Sunday, July 27, 2014

திருமணம் என்னும் நிக்காஹ் திரைவிமர்சனம் ( Thirumannam ennum nikka tamil movie review)

அன்புள்ள நண்பர்களே!!

வணக்கம். நலம்தானே? மீண்டும் ஒரு திரைவிமர்சனத்தில் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். எப்பொழுது ஒரு படம் வரும் பொழுதும் நமக்கு எதிர்ப்பார்ப்பு இருக்கும். அந்த வரிசையில் நீண்ட நாளைய எதிர்ப்பார்ப்பு படம்தாங்க இன்னைக்கி பார்க்கப் போவது. வாங்க படத்துக்கு போகலாம்.

விஜய ராகவன் (எ) அபு பக்கர் ( ஜெய்) ஒரு அய்யங்கார் ஆத்து பையன். என்ன பயங்கரமா தலை சுத்துதா ? கொஞ்சம் பொருமையா முழுசையும் படிங்க. ஒரு வேலையா கோயம்புத்தூர் போகணும் ஆனா பயணச் சீட்டு இல்லாத காரணத்தாலா , அபு பக்கர் சீட்டைப் பயன்படுத்தி போகிறார். அங்கே விஷ்ணு பிரியா (எ) ஆயிஷா ( நஸ்ரியா) வும் அதே ரயில் பெட்டியில் பயணிக்கிறார். ஆயிஷா என்கிற அவருடைய தோழிக்கு பதிலாக தொழில் தொடர்பாக செல்கிறார். பிரியா வைப் பார்த்ததும் ஜெய்க்கு மிகவும் பிடித்து விடுகிறது. ஆனால் அவர் எதுவும் பேசுவதில்லை. இவர்கள் இருக்கைக்கு பக்கத்தில் வந்து அமரும் ஒரு நபர் பிரியாவிடம் அதிகமாக வழிகிறார். உரிமையும் எடுத்துக் கொள்கிறார். அனைவரும் தூங்கும் நேரத்தில் பிரியாவை படம்பிடிக்க முயல்கிறார். அதை கண்டுபிடித்து போலிசிடம் ஒப்படைக்கிறார். அதனால் அவர் மீது பிரியாவிற்க்கு தனி மரியாதை வருகிறது.

Directed byAneesh
Produced byAascar Ravichandran
StarringJai
Nazriya Nazim
Heebah Patel
Jamal
Music byM. Ghibran
CinematographyLoganathan
Edited byKasi Vishwanath
Production
company
Aascar Films


சென்னை வந்ததும் தங்கள் வேலையை தொடர்ந்தாலும், இருவருக்கும் ஒருவர் நினைப்பாக இருக்கிறது. இருவரும் மாறி மாறி நினைத்துக் கொள்கிறார்கள் இஸ்லாமை சேர்ந்தவர் என்று. அதனால் இஸ்லாமை பற்றிய விவரங்களை சேகரிக்க ஆரம்பிக்கிறார்கள். இருவரும் மாறி மாறி பேசிக்கொண்டாலும் தாங்கள் இஸ்லாமை சேர்ந்தவர்கள் இல்லை என்று சொல்வதில்லை. பிரியாவிற்க்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்க, வீட்டில் தான் காதலிப்பதாக சொல்லி விடுகிறார். அதே நிலையில் ராகவனும் இருக்க அவரும் சொல்லி விடுகிறார். அப்பொழுதுதான் தெரிகிறது அவர்கள் இருவரும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்று. இருவருக்கும் ஏதோ நொருங்கியது போன்ற உணர்வு.


வீட்டில் இருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. அப்பொழுது இருவரும் நினைக்கிறார்கள், இந்த திருமணத்தை நிறுத்தி விடலாம் என்று. ஏன் திருமணத்தை நிறுத்தினார்கள்? மீண்டும் திருமணம் செய்து கொண்டார்களா?வேறு என்னென்ன பிரச்சினைகளை சந்தித்தார்கள் போன்றவைதான் மிச்ச கதை.

