உன்னிடமிருந்து
பூவிலிருந்து அதனுடைய மந்தகாச நறுமணத்தை பிரிக்க முடியுமா?
எங்கேயோ பிறந்து தென்றலிலே மிதந்து வரும்
இன்னிசையை,தென்றலிருந்து பிரிக்க முடியுமா?
அழகாக பரந்து விரிந்துள்ள வானத்திலிருந்து
நீலத்தை பிரிக்க முடியுமா?
விழிகளில் இருந்து தூக்கத்தைத்தான்
பிரிக்க முடியுமா?
எங்கே திரும்பினாலும் உள்ளம் கொள்ளை
கொள்ளும் இயற்கை,அந்த இயற்கையிலிருந்து
பசுமையை பிரிக்க முடியுமா?
பனி வீசும் மார்கழி காலை,
அதிலிருந்து குளிரை பிரிக்க முடியுமா?
இவையெல்லாம் எப்படி சாத்தியமில்லையோ
அதைப்போலவே உனக்குள் இருக்கும்
திறமையை யாராலும் உன்னிடமிருந்து பிரிக்க முடியாது
நமக்காக காத்திருக்கும் வாய்ப்புகளை
யாராலும் தட்டிப் பறிக்க முடியாது,
துணிந்து செயல் படுவோம்,
இதோ மிக அருகில் வெற்றி!!!!
1 comment:
Wow! Amazing lines!
Post a Comment