Showing posts with label திரைவிமர்சனம்-Tamil Movie Review. Show all posts
Showing posts with label திரைவிமர்சனம்-Tamil Movie Review. Show all posts

Wednesday, May 27, 2015

36 வயதினிலே திரை விமர்சனம்

அன்புள்ள நண்பர்களே!!!

வணக்கம்!! நலம்தானே? மீண்டும் உங்களை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
ஒரு சிலர் ஒரு சில விஷயங்களுக்காக பிரபலமானவர்களாக இருப்பார்கள். அதே போல் சில திரைப்படங்கள் பெண்களுக்கான திரைப்படங்களாக இருக்கும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும். அது மட்டுமில்லாமல் பெண்களை சுற்றி மாற்றத்தைக் கொண்டு வரும். அந்த வரிசையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம். கண்டிப்பா கண்டுபிடிச்சிருப்பீங்க ஆமாங்க 36 வயதினிலே படத்தை தாங்க பார்க்க போகிறோம்.

ஜோதிகா ஒரு ரெவுன்யு துறையில் பணிபுரியும் அரசு அதிகாரி. இவரது கணவர் ரஹ்மான் வானொலியில் பணிபுரிகிறார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தாலும் வசந்தி சராசரி குடும்பங்களில் இருக்கும் குடும்ப தலைவியைப் போலவே இருக்கிறார். வீட்டுத் தோட்டம் அமைத்து காய்கறிகளை பயிரிடுகிறார். இது இவரது கணவனுக்கு பிடிப்பதில்லை. கணவருக்கும், பெண் மிதிலாவிற்க்கும் ஐயர்லேண்ட் போயி, அங்கேயே படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனால் பொருளாதார சூழ்நிலைக் காரணமாக ஜோதிகாவும் வெளி நாட்டில் வேலை தேட நினைக்கிறார். ஆனால் இங்கே 36 வயது ஒரு பெரும் தடையாக இருக்கிறது. வேலை கிடைக்க வில்லை. இதற்க்கிடையில் ஜோதிகாவை கமிஷ்னர் பார்க்க விரும்புவதாக கூறுகிறார்கள். அங்கே இவருடைய பெண் மிதிலா ஜனாதிபதியிடம் ஒரு கேள்விக் கேட்க, அதை சற்றும் எதிர்பார்க்காத ஜனாதிபதி "உனக்கு யார் இந்த கேள்வியை சொல்லி கொடுத்தது?" இவரும் என்னுடைய அம்மாதான் எனறு சொல்கிறார். அதனால் அவர் ஜோதிகாவை சந்திக்க விரும்புகிறார். இதற்கிடையில் ரஹ்மான் ஒரு விபத்தில் ஒரு சிறுவன் மீது ஏற்றி அது கேஸ் ஆகி விடுகிறது. இதனால் ஜோதிகாவின் டிரைவிங் லைசென்ஸை உபயோகிக்கலாம் என்று பார்க்கிறார். அது காலாவதி ஆகி இரண்டு வருடம் ஆகி விட்டது(ஐயோ பாவம்) சொல்ல வேண்டுமா கணவன்களுக்கு, தை தக்கா தை தக்கா என்று குதிக்கிறார் ரஹ்மான். இப்படி ஒரு பக்கம் பிரச்சினை.
இதற்கிடையில் வீட்டுத் தோட்டத்தில் விளையும் காய்கறிகளில் 2000 பேருக்கு காய்கறி கேட்க, அனைத்து வீட்டு மொட்டை மாடிகளிலும் பயிரிடலாம் என்று முடிவு செய்ய அங்கேயும் பிரச்சினை. நிறைய காமெடி கலாட்டாவும் உண்டு.

மற்றொரு பக்கம் இவரையும், மாமனார், மாமியாரையும் மட்டும் விட்டு விடு கணவன், குழந்தையும் மட்டும் வெளி நாடு செல்ல திட்டமிடுகிறார். மிகவும் உடைந்து போகிறார் ஜோ(நாமும்தான்). அவர்கள் சென்றதும் ஜோ வின் தோழி அபிராமி இவரை சந்திக்க வருகிறார். இவர் மார்கெட்டிங் தொழிலில் அதிக அளவில் சாதித்து பெரிய நிறுவனத்திலும் இருக்கிறார். அவர் சந்தித்து சொல்லும் ஒவ்வொரு வாக்கியமும் நிச்சயம் பெரிய கைத்தட்டலை பெருகிறது. ஜோவை
தூக்கி நிறுத்துகிறதா? இவரது இயற்க்கை விவசாயம் ஜெயித்ததா? இவர் வெளி நாடு சென்றாரா? ஜனாதிபதியை சந்தித்தாரா? திரையில் பார்த்து விட்டு சொல்லுங்களேன்.

ஜோவிற்க்கு 8 வருடத்திற்க்கு பிறகான படம். நல்ல முதிற்ச்சி தெரிகிறது. ஒவ்வொரு இடத்திலும் தனியாக தெரிகிறார். நிச்சயமாக ஓங்கிச்சொல்லாம் இந்தியப் பெண்களின் பதிப்பு இவர் என்று. ஒரு தாயாக, மருமகளாக, மனைவியாக இப்படியாக பல பரிணாமங்களில் ஜொலிக்கிறார். பேருந்தில் வரும் சக பயணி ஒருவரிடம செய்யும் கலாட்டாவாகட்டும், மகளிடம் மன்றாடும் போது கோபத்தில் வா அயன் பாக்ஸ் வைச்சு மூஞ்சுல தேய்க்கிறேன் என்று சொல்வதாகட்டும் எல்லாமே தூள்.



ரஹ்மானும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால் மனிதன் எப்பொழுதுமே சிடுசிடு...

பாரட்ட வேண்டிய விஷயம் வசனங்கள்தான். குறிப்பாக எதற்கெடுத்தாலும் அழுவது இந்த தலைமுறையோடு முடியட்டும், பிரசவ வலியைவிட கொடுமையானது கணவன் அவமானப் படுத்துவதுதான், இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் நிறைய இடங்களில் கைத்தட்டலை வாங்குகிறார் விஜி.

தயாரிப்பு சூர்யா, இசை சந்தோஷ் நாரயணன், இயக்கம் ரோஷன். பல விஷயங்களில் நன்றாக இயக்கி இருக்கிறார்கல். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் இயக்கத்தில் கவனித்து இருக்கலாம்.

ஆனால் நிச்சயம் பாராட்ட வேண்டிய விஷயம் பெண்கள் எப்படி தங்கள் கனவுகளை தொலைக்காமல் திருமணத்திற்க்கு பிறகும் இருப்பது, மற்றும் இயற்கை விவசாயத்தை தூக்கி நிறுத்துவதாலும். நிச்சயம் ஓ போடலாம். படத்தை பார்த்து முடிக்கும் பொழுது அடுத்து அந்த சாதனை வரிசையில் நாம்தான் என்று நினைக்க வைக்கிறது.

தோழிகளே படத்தை உங்கள் கணவனோடு சேர்ந்து பாருங்கள். இன்னும் அர்த்தமுள்ளதாகிறது.
மொத்தத்தில் 36 வயதினிலே முற்பாதி இளமை, பிற்பாதி இயற்கை.
நன்றி!! வாழ்க வையாகம்!! வாழ்க வளமுடன்!!

Sunday, December 14, 2014

லிங்கா திரைவிமர்சனம் (Linga Tamil movie review)


அன்புள்ள நண்பர்களே!!!

     வணக்கம். நலம்தானே?  மீண்டும் ஒரு திரைவிமர்சனத்தோடு உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. ஒரு சில நடிகர்களின் படங்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தும் ரசிகர்கள் மத்தியில். அப்படியொரு நடிகரின் படம்தான் நாம் பார்க்க இருப்பது. என்ன நண்பர்களே கண்டுபிடித்து விட்டீர்களா? ஆம்!! நீங்கள் நினைப்பது போல் லிங்கா தாங்க நாம் பார்க்க போவது. வாங்க பார்க்கலாம்.

   சோலையூர் கிராமத்தில் உள்ள ஒரு அணையில் பழுது இருப்பதாக அந்த ஊரை சேர்ந்த எம்பி(MP) நாகபூஷன் (ஜகபதி பாபு) அரசுக்கு சொல்கிறார். ஆனால் அதை விசாரிக்க வரும் அரசு அதிகாரி அணையில் எந்த பழுதும் இல்லையென்றும் இன்னும் ஆயிரம் வருடம் நன்றாக இருக்கும் என்றும் எழுதி வைத்து விடுகிறார்.அதை மாத்தி எழுத சொல்லி, கேட்காமல் போக அவரை கொலை செய்து விடுகிறார் ஜகபதி பாபு. இறக்கும் தருவாயில் ஊர் தலைவரான விஸ்வநாத்திடம் கோயிலை திறங்க அப்பதான் இந்த ஊரை காப்பத்த முடியும் என்று சொல்லி விட்டு இறந்து விடுகிறார். எழுவது வருடங்களாக பூட்டி இருக்கும் கோயிலை திறக்க கோயிலையும், அணையும் கட்டிய ராஜா லிங்கேஷ்வரனின் பேரன் லிங்கா (எ) லிங்கேஷ்வரனை தேடுகிறார் ஊர் தலைவரின் பேத்தியும், பப்ளிக் டிவியின் தொகுப்பாளினியும் ஆன அனுஷ்கா .

  லிங்கா (ரஜினிகாந்த்) சின்ன சின்ன திருட்டுகளை செய்து கொண்டு கனவு வாழ்க்கையில் இருக்கும் லிங்காவுக்கோ தாத்தா பேரை சொன்னாலே பிடிப்பதில்லை அதனால் தன் பேரை லிங்கா என்று சுருக்கி கொள்கிறார். திருடி விட்டு ஜெயிலுக்கு செல்லும் அவரை ஜாமினில் எடுக்கும் அனுஷ்கா அவரை சோலையூர் கிராமத்திற்க்கு வந்து அந்த கோவிலை திறக்கச் சொல்லி வேண்டுகிறார். அவர் மறுத்து விடவே, அவர் திருடும் ஒரு பெரிய திருட்டில் போலிசிடம் இருந்து அவரை காப்பாற்றி ஊருக்கு கூட்டி செல்கிறார். அங்கே போனதும் தான் தெரிகிறது அது ஒரு மரகத லிங்கம் என்று. அதை திருடிக் கொண்டு ஊரை விட்டே ஓடி விடலாம் என்று தீர்மானிக்கும் பொழுது மாட்டிக் கொள்கிறார்கள். அதில் இருந்து அழகாக தப்பித்துக் கொள்கிறார் லிங்கா தனது சமயோசித புத்தியால். அப்பொழுதான் தன் தாத்தாவின் வாழ்க்கை முழுவதும் , அவர் செய்த தியாகங்கள் முதற்க் கொண்டு தெரிய வருகிறது.
  தாத்தாவாகிய லிங்கேஷ்வரன் எவ்வாறெல்லாம் ஃப்ரிடிஷ் அரசாங்காத்திடம் அல்லல் பட்டு அந்த அணையை கட்டினார், எப்படி அவ்வளவு சொத்துக்களை இழந்தார், ஏன் அந்த கோவில் பூட்டிக் கிடக்கிறது, ஏன் லிங்கா அரச குடும்பத்தில் பிறந்து  திருடுகிறார், ஜகபதி பாபு ஜெயித்தாரா? லிங்கா அந்த லிங்கத்தை திருடினாரா?   என்பதெல்லாம் மீதீ கதைங்கோ.

 புதிய கோப்பையில் பழைய தேன் மாதிரிதான் இந்த கதை. பல இடங்களில் பழைய ரஜினி படங்கள் சாயல்கள். ஒரு சில இடங்கள் நன்றாக இருக்கிறது. அதற்க்காக வேண்டுமானால் நாம் இயக்குநர் KS ரவிக்குமார் அவர்களை பாராட்டலாம். மத்தபடி படம் மிகவும் சாதரணமாக இருக்கிறது. இது சூப்பர் ஸ்டார் படம் அதுதான் நிற்க்கிறது. மற்றபடி புதிதாக எதுவும் இல்லை. ஒரு சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம் குறிப்பாக ஸ்பைடர் மேன் போல் ரஜினி பறந்து வரும் காட்சியை.



 ரஜினி அவர்களுக்கு இது அல்வா சாப்பிடுகிற மாதிரி படம்தான். இரட்டை வேடம் பேரன் ரஜினியைவிட தாத்தா ரஜினி அசத்துகிறார். இந்த படத்திலும் அவருடைய ஸ்டைல், புன்னகைக்கு குறைவில்லை அதே அசத்தல்.

 அனுஷ்கா நம் படங்களில் நடிகைகளுக்கு எவ்வளவு தரப்படுமோ அதே அளவு தரப்பட்டு இருக்கிறது. குறைவின்றி செய்து இருக்கிறார். இன்னொரு ஜோடி சோனாக்ஷி சின்ஹா , ஒரு சில இடங்களில் அபரீத அழகோடும், ஒரு சில இடங்களில் ஒட்டாத அழகோடும் திகழ்கிறார். இவருக்கு பின்னனி கொடுத்தவரை கிராமத்து தமிழ் பேசும் யாரையாவது போட்டிருக்கலாம். ஒட்டாமல் நிற்க்கிறது.


  சந்தானம், இவருது நகைச்சுவை சில இடங்களில் நல்ல ரசிப்பு. கருணாகரன் அதிக வேலை இல்லை ஆனால் அந்த மஞ்சள் பை, காமெடி சிறப்பு. அந்த நகை திருடும் காட்சி நல்ல கலகலப்பு.

ரஜினி படம் என்றாலே ஏராளமான நட்சத்திரக் கூட்டம் இருக்கும் . இந்த படத்திலும் அதற்க்கு குறைவில்லை.

இசை A R ரஹ்மான் அவர்கள். நிச்சயமாக பாடல்கள் நெஞ்சை தொடவில்லை என்பதே என் எண்ணம். ஆங்கிலப் பாடலா அல்லது தமிழ் பாடலா என்கிற திகைப்பு நமக்குள். லிங்கா சொத்தை யெல்லாம் இழக்கும் வேளையில் நாம் எதிர்பார்த்தது இன்னொரு நெஞ்சைத் தொடும் விடுகதையா இந்த வாழ்க்கை போன்ற பாடலை. அந்த உணர்ச்சி பெருக்கு இதில் இல்லை.
ஒரு வேளை கேட்க கேட்கத்தான் பிடிக்குமோ ? :)

 பாடல் வரிகள் வைரமுத்து மற்றும் மதன் கார்க்கி. வைரமுத்து அவர்களின் வரிகள் சில இடங்களில் நெஞ்சை அள்ளுகிறது.

வசனம் பொன் குமரன். சில வரிகள் மனத்திற்க்கு புத்துணர்வு தருபவை குறிப்பாக, வாழ்க்கையில் எதுவும் ஈஸி இல்ல முயற்ச்சி பண்ணா எதுவும் கஷ்டம் இல்ல போன்றவைகள்.

மொத்தத்தில் லிங்கா, முதற் பாதி தரிசனம், பிற்பாதி தூக்கம்.

ரஜினி படம் அதுவே சிறப்புதானே ரசிகர்களுக்கு :)

மீண்டும் சந்திப்போமா?

நன்றி!!! வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!!!

Sunday, November 30, 2014

காவியத்தலைவன் திரைவிமர்சனம் (Kaviyaththalaivan tamil movie review in Tamil)

அன்புள்ள தோழமைகளே!!
     வணக்கம். மீண்டும் ஒரு படத்தோடு உங்களை நான் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். நீண்ட இடைவெளிக்கு பின்பு உங்களை சந்திக்கிறேன். மிகுந்த எதிர்பார்ப்போடு, மிக வித்தியாசமான கதையோடு வந்திருக்கும் படம்தான் "காவியத்தலைவன்"

  அது ஒரு நாடக நிறுவனம். அந்த நாடக நிறுவனத்தை நடத்தும் குரு தவத்திரு சிவதாஸ் சுவாமிகள்(நாசர்). சிறு வயது முதலே அவரிடம் நேரடி சிஷ்யர்களாகிறார்கள் கோமதி நாயகம் பிள்ளை( பிரிதிவிராஜ்) மற்றும் காளியப்ப பாகவதர்(சித்தார்த்). இருவருக்கும் இடையே அண்ணன், தம்பி போன்ற பாசம் இருக்கிறது. அதோடு கலையின் மேல் வற்றாத காதலும் இருக்கிறது. நல்ல உழைப்பாளி மற்றும் திறமை இருந்தும் தன் குருவிடம் நல்ல பெயர் எடுக்க முடிவதில்லை கோமதி நாயகத்தால். ஆனால் தன் திறமை மற்றும் மாற்றி யோசிக்கும் வித்தையை வைத்து அனைவரின் மனதிலும் நீங்காத இடத்தை பிடிக்கிறார் காளியப்பா. இதனால் கோமதி நாயகத்திற்க்கு உள்ளுக்குள்ளேயே ஒரு பகை உணர்வு வந்து விடுகிறது. நாடகம் பார்க்க வரும் ரங்கம்மாள் இளவரசி மீது காதல் கொள்கிறார் காளியப்பா. இரவில் திருட்டுத்தனமாக சென்று இளவரசியை பார்த்து வருகிறார். இவரின் மேல் இருந்த முன் பகையை வைத்து இவரின் குருவிடம் இவரின் திருட்டுத்தனத்தை சொல்லி அவரை இனிமேல் நடிக்க முடியாதபடியும், அந்த பெண்ணை பார்க்கவும் முடியாதபடியும் சத்தியம் வாங்கிக் கொள்கிறார்கள். இவர்களின் நாடகத்தில் ஆண்கள் மட்டும் இருக்க, அனாதைகளாக ஒரு தாயும், மகளும் அடைக்கலம் ஆகிறார்கள். வடிவு (வேதிகா) மகளுக்கு நடிப்பில் அதிக ஆர்வம் இருக்க, வடிவையும் நாடகத்தில் சேர்க்க முடிவாகிறது. பார்த்ததுமே கோமதி நாயகம் காதலில் விழ, நாயகியோ காளியப்பா மேல் காதல் கொள்கிறார். இதனால் கோமதி நாயகத்தின் பகை உணர்வு அதிகமாகிறது.
   இதற்க்கு நடுவில் இளவரசி வயிற்று பிள்ளையோடு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வற, குடித்து விட்டு தன் குரு என்றும் பாராமல் காளியப்பா கண்டபடி பேசி விடுகிறார். இதனால் மரணப் படுக்கையில் விழும் குரு இறந்து விடுகிறார். இதன் பிறகு நாடக நிறுவனத்தை தான் எடுத்து நடத்துவதாக முடிவு செய்யும் கோமதி நாயகம், இனி தன் கூட்டத்தில் காளியப்பா இருக்க கூடாதென்று சொல்லி விடுகிறார். நாடகத்தை திறம்பட நடத்தி வெளி நாடுகளூக்கெள்ளாம் சென்று வருகிறான் கோமதி. இதற்க்குள் நாடெங்கும் சுதந்திர தாகம் அதிகரித்திருக்கிறது. நாடு திரும்பும் போது எதிர்பாராத சில விஷயங்கள் நடக்கிறது. அவை என்ன? நாடக கூட்டத்தைப் பிறிந்து காளியப்பா என்ன ஆனான்?, வடிவும், கோமதி நாயகமும் திருமணம் செய்து கொண்டார்களா? வடிவு காத்திருந்தாளா? காளியப்பாவின் சுதந்திர தாகம் என்ன ஆனது? இவையெல்லாம்தான் மீதிக் கதை.

  இந்த படத்தை இயக்கி இருப்பது வசந்த பாலன் அவர்கள். ஒரு வித்தியாசமான முயற்ச்சி. இந்த கதை சுதந்திரத்திற்க்கு முன்பு இருந்த காலத்தை ஒட்டி எடுக்கப்பட்டிருப்பது இன்னொரு சிறப்பு. எடுத்திருக்கும் முறை, சுதந்திர தாகம், அந்த வேகம் அனைத்தும் ருசி. எந்த கருத்தும் இல்லாத, ஒரு பொழுது போக்கு படம்.



  சித்தார்த், ஒரு துடிப்பான, கலகலப்பான நடிகனாக வந்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் அசத்துகிறார். இளவரசியிடம் காதல் கொள்வதாகட்டும், வடிவிடம் காதலை மறுப்பதாகட்டும், பிரிதிவிடம் தன் பாசத்தை அண்ணே என்று சொல்வதாகட்டும், குருவிடம் தன் கோபத்தை கொட்டுவதாகட்டும், மிகப்பெரிய சபாஷ் வாங்குகிறார்.

  பிரிதிவிராஜ் நடிகனாக தன் திறமையை காட்டும் பொழுதும், தன் பகை உணர்வை காட்டும் பொழுட்தும், தன் பழிவாங்கும் படலத்தை செய்யும் பொழுதும் தன் முத்திரையை பதிக்கிறார்.

 இரண்டு நாயகிகளும் தங்கள் பங்கினை குறைவின்றி செய்தாலும், வேதிகா நம் கண்களை நிறைக்கிறார்.



இதைத்தவிர நாசர், தம்பி ராமைய்யா, குயிலி, மன்சூர் அலிகான், பொன் வண்ணன் மற்றும் சிங்கம்புலி போன்றவர்கள் தங்கள் பங்கை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

இசை A R ரஹ்மான் அவர்கள். நிறைய பாடல்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாரு இருக்கிறது. காதிற்க்கும் நிறைவு தருகிறது. குறிப்பாக வாங்க மக்கா, ஏய் மிஸ்டர், யாருமில்லா தனிமையில் போன்றவை இனிமை. ஒரு சில பாடல்கள் எங்கேயே கேட்ட உணர்வையும் ஏற்படுத்த தவறவில்லை.

மொத்தத்தில் காவியத்தலைவன் , நிஜத்திலும் ஜெயிக்கிறார்.

மொத்த குழுவிற்க்கும் வாழ்த்துக்கள்!!!

மீண்டும் சந்திப்போமா?

வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!!!

Sunday, July 27, 2014

திருமணம் என்னும் நிக்காஹ் திரைவிமர்சனம் ( Thirumannam ennum nikka tamil movie review)

அன்புள்ள நண்பர்களே!!

வணக்கம். நலம்தானே? மீண்டும் ஒரு திரைவிமர்சனத்தில் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். எப்பொழுது ஒரு படம் வரும் பொழுதும் நமக்கு எதிர்ப்பார்ப்பு இருக்கும். அந்த வரிசையில் நீண்ட நாளைய எதிர்ப்பார்ப்பு படம்தாங்க இன்னைக்கி பார்க்கப் போவது. வாங்க படத்துக்கு போகலாம்.

விஜய ராகவன் (எ) அபு பக்கர் ( ஜெய்) ஒரு அய்யங்கார் ஆத்து பையன். என்ன பயங்கரமா தலை சுத்துதா ? கொஞ்சம் பொருமையா முழுசையும் படிங்க. ஒரு வேலையா கோயம்புத்தூர் போகணும் ஆனா பயணச் சீட்டு இல்லாத காரணத்தாலா , அபு பக்கர் சீட்டைப் பயன்படுத்தி போகிறார். அங்கே விஷ்ணு பிரியா (எ) ஆயிஷா ( நஸ்ரியா) வும் அதே ரயில் பெட்டியில் பயணிக்கிறார். ஆயிஷா என்கிற அவருடைய தோழிக்கு பதிலாக தொழில் தொடர்பாக செல்கிறார். பிரியா வைப் பார்த்ததும் ஜெய்க்கு மிகவும் பிடித்து விடுகிறது. ஆனால் அவர் எதுவும் பேசுவதில்லை. இவர்கள் இருக்கைக்கு பக்கத்தில் வந்து அமரும் ஒரு நபர் பிரியாவிடம் அதிகமாக வழிகிறார். உரிமையும் எடுத்துக் கொள்கிறார். அனைவரும் தூங்கும் நேரத்தில் பிரியாவை படம்பிடிக்க முயல்கிறார். அதை கண்டுபிடித்து போலிசிடம் ஒப்படைக்கிறார். அதனால் அவர் மீது பிரியாவிற்க்கு தனி மரியாதை வருகிறது.

Directed byAneesh
Produced byAascar Ravichandran
StarringJai
Nazriya Nazim
Heebah Patel
Jamal
Music byM. Ghibran
CinematographyLoganathan
Edited byKasi Vishwanath
Production
company
Aascar Films


சென்னை வந்ததும் தங்கள் வேலையை தொடர்ந்தாலும், இருவருக்கும் ஒருவர் நினைப்பாக இருக்கிறது. இருவரும் மாறி மாறி நினைத்துக் கொள்கிறார்கள் இஸ்லாமை சேர்ந்தவர் என்று. அதனால் இஸ்லாமை பற்றிய விவரங்களை சேகரிக்க ஆரம்பிக்கிறார்கள். இருவரும் மாறி மாறி பேசிக்கொண்டாலும் தாங்கள் இஸ்லாமை சேர்ந்தவர்கள் இல்லை என்று சொல்வதில்லை. பிரியாவிற்க்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்க, வீட்டில் தான் காதலிப்பதாக சொல்லி விடுகிறார். அதே நிலையில் ராகவனும் இருக்க அவரும் சொல்லி விடுகிறார். அப்பொழுதுதான் தெரிகிறது அவர்கள் இருவரும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்று. இருவருக்கும் ஏதோ நொருங்கியது போன்ற உணர்வு.


வீட்டில் இருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. அப்பொழுது இருவரும் நினைக்கிறார்கள், இந்த திருமணத்தை நிறுத்தி விடலாம் என்று. ஏன் திருமணத்தை நிறுத்தினார்கள்? மீண்டும் திருமணம் செய்து கொண்டார்களா?வேறு என்னென்ன பிரச்சினைகளை சந்தித்தார்கள் போன்றவைதான் மிச்ச கதை.

முதலில் நாம ஜெய் பத்தி சொல்லிடலாம். ரொம்ப அப்பாவியா முகத்தை வச்சிக்கிறதுக்கும் , நடிக்கிறதுக்கும் தனியா பயிற்ச்சி எடுக்கிறார்ன்னு நினைக்கிறேன். அப்படி ஒரு அப்பாவித்தனம். நஸ்ரியா என்று நினைத்துக் கொண்டு ஒவ்வொரு பர்தா போட்ட பெண் பின்னால் போய் பார்ப்பதாகட்டும், முன்ன, பின்ன தெரியாதவங்க கிட்ட நம்மை பத்தின விஷயத்தை பகிர்ந்துக் கொள்ளக் கூடாது என்று அறிவுரை வழங்குவதாகட்டும், இஸ்லாமை ஆர்வத்தோடு படிப்பதாகட்டும் அனைத்திலும் மதிப்பெண் பெற்றுவிடுகிறார்.


நஸ்ரியா கொள்ளை அழகுங்க. இஸ்லாமிய பெண்ணாகவும், பிராமினப் பெண்ணாகவும் பொருந்தும் முகம். சொல்லிட்டாப் போச்சு, செஞ்சுட்டாப் போச்சு என்று தன் துறுதுறு விழியாலும், பேச்சாலும் சுண்டி இழுக்கிறார்.


இப்ப கதைக்கு வருவோம். ரொம்ப சொதப்பல் இருக்கு கதையில. கொஞ்சம் தைரியமா முயற்ச்சி பண்ணி இருந்தார்னா கண்டிப்பா நல்ல படமாக இருந்திருக்கும். சில இடங்கள் சபாஷ் போட வைக்கும் அதே நேரத்தில், அய்யோ என்றும் சொல்ல வைத்து விடுகிறார். விறுவிறுப்பான படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, எதிர்பாராமல் யாரோ ரிமோட் கண்ரோலை நம்ம கையில் இருந்து பிடிங்கிக் கொண்டு வேறு படத்தை மாற்றியதைப் போல இருந்தது. நிச்சயமாக பாராட்டப் பட வேண்டிய படமாக இருந்திருக்கும் கொஞ்சம் திரைக்கதையை மட்டும் மாற்றி இருந்தால். முடிவாக என்ன சொல்ல வருகிறார் என்பதும் நமக்கு தெளிவாக இல்லை. முயற்ச்சியை பாராட்டுவோம். கொலு மற்றும் ஆவணி அவிட்டம் (ஸ்ரீ பெரும்பூதூர்), ரம்ஜான் (மலபார்) மற்றும் முஹரம் (ஹைட்ராபாத்) போன்ற பண்டிகைகள் உண்மையாகவே எடுத்திருக்கிறார்.

அடுத்து இசைக்கு வருவோம். இசை கிப்ரான்(Ghibran) பின்னணி இசையிலும், பாடலிலும் கலக்கி இருக்கிறார். ஜில்லென்ரா பாடல் மிக இனிமை.

அனைத்து துணை நடிகர்களும், நடிகைகளும் தங்களுக்கான பங்கை குறைவின்றி செய்திருக்கிறார்கள்.

மொத்தத்தில்  திருமணம் என்னும் நிக்காஹ் குழப்பம்.

நீங்களும் படம் பார்த்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.


மீண்டும் சந்திப்போமா?

வணக்கம். வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!!

Thursday, July 10, 2014

முண்டாசுப்பட்டி திரைவிமர்சனம் (Mundasupatti Tamil movie review)

அன்புள்ள நண்பர்களே!!
   வணக்கம். நலம்தானே? நீண்ட இடைவெளிக்கு பின் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. சிலப் படங்கள் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும். சிலப் படங்கள் சிரிக்க மட்டும் வைக்கும். அந்த வரிசையில் சிரிக்க வைக்கும் படந்தாங்க இது. வாங்க முண்டாசுப்பட்டிக்கு போகலாம். ஹி ஹி வாங்க முண்டாசுப்பட்டி படத்துக்கு போகலாம்.
  1982 ல நடக்குற ஒரு காமெடி கலந்த காதல் கதைதாங்க இது. கோபி (விஷ்ணு விஷால்) புகைப்படம் எடுப்பவர். அவருடைய உதவியாளர் அழகுமணி( காளி வெங்கட்). இவர்கள் இருவரும் ஒரு பள்ளிக்கு புகைப்படம் எடுத்துக் கொடுக்க போகிறார்கள். அனைத்து மாணவிகளும் படம் எடுக்க செல்கிறார்கள்.  கோபி ஏதோ எடுக்க பள்ளிக்குள் செல்ல, அங்கே ஒரு மாணவி கலைவாணி ( அதாங்க நந்திதா)  மட்டும் இருக்கிறார். அவரைப் பார்த்தவுடன் நம்ம கோபிக்கு காதல் வந்துருதுங்க ( நெனைச்சேன்னு நீங்க முனுமுனுக்கறது கேட்குது). புகைப்படத்தைக் கொடுக்க செல்லும் பொழுதுதான் தெரிய வருகிறது. கலைவாணிக்கு அடுத்த வாரம் திருமணம் என்பது. இவருடைய கடைக்கு ஒருவர் வந்து, எங்க ஊருக்கு வந்து சாகக் கிடக்கும் தலைவரை, இறந்த பிறகு புகைப்படம் எடுக்க கேட்கிறார்கள். இவர்களும் ஊருக்கு போகிறார்கள். அந்த ஊரைப் பொருத்தவரை உயிருடன் இருக்கும் யாரும் புகைப்படம் எடுத்துக் கொள்வதில்லை.  காரணம் 1947 ல்  ஆங்கிலேயர் ஒருவர் இவர்கள் ஊருக்கு வந்து புகைப்படம் எடுக்கும் பொழுது சிலர் இறந்து விடுகிறார்கள். அதற்க்கு முன்பே நோய் ஒன்று அந்த ஊரைத்தாக்கி இருப்பது தெரியாமல், இவர் புகைப்படம் எடுத்ததனால்தான் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.அதிலிருந்து இறந்தப் பிறகே ஒருவரைப் புகைப்படம் எடுக்க அனுமதிப்பார்கள்.



    கோபிக்கு அங்கே போனப் பிறகுதான் தெரிய வருகிறது ஊர்த்தலைவர் கலைவாணியின் தாத்தா என்று. அப்புறமென்ன ஊர்த்தலைவர் இன்னும் இறக்காத நிலையில், இறந்த பிறகு படம் எடுத்து கொடுத்து விட்டு செல்ல ஒப்புக்கொள்கிறார் கோபி. கலைவாணியின் கல்யாணமும் நிறுத்தி வைக்கப்படவே, இவரின் மனதை மாற்றி தன் காதலை சொல்ல நினைக்கிறார் கோபி. இந்த ஊரில் வானமுனி என்று விண்கல்லை கடவுளாக நினைத்துக் கும்பிடுகிறார்கள். அந்த விண்கல்லில் நிறைய முக்கியமான கனிமங்கள் இருப்பதை கண்டுபிடித்தாலும், அதைப்பற்றி ஆங்கிலேயர்களுக்கு எழுதாமல் விட்டுவிடுகிறார் புகைப்படம் எடுத்த வெள்ளைக்காரர்.
  
    வானமுனி சொல்படிதான் எல்லாம் நடக்கிறது. இதற்க்கிடையில் தாத்தா இறந்துவிட, புகைப்படம் எடுத்துக் கொண்டு ஊருக்கு வருகிறார்கள். வந்து பார்த்தப் பின்னாடிதான் தெரிய வருகிறது படம் சரியாக விழவில்லையென்று. புகைப்படம் இல்லையென்று சொன்னால் நிச்சயம் தண்டனைதான். முனிஷ்காந்த் என்ற சினிமா ஆசைக் கொண்டவரை வைத்து படம் எடுத்து கொடுத்து விடுகிறார்கள். முனிஷ்காந்தின் சித்தப்பாதான் இறந்தவர் என்று தெரிந்துவிட, இருவரும் மாட்டிக் கொள்கிறார்கள். வானமுனியின் கட்டளைப்படி என்ன தண்டனை கொடுத்தார்கள்? கலைவாணியிடம் காதலை சொன்னாரா? கலைவாணி ஏற்றுக்கொண்டாரா? இதையெல்லாம் தாங்க மீதிக்கதை.


    படத்தின் சிறப்பம்சம், கொஞ்சமும் முகம் சுழிக்க வைக்காத திரைக்கதை. காட்சிக்கு, காட்சி காமெடி. எந்த வித ஆபாச பாடல்களோ, காட்சிகளோ இல்லாதது. இதற்க்காக இயக்குநர் திரு ராம் அவர்களை பாராட்டுவோம். இவர் நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சி மூலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிலக் குளறுபடிகள், அழகுமணி கோபியை சில நேரம் வாங்க, போங்க என்பதும், சில நேரங்களில் வா, போ என்பதும் வித்தியாசம். சில காட்சிகள் கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் படம் கண்டிப்பாக மக்கள் மனத்தில் இடம் பிடிக்கும்.

   நடிகர் விஷ்ணு கதையறிந்து நடித்திருக்கிறார். ஆனால் என்ன அவர் 80களில் வரும் தலை முடிதான் இவருக்கு கொஞ்சம் சேரவில்லை. மற்றபடி தன் பங்கை நன்றாக செய்திருக்கிறார். நந்திதாவின் கிராமப்புற தவணி அழகை சொல்லியே ஆக வேண்டும். தனது பயந்த சுபாவம் ஆகட்டும், வெட்கப் படுவதாகட்டும் எல்லாமே அசத்தல். 80ல் என்றாலே ஞாபகத்திற்க்கு வருவது இளையராஜா இசை, தாவணி, டாலர் போட்ட செயின், மூட நம்பிக்கைகள் இன்னும் பல. இதையெல்லாம் நாம் இப்படத்தில் பார்க்கலாம்.

  இவர்களைத் தாண்டி இன்னும் முக்கியமான கதாபாத்திரங்கள் அழகுமணி மற்றும் முனிஷ்காந்த். இவர்கள் இருவரும் வரும் காட்சிகள் கண்டிப்பாக சிரிக்காமல் இருக்க முடியாது. இவர்களைத் தவிர பூனை சூப், வான முனி, சாமியார், மீசைக்காரர், அவரின் மனைவி, இருசக்கர வாகனம், பள்ளிக்கூடம், மூட நம்பிக்கை மிக முக்கியமாக புகைப்படக் கருவி(கேமரா) இவை அனைத்தும் மிக்கிய பங்கை வகிக்கின்றது.

 இசை சீன் ரோல்டன்(Sean Roldan). சிலப் பாடல்கள் இனிமையாக உள்ளது. குறிப்பாக இது என்ன, ராசா மகராசா பாடல்கள்.

மொத்தத்தில் முண்டாசுப்பட்டி, முழுக்க சிரிப்புப்பட்டி.

நீங்களும் படத்தைப் பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லுங்க.

மீண்டும் சந்திப்போமா?

நன்றி. வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!!



Sunday, April 13, 2014

நான் சிகப்பு மனிதன் திரைவிமர்சனம் ( Naan Sikappu manithan tamil movie review)

அன்புள்ள தோழமைகளே!

     வணக்கம். நலம்தானே? திரு ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த படம் நான் சிகப்பு மனிதன். மிகப்பெரும் வெற்றி அடைந்த படம் என்று கூட சொல்லாம். அதே பெயரில் மீண்டும் வெளி வந்துள்ள படம் நான் சிகப்பு மனிதன். வாங்க படத்தைப் பார்க்கலாம்.

   நான்கு நபர்கள் ரயிலில் குடிக்கிறார்கள். அவர்களை தட்டிக் கேட்கும் காவலதிகாரியை கொலை செய்கிறார்கள். இப்படி ஆரம்பிக்கிறது படம். இந்திரன் (விஷால்) தன் நண்பர்கள் ஜகன் மற்றும் சுந்தர் ராமுவுடன் சென்று ஒருவரிடம் துப்பாக்கி வாங்குகிறார். தன்னுடைய டைரியில் வேறு தட்டிக் கேட்கணும் என்று எழுதி வைத்திருக்கிறார். நாமும் இதுவும் ஏதோ பழி வாங்குகிற படம்னு நினைக்கத் தோன்றுகிறது. இந்திரன் தன்னுடைய டைரியில் இருக்கும் வாசகங்களை பார்த்து கொண்டே நம்மை பின்னோக்கி இழுத்து செல்கிறார்.

  இந்திரன் அம்மா ஒரு பள்ளியில் வேலை பார்க்கிறார். அங்கேதான் நம்ம குட்டி இந்திரனும் படிக்கிறார். இவருக்கு நார்கொலெப்சி(narcolepsy) என்று அழைக்கப்படும் ஒரு விதமான தூங்கும் பிரச்சினை சிறுவயது முதல் இருக்கிறது. ஏதாவது சத்தம் கேட்டாலோ அல்லது உணர்ச்சி வசப்பட்டாலோ இவர் எந்த இடம், எந்த நேரம் என்று பார்க்காமல் தூங்கி விடுவார். ஆனால் இவரால் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது நடக்கும் அல்லது கேட்கும் விஷயங்கள் மனதில் பதிந்து விடும். இதை எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாது என்று சொல்லிவிடுகிறார்கள் மருத்துவர்கள். பலப் பிரச்சினைகளுக்கு நடுவே வளர்ந்து படிப்பை முடிக்கிறார். இந்த பிரச்சினையால் வேலை கிடைக்கவில்லை. ஆனால் இந்த பிரச்சினையாலேயே முதல் சம்பளம் வாங்குகிறார். வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கிறார். இவர் டைரியில் எழுதி வைத்திருந்தபடியே ஒவ்வொன்றாக செய்து வரும் இவர் சாலையில் தனியாக நடக்க நினைக்கிறார். அதன்படியே செல்லும் பொழுது, சாலையில் தூங்கி விடுகிறார். இவரை பயன்படுத்தி ஒருவர் அனாதை பொணம் புதைக்கணும் என்று சொல்லி பிச்சை எடுக்க, அங்கே வரும் மீரா( லக்ஷ்மி மேனன்) பரிதாபப் பட்டு பணம் கொடுக்கிறார். அடுத்த நாளே உண்மை தெரிய வருகிறது. தூங்குவது ஒரு வரம் என்று சொல்ல, இந்திரனுக்கு காதல் வருகிறது.மீராவை மாப்பிள்ளை பார்க்க மறுநாள் வருகிறார்கள் என்று தெரிந்து வருந்துகிறார். சில கேள்விக் கேட்டு தனக்கு அந்த மாப்பிள்ளை ஒத்து வரவில்லை என்று சொல்லி விடுகிறார். இந்திரனும் இவரும் நண்பர்களாகி, பின் காதலர்களாகிறார்கள். இவர்கள் திருமணத்துக்கு மீராவின் தந்தை ஒத்துக் கொள்வதில்லை,ஏனெனில் இவரால் குழந்தைக்கு தந்தையாக முடியாது. உணர்ச்சி வசப்பட்டாலே இவர் தூங்கி விடுவார் என்பதால்.

 இவர்கள் இருவரும் வெளியே செல்லும் பொழுது, கார் ஒன்று இவர்கள் கார் மீது மோத அந்த அதிர்ச்சியில் இந்திரன் மயங்கி விடுகிறார். அந்த கார் இவர்களுக்கு வழி கொடுக்காமல் இருக்கிறது. இவர் கீழே இறங்கியதும் நான்கு நபர்கள் மீராவை தாக்கி, கற்பழித்து விடுகிறார்கள். இந்த சத்தங்கள் மட்டும் இந்திரனின் காதில் விழுகிறது. இதனால் மீரா கோமாவில் விழுகிறார். அந்த நான்கு நபர்கள் யார்? அவருக்கும் மீராவிற்க்கும் என்ன பகை? மீரா மீண்டு வந்தாரா? இந்திரன் என்ன செய்து கண்டு பிடிக்க போகிறார்? இவையெல்லாம் மிக அழகான திருப்பங்களுடனும், அதிர்ச்சிகளுடனும் சொல்லுவது தான் மிச்சக்கதை.

விஷாலின் மிக இயல்பான நடிப்பு இந்த படத்தின் பலம். அடிக்கடி தூங்குவதாகட்டும், இந்த குறையில் இருந்து எப்படி வெளிவருவது என்று யோசிப்பதாகட்டும், மீராவை லவ்வுவதாகட்டும் மிக அசத்தல்.
லக்ஷ்மி மேனனும் தன் பங்கை அழகாக செய்து இருக்கிறார். கோவத்திலும், அழகான காதலிலும் அடுத்த வீட்டு பெண்ணை பார்ப்பது போல் இயல்பு.
ஜகன் வரும் இடங்களில் நல்ல கலகலப்பு. அம்மாவாக வரும் சரண்யா சொல்ல வேண்டுமா? ஃப்ரண்டா? கேள் ப்ரண்டா? என்று கேட்பதாகட்டும், என் பையன் 25 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறான் என்று மறை முகமாக சொல்வதிலாகட்டும் அசத்தல்.

திரைக்கதை மிக அருமை. காட்சியை நகர்த்தி இருக்கும் விதமும், அதில் இருந்த விறுவிறுப்பும் அருமை. திரு.திருவை நாம் பாராட்டுவோம்.ஆனால் ஒரு சில இடங்களில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்திருக்கலாம். பின்னனி இசையை கொஞ்சம் குறைத்திருக்கலாம். சில நேரங்களில் பேசுவது கேட்காத அளவிற்க்கு இசை தூக்கலாக இருந்தது.ரவுடிகளுடன் கதாநாயகி போராடும் பொழுது, மழை பெய்கிறது. விஷாலுக்கு தண்ணீரில் தூக்கம் வருவதில்லை என்பது தெரிந்த நாயகி, அவரை மழையில் தள்ளி இருக்கலாம். இப்படி சின்ன சின்ன ஓட்டைகளை தவிர்த்திருக்கலாம்.

இசை ஜி.வி. பிரகாஷ். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். ஓ பெண்ணே!!, இதயம் உன்னை தேடுதே பாடல்கள் பரவாயில்லை.

மொத்தத்தில் நான் சிகப்பு மனிதன், கொஞ்சம் நிறமாற்றம்.

நீங்களும் படத்தை பார்த்து விட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். நன்றி
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!
 

Sunday, February 02, 2014

கோலி சோடா திரைவிமர்சனம்

அன்புள்ள நண்பர்களே!!

வணக்கம். நலம்தானே? மீண்டும் ஒரு திரைவிமர்சனத்தில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. எத்தனையோ திரைப்படங்கள் வந்தாலும், ஏதாவது ஒரு சிலப் படங்களே நம்மை உற்ச்சாகப் படுத்துகிறது ஒரு சினிமாவாக. அந்த வரிசையில் நாம இன்னைக்கி பார்க்கப் போற படம் கோலி சோடா. வாங்க படத்தைப் பார்க்கலாம்.

  நான்கு வயசுப் பசங்க சேர்ந்து ஒரு விஷயத்தை நமக்கு சொல்லும் படம்தாங்க இது. ஒரு கோயம்பேடு சந்தையில் மூட்டைத் தூக்கும், அனாதை இளைஞர்கள். இவர்கள் எந்த ஒரு இலட்சியமும் இல்லாமல் சம்பாதிப்பதை செலவு செய்கிறார்கள். நன்றாக ஒற்றுமையாக இருக்கிறார்கள்.  இவர்களுக்கு வழிகாட்டியாகவும், இவர்களுக்கு வேலை கொடுப்பவர் ஆச்சி. இவர்கள் இருவருக்கும் நல்ல பாசப் பிணைப்பும் இருக்கிறது. சந்தையில் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் நாயுடு என்பவர் செல்வாக்கான ஆள். இந்த நான்கு பேருக்கும் வேலைக் கேட்டு ஆச்சி நாயுடுவிடம் கூட்டிச் செல்கிறார். நாயுடு வேலை இல்லை, ஆனால் என்னிடம் கடை ஒன்று இருக்கிறது. அதை வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். நல்ல உணவகம் இல்லாததால், இவர்கள் அனைவரும் சேர்ந்து உணவகம் ஆரம்பிக்க முடிவெடுக்கிறார்கள்.

  இளைஞர்களும் மிக சவாலாக எடுத்து ஆச்சி டிபன் செண்டர் ஆரம்பிக்கிறார்கள். நன்றாக விற்பனை சூடுபிடிக்கிறது. நாயுடுவின் மச்சான் ஒரு நாள் கடைக்கி வர, அவன் அங்கேயே தண்ணி அடிக்க ஆரம்பிக்க இவர்களுக்கு வியாபரம் அடி வாங்குகிறது. இதை சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவிக்கிறார்கள். ஒரு நாள் சண்டையில் மச்சானை அடித்து விட, நாயுடுவிற்க்கும், இளைஞர் கூட்டத்திற்க்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டு நாங்கு பேரையும் வெவ்வேறு ஊர்களுக்கு கடத்தி விடுகிறார்கள். இவர்கள் நான்கு பேரும் இணைந்தார்களா? தேட நினைத்த தங்கள் அடையாளத்தை நாயுடுவை எதிர்த்து மீட்டார்களா? என்பதே மிச்ச கதை.