முதலில் நாம ஜெய் பத்தி சொல்லிடலாம். ரொம்ப அப்பாவியா முகத்தை வச்சிக்கிறதுக்கும் , நடிக்கிறதுக்கும் தனியா பயிற்ச்சி எடுக்கிறார்ன்னு நினைக்கிறேன். அப்படி ஒரு அப்பாவித்தனம். நஸ்ரியா என்று நினைத்துக் கொண்டு ஒவ்வொரு பர்தா போட்ட பெண் பின்னால் போய் பார்ப்பதாகட்டும், முன்ன, பின்ன தெரியாதவங்க கிட்ட நம்மை பத்தின விஷயத்தை பகிர்ந்துக் கொள்ளக் கூடாது என்று அறிவுரை வழங்குவதாகட்டும், இஸ்லாமை ஆர்வத்தோடு படிப்பதாகட்டும் அனைத்திலும் மதிப்பெண் பெற்றுவிடுகிறார்.


நஸ்ரியா கொள்ளை அழகுங்க. இஸ்லாமிய பெண்ணாகவும், பிராமினப் பெண்ணாகவும் பொருந்தும் முகம். சொல்லிட்டாப் போச்சு, செஞ்சுட்டாப் போச்சு என்று தன் துறுதுறு விழியாலும், பேச்சாலும் சுண்டி இழுக்கிறார்.


இப்ப கதைக்கு வருவோம். ரொம்ப சொதப்பல் இருக்கு கதையில. கொஞ்சம் தைரியமா முயற்ச்சி பண்ணி இருந்தார்னா கண்டிப்பா நல்ல படமாக இருந்திருக்கும். சில இடங்கள் சபாஷ் போட வைக்கும் அதே நேரத்தில், அய்யோ என்றும் சொல்ல வைத்து விடுகிறார். விறுவிறுப்பான படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, எதிர்பாராமல் யாரோ ரிமோட் கண்ரோலை நம்ம கையில் இருந்து பிடிங்கிக் கொண்டு வேறு படத்தை மாற்றியதைப் போல இருந்தது. நிச்சயமாக பாராட்டப் பட வேண்டிய படமாக இருந்திருக்கும் கொஞ்சம் திரைக்கதையை மட்டும் மாற்றி இருந்தால். முடிவாக என்ன சொல்ல வருகிறார் என்பதும் நமக்கு தெளிவாக இல்லை. முயற்ச்சியை பாராட்டுவோம். கொலு மற்றும் ஆவணி அவிட்டம் (ஸ்ரீ பெரும்பூதூர்), ரம்ஜான் (மலபார்) மற்றும் முஹரம் (ஹைட்ராபாத்) போன்ற பண்டிகைகள் உண்மையாகவே எடுத்திருக்கிறார்.

அடுத்து இசைக்கு வருவோம். இசை கிப்ரான்(Ghibran) பின்னணி இசையிலும், பாடலிலும் கலக்கி இருக்கிறார். ஜில்லென்ரா பாடல் மிக இனிமை.

அனைத்து துணை நடிகர்களும், நடிகைகளும் தங்களுக்கான பங்கை குறைவின்றி செய்திருக்கிறார்கள்.

மொத்தத்தில்  திருமணம் என்னும் நிக்காஹ் குழப்பம்.

நீங்களும் படம் பார்த்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.


மீண்டும் சந்திப்போமா?

வணக்கம். வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!!

Wednesday, July 16, 2014

படித்ததில் பிடித்தது --திரு ராமானுஜன் (திரு ஞாநி சங்கரன் பக்கத்திலிருந்து)

        இரவுக் காட்சிகள் பார்ப்பதில்லை என்ற பத்தாண்டு விரதத்தை முறித்து, நேற்று இரவு ஞான ராஜசேகரனின் 'ராமானுஜன்' படச் சிறப்புக் காட்சிக்குச் சென்றேன். சில குறைகள் இருந்தபோதும் நல்ல முயற்சி. படத்தின் சிறப்பு அம்சம் ரமேஷ் விநாயகத்தின் இசை. படம் பார்த்து முடிந்து வந்தபின் நள்ளிரவுக்கு மேல் கணித மேதை ராமானுஜனின் மனைவி ஜானகி அம்மாளைப் பற்றிய குறிப்புகளை இணையத்தில் தேடிப் பிடித்துப் படித்துக் கொண்டிருந்தேன். பாரதியின் மனைவியை போல ராமானுஜனின் மனைவியின் வாழ்க்கைதான் இன்னும் சொல்லப்படாத வாழ்க்கைகளில் முக்கியமானதாக பட்டது. இது எடுக்கப்படாத இன்னொரு படத்துக்கான கதை. ராமானுஜன் 32 வருடம்தான் வாழ்ந்தார் (1887-1920).
 
          ஜானகி 94 வயது வரை இருந்தார்(1899-1994). ராமானுஜனுக்கு ஜானகியை கன்னிகாதானம் கொடுத்தபோது ஜானகி வயது 9. . ராமானுஜன் வயது 21. தன் 15வது வயதில் பருவமடைந்தபின்னர்தான் ஜானகி ராமானுஜனுடன் சென்னையில் குடும்பம் நடத்த வருகிறார். அடுத்து சேர்ந்து வாழ்ந்தது இரண்டே வருடங்கள். அடுத்த ஆறு வருடங்கள் ராமானுஜன் வெளிநாட்டில். திரும்பி வந்த ஒரே வருடத்தில் ராமானுஜன் மரணம். அப்போது ஜானகிக்கு வயது 21. அடுத்த எட்டாண்டுகள் தன் சகோதரருடன் மும்பையில் இருக்கிறார். அங்கே தையல் வேலையும் ஆங்கிலமும் கற்றுக் கொள்கிறார். பின் திருவல்லிக்கேணிக்கு திரும்பி வந்து கொஞ்ச காலம் தன் சகோதரியுடன் இருக்கிறார். பின் தனியே தன் உழைப்பில் தையல் வேலை செய்து வாழ்க்கை நடத்துகிறார். அவர் அப்படி தனி வாழ்க்கை நடத்திய காலத்தில் இருந்த ஒரு சிநேகிதி 1950ல் இறந்துவிடவே, அந்த சிநேகிதியின் 7 வயது 'அநாதை'க் குழந்தையை தானே வளர்த்து ஆளாக்குகிறார். அப்போது ஜானகிக்கு வயது 51. மகனை பி.காம் வரை படிக்க வைக்கிறார். வங்கி அலுவலராக பணி சேர்ந்த அந்த வளர்ப்பு மகனுக்கு திருமணமும் செய்து வைக்கிறார். அந்த மகனின் பராமரிப்பில் இறுதி வரை இருக்கிறார். 1962ல் ராமானுஜனின் 75வது பிறந்த வருட கொண்டாட்டம் வரை ஜானகி அம்மாளை ( இப்போது வயது 63 ) அரசோ அமைப்புகளோ பெரிதாக கவனிக்கவில்லை. ராமானுஜனுக்கான பென்ஷன் பணம் மாதம் ரூ 50. மெல்ல மெல்ல இது 1994ல் ரூ 500 ஆயிற்று. 1962க்குப் பின் நன்கொடைகள் கணிசமாக வந்தன. 
              இதில் திருவல்லிக்கேணியில் தனக்கென ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு அங்கே இருந்தார் ஜானகி. நிறைய ஏழை மாணவர்களுக்கு எப்போதும் பண உதவி செய்துவந்திருக்கிறார். தையல் டீச்சர் ஜானகி கணித மேதை ராமானுஜன் அளவுக்கு முக்கியமானவர். தன் கணித மேதமையை உலகம் அங்கீகரித்து உதவும் வரை வறுமையில் வாட நேர்ந்ததால், அடிகக்டி மனச் சோர்வுக்கு ஆளானவர் ராமானுஜன். ஜானகி நேர்மாறாக வாழ்க்கை தனக்கு அளித்த இடையூறுகளை மீறி நம்பிக்கையோடு வறுமையில் செம்மையாக வாழ்ந்து சாதித்தவர்.
Photo: இரவுக் காட்சிகள் பார்ப்பதில்லை என்ற பத்தாண்டு விரதத்தை முறித்து, நேற்று இரவு ஞான ராஜசேகரனின் 'ராமானுஜன்' படச் சிறப்புக் காட்சிக்குச் சென்றேன். சில குறைகள் இருந்தபோதும் நல்ல முயற்சி. படத்தின் சிறப்பு அம்சம் ரமேஷ் விநாயகத்தின் இசை. படம் பார்த்து முடிந்து வந்தபின் நள்ளிரவுக்கு மேல் கணித மேதை ராமானுஜனின் மனைவி ஜானகி அம்மாளைப் பற்றிய குறிப்புகளை இணையத்தில் தேடிப் பிடித்துப் படித்துக் கொண்டிருந்தேன். பாரதியின் மனைவியை போல ராமானுஜனின் மனைவியின் வாழ்க்கைதான் இன்னும் சொல்லப்படாத வாழ்க்கைகளில் முக்கியமானதாக பட்டது. இது எடுக்கப்படாத இன்னொரு படத்துக்கான கதை. ராமானுஜன் 32 வருடம்தான் வாழ்ந்தார் (1887-1920). ஜானகி 94 வயது வரை இருந்தார்(1899-1994). ராமானுஜனுக்கு ஜானகியை கன்னிகாதானம் கொடுத்தபோது ஜானகி வயது 9. . ராமானுஜன் வயது 21. தன் 15வது வயதில் பருவமடைந்தபின்னர்தான் ஜானகி ராமானுஜனுடன் சென்னையில் குடும்பம் நடத்த வருகிறார். அடுத்து சேர்ந்து வாழ்ந்தது இரண்டே வருடங்கள். அடுத்த ஆறு வருடங்கள் ராமானுஜன் வெளிநாட்டில். திரும்பி வந்த ஒரே வருடத்தில் ராமானுஜன் மரணம். அப்போது ஜானகிக்கு வயது 21. அடுத்த எட்டாண்டுகள் தன் சகோதரருடன் மும்பையில் இருக்கிறார். அங்கே தையல் வேலையும் ஆங்கிலமும் கற்றுக் கொள்கிறார். பின் திருவல்லிக்கேணிக்கு திரும்பி வந்து கொஞ்ச காலம் தன் சகோதரியுடன் இருக்கிறார். பின் தனியே தன் உழைப்பில் தையல் வேலை செய்து வாழ்க்கை நடத்துகிறார். அவர் அப்படி தனி வாழ்க்கை நடத்திய காலத்தில் இருந்த ஒரு சிநேகிதி 1950ல் இறந்துவிடவே, அந்த சிநேகிதியின் 7 வயது 'அநாதை'க் குழந்தையை  தானே வளர்த்து ஆளாக்குகிறார். அப்போது ஜானகிக்கு வயது 51. மகனை பி.காம் வரை படிக்க வைக்கிறார். வங்கி அலுவலராக பணி சேர்ந்த அந்த வளர்ப்பு மகனுக்கு திருமணமும் செய்து வைக்கிறார். அந்த மகனின் பராமரிப்பில் இறுதி வரை இருக்கிறார். 1962ல் ராமானுஜனின் 75வது பிறந்த வருட கொண்டாட்டம் வரை ஜானகி அம்மாளை ( இப்போது வயது 63 ) அரசோ அமைப்புகளோ பெரிதாக கவனிக்கவில்லை. ராமானுஜனுக்கான பென்ஷன் பணம் மாதம் ரூ 50. மெல்ல மெல்ல இது 1994ல் ரூ 500 ஆயிற்று. 1962க்குப் பின் நன்கொடைகள் கணிசமாக வந்தன. இதில் திருவல்லிக்கேணியில் தனக்கென ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு அங்கே இருந்தார் ஜானகி. நிறைய ஏழை மாணவர்களுக்கு எப்போதும் பண உதவி செய்துவந்திருக்கிறார். தையல் டீச்சர் ஜானகி கணித மேதை ராமானுஜன் அளவுக்கு முக்கியமானவர். தன் கணித மேதமையை உலகம் அங்கீகரித்து உதவும் வரை வறுமையில் வாட நேர்ந்ததால், அடிகக்டி மனச் சோர்வுக்கு ஆளானவர் ராமானுஜன். ஜானகி நேர்மாறாக வாழ்க்கை தனக்கு அளித்த இடையூறுகளை மீறி நம்பிக்கையோடு வறுமையில் செம்மையாக வாழ்ந்து சாதித்தவர்.

ஞாபகசக்தி,அதிகரிக்க விஸ்வநாதன் ஆனந்த் தரும் டிப்ஸ்( For increaseing the memory power)


ஞாபகசக்தி,அதிகரிக்க விஸ்வநாதன் ஆனந்த் தரும் டிப்ஸ்:

மனதில் எந்த விஷயம் தோன்றுகிறதோ, அதை உடனே ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பும், பரிட்சை எழுதப் போவதற்கு முன்பும் எழுதி வைத்த விஷயங்களை திரும்பத் திரும்பப் படித்து பாருங்கள்.

ஒரு பேப்பரைப் படிக்கிறோம். அதில் உள்ள செய்திகள் நம் மனதில் பதிந்துவிடுகிறது. திரும்ப அதை நினைத்துப் பார்க்கும்போது பேப்பரின் இடப்பக்கம் வலப்பக்கம், பக்க எண் உட்பட நம்மால் சொல்ல முடிகிறது. அதுபோல்தான் ஆர்வத்துடன் படித்து, உடனே குறித்து வைத்துக் கொள்வதுகூட ஆழமாய் மனதில் பதிந்துவிடும்.
கம்ப்யூட்டர் போன் மெமரியில் பதிந்து, பத்து நிமிஷத்துக்கு ஒருதரம் அலர்ட் சவுண்ட் வைத்துக் கொள்ளலாம்.
செஸ் விளையாடுவது குழந்தைகளுக்குப் பொழுது போக்கு மட்டுமல்ல. அவர்களது மூளையில் யோசிக்கும் திறனையும், கிரகிக்கும் திறனையும் நிச்சயம் அதிகரிக்கும்.

Thursday, July 10, 2014

முண்டாசுப்பட்டி திரைவிமர்சனம் (Mundasupatti Tamil movie review)

அன்புள்ள நண்பர்களே!!
   வணக்கம். நலம்தானே? நீண்ட இடைவெளிக்கு பின் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. சிலப் படங்கள் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும். சிலப் படங்கள் சிரிக்க மட்டும் வைக்கும். அந்த வரிசையில் சிரிக்க வைக்கும் படந்தாங்க இது. வாங்க முண்டாசுப்பட்டிக்கு போகலாம். ஹி ஹி வாங்க முண்டாசுப்பட்டி படத்துக்கு போகலாம்.
  1982 ல நடக்குற ஒரு காமெடி கலந்த காதல் கதைதாங்க இது. கோபி (விஷ்ணு விஷால்) புகைப்படம் எடுப்பவர். அவருடைய உதவியாளர் அழகுமணி( காளி வெங்கட்). இவர்கள் இருவரும் ஒரு பள்ளிக்கு புகைப்படம் எடுத்துக் கொடுக்க போகிறார்கள். அனைத்து மாணவிகளும் படம் எடுக்க செல்கிறார்கள்.  கோபி ஏதோ எடுக்க பள்ளிக்குள் செல்ல, அங்கே ஒரு மாணவி கலைவாணி ( அதாங்க நந்திதா)  மட்டும் இருக்கிறார். அவரைப் பார்த்தவுடன் நம்ம கோபிக்கு காதல் வந்துருதுங்க ( நெனைச்சேன்னு நீங்க முனுமுனுக்கறது கேட்குது). புகைப்படத்தைக் கொடுக்க செல்லும் பொழுதுதான் தெரிய வருகிறது. கலைவாணிக்கு அடுத்த வாரம் திருமணம் என்பது. இவருடைய கடைக்கு ஒருவர் வந்து, எங்க ஊருக்கு வந்து சாகக் கிடக்கும் தலைவரை, இறந்த பிறகு புகைப்படம் எடுக்க கேட்கிறார்கள். இவர்களும் ஊருக்கு போகிறார்கள். அந்த ஊரைப் பொருத்தவரை உயிருடன் இருக்கும் யாரும் புகைப்படம் எடுத்துக் கொள்வதில்லை.  காரணம் 1947 ல்  ஆங்கிலேயர் ஒருவர் இவர்கள் ஊருக்கு வந்து புகைப்படம் எடுக்கும் பொழுது சிலர் இறந்து விடுகிறார்கள். அதற்க்கு முன்பே நோய் ஒன்று அந்த ஊரைத்தாக்கி இருப்பது தெரியாமல், இவர் புகைப்படம் எடுத்ததனால்தான் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.அதிலிருந்து இறந்தப் பிறகே ஒருவரைப் புகைப்படம் எடுக்க அனுமதிப்பார்கள்.



    கோபிக்கு அங்கே போனப் பிறகுதான் தெரிய வருகிறது ஊர்த்தலைவர் கலைவாணியின் தாத்தா என்று. அப்புறமென்ன ஊர்த்தலைவர் இன்னும் இறக்காத நிலையில், இறந்த பிறகு படம் எடுத்து கொடுத்து விட்டு செல்ல ஒப்புக்கொள்கிறார் கோபி. கலைவாணியின் கல்யாணமும் நிறுத்தி வைக்கப்படவே, இவரின் மனதை மாற்றி தன் காதலை சொல்ல நினைக்கிறார் கோபி. இந்த ஊரில் வானமுனி என்று விண்கல்லை கடவுளாக நினைத்துக் கும்பிடுகிறார்கள். அந்த விண்கல்லில் நிறைய முக்கியமான கனிமங்கள் இருப்பதை கண்டுபிடித்தாலும், அதைப்பற்றி ஆங்கிலேயர்களுக்கு எழுதாமல் விட்டுவிடுகிறார் புகைப்படம் எடுத்த வெள்ளைக்காரர்.
  
    வானமுனி சொல்படிதான் எல்லாம் நடக்கிறது. இதற்க்கிடையில் தாத்தா இறந்துவிட, புகைப்படம் எடுத்துக் கொண்டு ஊருக்கு வருகிறார்கள். வந்து பார்த்தப் பின்னாடிதான் தெரிய வருகிறது படம் சரியாக விழவில்லையென்று. புகைப்படம் இல்லையென்று சொன்னால் நிச்சயம் தண்டனைதான். முனிஷ்காந்த் என்ற சினிமா ஆசைக் கொண்டவரை வைத்து படம் எடுத்து கொடுத்து விடுகிறார்கள். முனிஷ்காந்தின் சித்தப்பாதான் இறந்தவர் என்று தெரிந்துவிட, இருவரும் மாட்டிக் கொள்கிறார்கள். வானமுனியின் கட்டளைப்படி என்ன தண்டனை கொடுத்தார்கள்? கலைவாணியிடம் காதலை சொன்னாரா? கலைவாணி ஏற்றுக்கொண்டாரா? இதையெல்லாம் தாங்க மீதிக்கதை.


    படத்தின் சிறப்பம்சம், கொஞ்சமும் முகம் சுழிக்க வைக்காத திரைக்கதை. காட்சிக்கு, காட்சி காமெடி. எந்த வித ஆபாச பாடல்களோ, காட்சிகளோ இல்லாதது. இதற்க்காக இயக்குநர் திரு ராம் அவர்களை பாராட்டுவோம். இவர் நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சி மூலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிலக் குளறுபடிகள், அழகுமணி கோபியை சில நேரம் வாங்க, போங்க என்பதும், சில நேரங்களில் வா, போ என்பதும் வித்தியாசம். சில காட்சிகள் கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் படம் கண்டிப்பாக மக்கள் மனத்தில் இடம் பிடிக்கும்.

   நடிகர் விஷ்ணு கதையறிந்து நடித்திருக்கிறார். ஆனால் என்ன அவர் 80களில் வரும் தலை முடிதான் இவருக்கு கொஞ்சம் சேரவில்லை. மற்றபடி தன் பங்கை நன்றாக செய்திருக்கிறார். நந்திதாவின் கிராமப்புற தவணி அழகை சொல்லியே ஆக வேண்டும். தனது பயந்த சுபாவம் ஆகட்டும், வெட்கப் படுவதாகட்டும் எல்லாமே அசத்தல். 80ல் என்றாலே ஞாபகத்திற்க்கு வருவது இளையராஜா இசை, தாவணி, டாலர் போட்ட செயின், மூட நம்பிக்கைகள் இன்னும் பல. இதையெல்லாம் நாம் இப்படத்தில் பார்க்கலாம்.

  இவர்களைத் தாண்டி இன்னும் முக்கியமான கதாபாத்திரங்கள் அழகுமணி மற்றும் முனிஷ்காந்த். இவர்கள் இருவரும் வரும் காட்சிகள் கண்டிப்பாக சிரிக்காமல் இருக்க முடியாது. இவர்களைத் தவிர பூனை சூப், வான முனி, சாமியார், மீசைக்காரர், அவரின் மனைவி, இருசக்கர வாகனம், பள்ளிக்கூடம், மூட நம்பிக்கை மிக முக்கியமாக புகைப்படக் கருவி(கேமரா) இவை அனைத்தும் மிக்கிய பங்கை வகிக்கின்றது.

 இசை சீன் ரோல்டன்(Sean Roldan). சிலப் பாடல்கள் இனிமையாக உள்ளது. குறிப்பாக இது என்ன, ராசா மகராசா பாடல்கள்.

மொத்தத்தில் முண்டாசுப்பட்டி, முழுக்க சிரிப்புப்பட்டி.

நீங்களும் படத்தைப் பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லுங்க.

மீண்டும் சந்திப்போமா?

நன்றி. வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!!