அன்புள்ள தோழிகளே!!
மகளிர் தின நாள் வாழ்த்துக்கள் :)
பெண்ணே!! நீ.....
மதி நுட்பம் வாய்ந்தவளாம்....
புது வனப்பாம் செந்தமிழ் மொழியை போற்றுபவளாம்......
பெண் புத்தியை முன் புத்தியாக ஆக்கி வருபவளாம்.....
தனக்கென்று வாழாமல் குடும்பத்திற்க்காக வாழ்பவளாம்...
குலப்பெருமையை போற்றுபவளாம்.....
நல்ல குண நலங்களை பேணுபவளாம்....
குறிப்பறிந்து நடப்பவளாம்.....
மனதில் யானை பலம் கொண்டவளாம்....
கண்ணுக்கும், கருத்திற்க்கும் புதுமையானவள்.....
வீரத்திற்க்கும், விவேகத்திற்க்கும் கீரிடமானவளாம்......
தாய்மைக்கும், பாசத்திற்க்கும் அடிமையானவளாம்.......
தரணிக்கெல்லாம் ராணியானவளாம்......
இத்தகைய பெருமை கொண்ட பெண்ணையை போற்றுவோம்..... அவளை பாதுகாப்போம் வன்கொடுமைகளில் இருந்து
(கருவிலேயே சமாதி கட்டி, வெளி உலகத்தை பார்க்காமலேயே மறித்த (சிசுக்கொலை) தேவதைகள் அனைவருக்கும் இந்த கவிதை சமர்ப்பணம். நன்றி!! இதை எழுதியவர் என் தாய் கிருஷ்ணவேணி, அவருக்கும் என் நன்றி.)
No comments:
Post a Comment