  பசங்க படத்துல நடித்த சிறுவர்களை இந்த படத்துல பெரியவங்களாக காட்டி இருக்கிறார்கள். நான்கு பேரும் தங்கள் நடிப்பை சிறப்பாக வெளிப்படித்தி இருக்கிறார்கள். ஆச்சியுடன் இருக்கும் பிணைப்பாகட்டும், இந்த வயதில் முக்கியமாக வரும் காதலாகட்டும் ( அது இல்லாம தமிழ் படமா?). தங்கள் தோழியாக வரும் ATM இடம் காட்டும் அன்பாகட்டும், நாயுடுவுடன் போடும் சண்டையாகட்டும், மச்சானுக்கு சமைக்கும் போது தவிப்பதாகட்டும் எல்லாமே தூள்.

 அது யாருங்க அந்த சோடா புட்டி. நல்ல தேர்வு. தன் தந்தையிடம் அடிவாங்கும் போதாகட்டும், ஒரு செடி ஒரு பூ என்று காதல் வசனம் பேசுவதாகட்டும், தன் நண்பர்களை ஒன்று திரட்ட பாடுபடுவ்தாகட்டும் தன் திறமையை நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறார் சீதா. சாந்தினி அழகான புன்னகயால் வசீகரிக்கிறார்.
 ஆச்சியாக வரும் சுஜாதா, அங்கங்கே நகைச்சுவையில் நம்மை சிரிக்க வைக்கும் மந்திரவாதியாக இமான் அண்ணாச்சி மற்றும் நம்ம பவர் ஸ்டாருங்கோ..... மற்றும் பலர் இருக்காங்கோ.

இதில் முக்கியமாக பாராட்டப் பட வேண்டிய இரண்டு விஷயங்கள் , பாண்டிராஜ் அவர்களின் வசனங்கள். 

"நாம அனாதையா பொறந்தது நம்ம தப்பில்ல.. ஆனா அனாதையாவே செத்தா அது நம்ம தப்புதான்..."
"நான் நல்லா படிக்கலனா நான் வருத்தப் படுவேன். ஆனா நான் அழகா பொறக்காதது என் தப்பா? நான் ஏன் வருத்தப் படனும்...."
"எங்க தொலைச்சமோ அங்கதான் தேடணும்..." இப்படி படம் நெடுகிலும் நல்ல வசங்கள்.

விஜய் மில்ட்டனின் நல்ல முயற்ச்சி. ரொம்ப ஆபாசம், இரட்டை அர்த்த வசனகள், குத்துப் பாட்டு இவை எதுவும் இல்லாத ஒரு இளமை முயற்ச்சி மற்றும் பரபரப்பான திரைக்கதை. வாழ்த்துக்கள்.
சின்ன சின்னதாய் சில சொதப்பல்கள் இருக்கு. சின்னப் பசங்கள வச்சு எடுத்த படம்ல... நாமும் சின்னதா மறந்துடலாம்.

மொத்தத்தில் கோலி சோடா, ஆரம்பம் முழுச் சீற்றம்!! பின்பாதி கேஸ் காலி!!

மீண்டும் சந்திப்போமா?

வணக்கம். வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!













Monday, November 25, 2013

பீட்சா-2 வில்லா திரைவிமர்சனம்


அன்புள்ள நண்பர்களே,

    வணக்கம். நலம்தானே? மீண்டும் உங்களை திரைவிமர்சனத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சில நேரங்களில் நாம் நினைப்பதுண்டு டூயட் இல்லாத, கண்ட வசனங்கள் இல்லாத, 100 பேரை ஒரு ஆள் அடித்து உதைப்பது இல்லாத, டாஸ்மார்க் இல்லாத படங்களை நாம் பார்க்கவே முடியாதா என்று. இத்தனை எதிர்பார்ப்பையும் நிறைவு செய்து, ஒன்றறை மணி நேரத்தில் முடியும் ஒரு படம் தாங்க இது. அட!!! என்று நீங்க ஆச்சர்யப் படுவது தெரியுது.வாங்க படத்தை பார்க்கலாம்.

   ஜெபின் ஒரு தொழிலதிபரின் மகன். எழுத்தாளனாக வேண்டும் என்று மிகவும் விரும்பும் ஒரு சராசரி இளைஞன். ஆனால் தந்தையின் உடல் நலக் குறைவினால் தொழிலை கவனிக்க ஆரம்பிக்கிறார். இதில் இவர் நஷ்டத்தை சந்திப்பதால் சொத்துக்கள் அனைத்தையும் இழக்கிறார். தந்தை(நாசர்) கோமாவில் விழுந்து இறந்து விடுகிறார். இவருக்கு ஆறுதல் சொல்ல வரும் குடும்ப நல வழக்கறிஞர், இவர் பெயரில் ஒரு பங்களா ஒன்று பாண்டிச்சேரியில் இருப்பதை சொல்கிறார். இவரின் தாய் இறந்தவுடன் அந்த வீட்டை விட்டு வந்து விட்டதாக கூறுகிறார். தன்னிடம் தன் தந்தை மறைத்து விட்டார் என்று தன் காதலியிடம்(சஞ்சிதா ஷேட்டி) சொல்லி புலம்புகிறார்.

  அந்த வீட்டிற்க்கு குடி பெயருகிறார். நாமும் அவரோடு ஆவலாக உள்ளே போகிறோம். மனதில் ஒரு திக் திக் திக் என்று ஆரம்பிக்கிறது. மிகவும் அழகாகவும் , ரசனையோடும் கட்டப்பட்டிருக்கிறது. நிறைய ஓவியங்கள் நிறைந்து இருக்கிறது. ஒரு ஓவியம் மட்டும் ஒரு புதிராக காட்சி தருகிறது. ஒரு நாள் ஜெபின் பியானோ வாசிக்கிறார். அப்பொழுது அதில் இருந்து ஒரு சாவியை கண்டு பிடிக்கிறார். அந்த ஓவியத்தை எடுத்து பார்க்கிறார். அந்த வீட்டின் அமைப்பை அப்படி ஓவியமாக வரைந்திருக்கிறார்கள். அந்த ஓவிய அமைப்பின்படி அவர் போகும் பொழுது அந்த ஓவியம் ஒரு அறையில் முடிகிறது. அவர் அந்த அறையை திறந்து பார்க்கும் பொழுது நிறைய ஓவியங்கள் கிடைக்கிறது.
இதில் என்ன விசேஷம் என்றால் அந்த ஓவியங்கள் முழுவதும் தன் வாழ்வில் நடந்த விஷயங்கள்தான் என்பது ஜெபினை மேலும் ஆச்சர்யப்பட வைக்கிறது. மேலும் அந்த ஓவியங்கள் சொல்லும் எதிர்கால விஷயங்கள் மேலும் அவரை பயமுறுத்துகிறது. அவர் இறந்துவிடுவார் என்றும் சொல்கிறது.

  இந்த வீட்டைப் பற்றி தன் தந்தை ஏன் சொல்லவில்லை என்றும், அவர் வீட்டை எவ்வளவு முயன்றும் ஏன் விற்க்க முடியவில்லை என்றும் ஜெபின் தன் வழக்கறிஞரிடம் விசாரிக்கிறார். ஆனால் அவருக்கும் இதற்க்கான காரணம் தெரியவில்லை.
இதனால் நண்பருடன் சேர்ந்து வீட்டின் சொந்தக்காரர் யார் என்று தேடுகிறார்கள். அதில் கிடைக்கும் பயங்கரமான தகவல்கள் பல அதிர்ச்சியோடு , சில உண்மைகளையும் சொல்கிறது. வீடுதான் காரணம் என்பதை கண்டு பிடிக்கிறார். இதற்க்கு முன்னால் இருந்த ஒரு பிரன்ச்காரர் ஒருவர் பிளாக் மேஜிக் பயன்படுத்தி வீடு முழுவதும் நெகடிவ் எனர்ஜியை நிரப்பினார். இதனால் இந்த வீட்டில் வசிக்கும் யாரும் உயிரோடு இருக்க முடியாது என்று தெரிந்து கொள்கிறார். நெகடிவ் எனர்ஜியை போக்கினாரா? தன் உயிரைக் காப்பாற்றி கொண்டாரா? என்பதே மீதிக் கதை.



