Sunday, April 06, 2014

‘தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் (Mother Speech can improve children's talent)

தாயின் பேச்சு குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.பொதுவாக குழந்தைகள் விளையாடி மகிழ அழகிய பொம்மைகள், விளையாட்டு சாதனங்கள் மற்றும் வீடியோ கேம்கள் போன்றவற்றை பெற்றோர் வாங்கி கொடுக்கின்றனர்.அவை அவர்களின் அறிவாற்றலை வளர்க்கும் என நம்புகின்றனர்.

ஆனால் இவற்றைவிட குழந்தைகளிடம் தாய் தொடர்ந்து பேச்சு கொடுத்தாலே போதும், குழந்தையின் மூளை வளர்ச்சி அடைந்து அறிவுத்திறனும் வளரும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

லண்டனில் உள்ள வடமேற்கு பல்கலைக்கழ கத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இதுபற்றி ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அவர்கள் பிறந்த 3 மாதமே ஆன 50 குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தினார்கள்.

அந்த குழந்தைகளிடம் அவர்களின் தாய்மார்களை அடிக்கடி பேச்சு கொடுக்கும்படி தெரிவித்தனர். மேலும், மீன், மாடு போன்றவற்றின் படங்களை காட்டி அவற்றின், பெயர்களை கற்றுக் கொடுக்கும்படியும் வலியுறுத்தப்பட்டது.

அவர்கள் கொடுத்த பயிற்சியின்படி 3 மாத குழந்தைகள் படங்களை பார்த்து அவற்றின் பெயர்களை உச்சரிக்க தொடங்கினர். மேலும் பல படங்களின் மூலம் அவற்றின் பெயர்களை தெரிவித்தனர்.

இந்த ஆய்வின் மூலம் குழந்தைகளிடம் தாய்மார்கள் பேச்சு கொடுத்தாலே போதும், குழந்தைகளின் அறிவுத்திறன் வளரும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.



--உணவே மருந்து 

No comments: