தண்ணீர் தேவதை!!!
·
மழை
நீரை சேமிக்கிறோமா?
தண்ணீர்..
தண்ணீர்.. என்று படமெடுத்து விட்டார் திரு K.பாலசந்தர் அவர்கள்.
தண்ணீருக்காக
ஒரு புது தேசத்தையே
காட்டிவிட்டார் திரு வைரமுத்து
அவர்கள்.
கோடைகாலத்தில் அனைவராலயும் மகிழ்ச்சியாக
இருக்க முடிவதில்லை... காரணம்,வெப்பமும்,
வேர்வையும்.
எங்கேயும்
தண்ணீர் தட்டுப்பாடு. விவசாயிகள் படும் பாடு சொல்லி மாளாது. வறட்சி.. வெருமை.. தாகம்... தவிப்பு..
தண்ணீர். அனைத்து ஜீவ ராசிகளும்
பாதிக்க படுகின்றன.ஆனால்
மழைக் காலத்தில் ...
ஆறும்,குளமும்,ஏரியும் நிரம்பி வழிந்து
அதன் சந்தோஷத்தை
காட்டுகின்றன..
நீர் நிலைகளிலோ மீன்களின் கொட்டம்... நீரால்..
கொக்குகளுக்கும், மனிதர்களுக்கும்
கொண்டாட்டம்... மீனால்..
குளத்திலோ
அல்லியும், தாமரையும் கதை பேசிக்கொண்டிருக்கின்றன.
இப்படியாக புல்வெளிகள், தோட்டம், தோப்புகள் அனைத்தும் ஆரவரித்து தாகம் தீர்க்கின்றன.
விவசாயிகளுக்கோ
ஆனந்த பரபரப்பு..
எங்கும்
பசுமையும், அது
தரும் குளிர்ச்சியும்
மட்டுமே..
இந்த சந்தோஷங்களை எல்லாம் பார்த்து மகிழ்ச்சியாக
மரங்களும் தங்களின் பணிகளை தொடங்குகின்றது அடுத்த
மழைக்காக...
இப்படிப்பட்ட சந்தோஷத்தை அள்ளித்தரும் தண்ணீர்
தேவதையை
நாம் எப்படி பாதுகாக்கிறோம்?
·
மரங்களை
நடுகிறோமா?
·
விளை
நிலங்களில் வீடுகட்டுவதை நிறுத்தி விட்டோமா?
·
மரங்கள்
வெட்டுவதை எப்பொழுது நிறுத்தப்போகிறோம்?
·
இதை
எல்லாம் எப்பொழுது செய்யப்போகிறோம்?
·
வரும்
சந்ததியினருக்கு என்ன விட்டுப்போகப்போகிறோம்?
நமது
சந்ததியினருக்கு காசு பணம் வேண்டாம்.
தண்ணீரும்,ஆரோக்கியமும் மட்டுமே வேண்டும். நீரின்றி
அமையாது உலகு என்ற கூற்றின்
படி, உலகை வாழ
வைப்போம்.
மனிதர்களைப் போல்
தன்னைமட்டும் நினையாமல்,
உலகையே வாழ வைக்கும் மகாத்மாக்களான
மரங்களை வளர்த்து மனித
வளம் மற்றும்
நாட்டின் வளத்தைக் காப்போம்!
வாழ்க வையகம்!!
No comments:
Post a Comment