ஒரு சிறு துரும்பை பிடித்துக் கொண்டு பெருங்கடலை கடந்திருக்கிறார் தீபன். முதலில் இயக்குநரின் துணிவை முதலில் பாராட்டுவோம். அறிவியலையும்,மூடநம்பிக்கையும் சேர்த்து நன்றாக அலசி இருக்கிறார். நிறைய புதிய விஷயங்களையும் நமக்கு சொல்லி இருக்கிறார். கோவிலுக்குள் செல்லும் பொழுது எப்படி உடை உடுத்தி செல்ல வேண்டும் என்பது முதல் இன்னும் பல விஷயங்கள் புதிதாக இருக்கிறது.

அசோக் செல்வம், சஞ்சிதா, நாசர் மற்றும் பலர் தங்களது பங்களிப்பை செவ்வனே செய்து இருக்கிறார்கள். இசை சந்தோஷ் நாரயாணன்.

படத்தை மிகவும் விறுவிறுப்பாகவும், அடுத்தது என்ன என்று எதிர்பார்க்க வைத்த வேகமும் படத்தின் பெரிய வெற்றி. அங்காங்கே சில குறைபாடுகள் இருந்தாலும் அது தெரியாத வண்ணம் நிறப்பப் பட்டிருக்கிறது.


மொத்தத்தில் பீட்சா-2 வில்லா, கல்லா களை கட்டும்.

நீங்களும் உங்கள் கருத்தை பதியுங்கள்.

மீண்டும் சந்திப்போமா? நன்றி!!

வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!! 

Friday, October 04, 2013

ராஜா ராணி திரைவிமர்சனம்


அன்புள்ள நண்பர்களே,

    வணக்கம். நலம்தானே? மீண்டும் ஒரு திரைவிமர்சனத்தில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. சில திரைப்படங்கள் வருவதற்க்கு முன்பே மிக மிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடும். ஏனெனில் நமது தொலைக்காட்சிகளில் வரும் திரைப்படங்கள் தொடர்பான விளம்பரங்கள் மற்றும் நடிகர்கள் பற்றிய கிசுகிசுக்கள் ஒரு காரணமாக இருக்கலாம். அப்படி ஒரு திரைப்படம்தான் ராஜா ராணி.
வாங்க படத்தை பார்க்கலாம்.

  நான்கு பேர் மூன்று காதல் இதுதாங்க ராஜா ராணி. ரெஜினா (நயன்தாரா) வும் ஜான்(ஆர்யா) வும் திருமணமாகும் காட்சியில் ஆரம்பிக்கிறது திரைப்படம். இருவருக்கும் பிடிக்காமல் நடக்கிறது திருமணம். இதனால் இருவரும் பேசிக் கொள்வதில்லை. ஜான் தினமும் குடித்து விட்டு வருவது ரெஜினாவிற்க்கு பிடிப்பதில்லை. மனவருத்தும் ஏற்படும் பொழுது ரெஜினாவிற்க்கு வலிப்பு நோய் வருகிறது. இவரை மருத்துவமனையில் சேர்க்கும் பொழுது மருத்துவர் கேட்கும் எந்த கேள்விக்கும் ஜானிற்க்கு பதில் தெரிவதில்லை. அதனால் மருத்துவர் இவருக்கு அறிவுரை கூறி விட்டு செல்கிறார். அதற்க்காக முதன் முறையாக ரெஜினாவிடும் பேசும் ஜான் மருத்துவருக்காகவாவது இந்த நோய் வந்த விவரங்களைக் கேட்கிறார். முன்கதையைக் கேட்ட ஜானிற்க்கு ரெஜினா மீது ஈடுபாடு வருகிறது. இதேப் போல் ஜானிற்க்கும் ஒரு முன்கதை இருக்கிறது. இதைக் கேட்ட பிறகு ரெஜினாவிற்க்கு ஜானின் மீது காதல் வந்து இருவரும் வாழ்வில் இணைந்தார்களா என்பதே ராஜா ராணி :)

  ஒரு மனிதனின் வாழ்வில் காதல் முக்கியமானதுதான். ஆனால் கிடைக்காத காதலுக்காக வாழ்வே சூனியமாகி விடாது என்பதே
ராணி சொல்லும் ராஜாவின் கதை, ராஜா சொல்லும் ராணியின் கதை.

  நயன்தாரா நீண்ட இடைவெளிக்கு பிறகு தலை காட்டி இருக்கும் படம் தான் இது. நடிப்பில் மிளிருகிறார். வலிப்பு வரும் காட்சியிலும், காதலனை பிரிந்த காட்சியிலும் சபாஷ் வாங்குகிறார்.

  ஜெய்யின் அப்பாவித்தனமான நடிப்பு நமக்கு புதியதில்லை. ஆனாலும் அவரின் அப்பாவித்தனமான முகமும், நண்பர்கள் மிரட்டும் பொழுது அழுவதும் மிகவும் ரசிக்கும் காட்சி. முன்பகுதியில் குழந்தைத்தனம், பின்பகுதியில் மிடுக்கு ரசிக்கும்படி உள்ளது.

  வழக்கமாக துடிப்போடும், துடுக்கோடும் நடிக்கும் ஆர்யா இதிலும் சளைக்க வில்லை. நயனின் அன்புக்கு ஏங்கும் காட்சியிலும், நஸ்ரியாவை துரத்தி துரத்தி காதல் செய்யும் பொழுதும் இன்னொரு காதல் மன்னன்.

  நஸ்ரியா அழகு பதுமையாக வந்து அனைவரையும் கொள்ளை கொள்கிறார். தன்னைப் பற்றி சொல்லி, பாசத்திற்க்காக ஏங்கி
"எங்க அம்மா மடியில படுத்ததே இல்ல, உன் மடியில படுத்துக்கட்டுமா" என்று கேட்கும் பொழுது நமக்கும் அந்த பாசத்தின் தவிப்பு தெரிகிறது. பிரதர், பிரதர் என்று சொல்லும் காட்சி ரசிக்கும் படி உள்ளது முதலில், பின்பு அதுவே முகம் சுளிக்க வைக்கிறது.



 சந்தானம் நகைச்சுவை கொஞ்சம் ரசிக்க வைக்கிறது. சத்யாராஜ் சில காட்சிகளில் நடித்தாலும், அப்பா,மகளின் நெருக்கத்தை சொல்லுகிறார்.

இயக்குநர் அட்லி இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.கதைக்காக செலவிட்ட நேரத்தை விட பீருக்காக அதிகம் செலவிட்டிருக்கிறார். அதிகமாக அனைவரையும் அழ வைத்திருக்கிறார் (கிளிசரின் செலவும் அதிகம்)

 சில வசனங்கள் ரசிக்கும் படி இருக்கிறது. "கல்யாணத்திற்க்கு முன்னாடி ஒருத்தன் குடிக்கிறான் என்றால் லவ் பெயிலியர், அதுவே கல்யாணத்திற்க்கு பின்னாடி ஒருத்தன் குடிக்கிறான்னா வாழ்க்கையே பெயிலியர்", "நம்ம கூட இருக்கறவங்க நம்மல விட்டு போயிட்டாங்கன்னா, நாமளும் கூடவே போகனும்ன்னு அர்த்தம் இல்ல. என்னைக்காவது ஒரு நாள் நாம ஆசப்பட்ட மாதிரி நம்ம லைப் ஒரு நாள் மாறும்"

 இசை ஜிவி பிரகாஷ், பின்னணி இசை ரசிப்பு, பாடல்களும் ஏற்புடையதாக இருக்கிறது.

 மொத்தத்தில் ராஜா ராணி அரியணை ஏறலாம்.

நீங்களும் படம் பார்த்து விட்டு கருத்தை சொல்லுங்களேன். மீண்டும் சந்திப்போமா?

வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!!