதோ சில உண்மைகள்
1. விமானங்களுக்கும் கப்பலுக்கும் வானத்திலும் கடலிலும் ஒவொரு மார்கதிற்க்கும் வாகனங்களுக்கான சாலை மார்க்கம் தடம் போல் நிரந்தர ஆகாய பாதை விமானதிர்ற்கும் நிரந்தர கடல் வழி கப்பலுக்கு கடலில் நிரந்தர வழியும் உண்டு. சர்வதேச விமான கட்டுபாட்டு துறையும் கப்பல் கட்டுபாட்டு துறையும் வகுத்துள்ள நிரந்தர வழிகளில் மட்டுமே விமானத்தையும் கப்பலையும் செலுத்தவேண்டும்.
2.பறந்து விரிந்த ஆகாயம் தானே என விமானத்தையும் , விரிந்து கிடக்கும் கடல்தானே என கப்பலையும் விருப்பம் போல் ஓட்ட முடியாது.
3. உலகில் 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட பகுதியில் நடு கடல் பகுதியில் புவி ஈர்ப்பு விசை (கோஸ்ட் பிளேஸ் )அதிகமாக உள்ள இடங்கள் என கண்டறிய பட்டுள்ளது. அந்த இடங்களில் மட்டும் சுமார் 60அயிரம் அடிவரை இந்த புவி ஈர்ப்பு விசை இருக்கும் . இதன் மேல் எந்த பொருள் பூமிக்கு மேல் சென்றலும் அதை கீழே இழுத்து விடும் சக்தி கொண்டது. அத்தகைய இடங்களில் விமானமும் கப்பலும் செல்ல தடை உள்ளது. முக்கியமாக இந்தோனேசியா கடல் பகுதியிலும், வங்காள விரிகுடா அந்தமான் பகுதியிலும், வடக்கு கனடா, பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் அதிக இடங்களில் இந்த கோஸ்ட் place என கூற படும் பகுதிகள் உள்ளது. இதுபற்றி அந்ந்தந்த விமான வழி தடங்களில் செயல்படும் விமானிகளுக்கு பயிற்சி கொடுக்க பட்டிருக்கும்.
4. வானில் 30 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டு இருக்கும் போது அந்த விமானம் வானவெளியில் பறக்க குறைந்த பட்ச காற்று அழுத்தம் தேவை. அப்போது தான் வானவெளி அந்தரத்தில் எஞ்சின் கட்டுப்பாட்டில் அதை சீராக கீழே இறங்காமல் நேரே விமானத்தை முன்னோக்கி கொண்டு செல்லும்.
5. சில சமயங்களில் மழை புயல் காலங்களில் விமானம் பறக்கும் தடத்தில் VACCUM pocket எனப்படும் நெகடிவ் பிளேஸ் வெற்றிடம் 200 முதல் 500 கிலோமீட்டர் வரை இருக்கும். அதை முன்பே விமானகட்டுபாட்டு அரை கண்டு கொண்டு விமானத்தை வெற்றிடம் இல்லாத தடத்தில் இயக்க விமானிகளுக்கு அறிவுரை வஷங்கபடும். சில சமயங்களில் கட்டுபாட்டு அரை ராடாரில் சிறிய அளவிலான வெற்றிடம் தெரியாது. இது போன்ற சிறிய அளவிலான வெற்றிடங்களுக்கு அருகில் விமானம் வரும் போது தான் விமானத்தின் ராடார் சாதனத்தில் மட்டும் இது தென்படும். அப்போது நீங்கள் விமானத்தில் இருக்கும் போது விமானி நீங்கள் சீட் பெல்ட் அணிந்திராவிடில் உங்களை சீட் பெல்ட் அணிய சொல்லி அதற்க்கான உங்கள் தலைக்கு மேல் உள்ள எச்சரிக்கை சின்ன விளக்கை எரியவிடிவார். அடுத்த ஓரிரு நிமிடங்களில் விமானம் குண்டும் குழியும் இருக்கும் சாலையில் பயணிப்பது போல் ஒரு உணர்வு நமக்கு தெரியும். பொதுவாக விமானம் ஆகாயத்தில் பறக்கும் போது ஒரு எஞ்சின் மட்டும்தான் இயங்கும். மற்றொரு எஞ்சின் spare ராக எமெர்ஜென்சி க்கு பயன்படுத்த இருக்கும். வெற்றிடத்தில் விமானம் நுழையும் பொது இரு விமான எஞ்சின்களும் அதிகபட்ச RPM ல் மானுவலாக விமானி இயக்குவார். இது 20 முதல் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு வெற்றிடம் இருந்தால் மட்டும் விமானத்தை பாதுகாப்பாக செலுத்தி வெற்றிடத்தை தாண்டுவது சாத்தியம்.
6. நடந்த மலேசியன் விமான அசம்பாவிதம் கூட இந்த பாணியில் நடந்திருக்கும் என விமானி நண்பர் கூறுகிறார். முக்கியமாக ஒவொரு விமானத்திலும் இரண்டு விமானிகள் இருப்பார். நீண்ட தூரம் செல்லும் விமானத்தில் 2 மணி நேரத்திற்கு ஒருவர் என விமானத்தை ஒரு விமானி கட்டுபாட்டில் வைத்து விமானத்தை இயக்குவார்கள். அப்போது ஒரு விமானி ஓய்வு எடுப்பார். சில சமயங்களில் விமானம் மேலே பறக்க துவங்கியவுடன் கட்டுபாட்டு அறையிலிருந்து அந்த விமான தடத்திர்கான நிலை குறித்து தகவல் வரும். வந்திருக்கும் weather ரிப்போர்ட் normal லாக இருந்தால் பல விமானங்களில் இரு விமானிகளும் AUTO BELT எனப்படும் தானியங்கி விமான இயக்க mode டை ஓட செய்து விட்டு கண்ணை மூடி தூங்கி விடுவார்கள். விமான தடத்தில் திடிரென சிறிய வெற்றிடம் வரும் போது திடிரென விமானம் கட்டுபாட்டை இழந்து சில நொடிகளில் கடலிலோ நிலத்திலோ விழும். இது போல் விபத்துக்கள் பெரும்பாலும் நள்ளிரவுக்கு பின் பறக்கும் விமானங்களில் நடக்கும்.
2008ம் ஆண்டு அதிகாலை நேரத்தில் 280 பயணிகளுடன் சென்னையிலிருந்து சிங்கப்பூர் வந்த இந்தியன் airline விமானமும் வங்காள விரிகுடாவில் பறந்து கொண்டு இருக்கும் போது இதுபோல் ஒரு காற்று இல்லா வெற்றிடத்தில் சிக்கி திடிரென விமானம் இருபத்து ஐந்தாயிரம் அடிக்கு கீழே செங்குத்தாக கீழே இறங்க கடலை தொடும் தருவாயில் விமானியின் சமயோசித தனத்தால் திரும்பவும் விமானத்தை கட்டுபாட்டுக்கு கொண்டு வந்து விபத்தை தவிர்த்தார் என்பது குறிப்பிடதக்கது .