Wednesday, November 09, 2011
மேகமே! மேகமே!
மேகமே! நீ கலைந்து போவதுற்க்குள் மழையாகு
மொட்டே! நீ கருகிப் போவதுற்க்குள் கனியாகு
தென்றலே! நீ புயலாக மாறுவதற்க்குள் வீசிவிடு
அலையே! நீ சுனாமியாக மாறுவதற்க்குள் கரையைச் சேர்ந்து விடு
நண்பனே! நீ மண்ணாகும் முன் மனிதனாகு
மனிதா! நீ காலம் கரைவதற்க்குள் காரியமாற்று.
இளைய சமுதாயமே!
இளைய சமுதாயமே!
உருகி போவதற்க்கு நீ மெழூகுவர்த்தியா ?
காற்றில் கரைந்து போக நீ கற்பூரமா?
உதிர்ந்து போவதற்க்கு நீ பூக்களா?
ஓய்ந்து போவதற்க்கு நீ காற்றா?
பயமுறுத்த வரும் சுனாமியா நீ?
ஒரு பக்கம் இலட்சியத்தாலும்,
ஒரு பக்கம் விடாமுயற்சியலும்,
ஒரு பக்கம் தன்னம்பிக்கையாலும்,
ஒரு பக்கம் மனிதநேயத்தாலும் சூழப்பட்ட தீவு நீ!!!
அற்ப விசயங்களைப் பார்த்து பின் தங்கி விடாதே!!!
துணிந்து நில்!!
முடியும் தோழி!!!
முடியும் என்று மனம்
முனைப்பாய் இருக்கயில்
முடக்கம் எதற்க்கு
முனைந்து செயல் படுவோம்
இதோ மிக அருகில் வெற்றி!!
Saturday, August 27, 2011
படித்ததில் பிடித்தது........
ஆசிரியர் : அனுராதா ரமணன்
கதை : இரண்டாவது வாழ்க்கை
" இதோ ... இதுதான் சந்தோஷம். இந்த நிமிஷத்து இனிமை ...
நாளைக்கு எப்படியோ? இரண்டாவதாய் ஒரு வாழ்வு வரும்....
அது வரையில் மூலையில் முடங்கி கிடப்போம்
என்று விரக்தியுடன் இருக்காதே....
முதல் வாழ்க்கையை கூடுமான வரையில் செப்பனிடப் பார்.
பசுமைகளைத் தாங்கப் பழகு .... அதனால் வலுவிழக்கமாட்டாய். பலசாலியாவாய்... நாளை வரும் காலம் நமதில்லை....
கிடைத்த போது அனுபவி... கிடைத்ததை அனுபவி....."
நீ
ஒவ்வொரு விருட்சமும் மண்ணோடு போரடித்தான் மேலே வருகின்றது!
ஒவ்வொரு பூக்களும் தினம் தினம் போராடித்தான் மலர்கின்றது!
ஒரு ஈக் கூடத்தான் இந்த உலகத்தில் வாழ போராடுகின்றது!!
விதைத்தவனும் தூங்கலாம், ஆனால் விதைகள் தூங்குவதில்லை,
இந்த உலகை காண முட்டி மோதி பயிராகிறது, பயன் தருகின்றது!
உலக வரலாற்றில் போர்களங்கள் மாறுகின்றன,
போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது!!
கருவினிலேயே இலட்சம் அணுக்களோடு
போராடித்தான் வெளியே வருகிறோம் ..
போராடும் வரைதான் மனிதன்...
போராடு !! போராட்டத்தின் முடிவில் ஆயிரத்தில் ஒருவனாய் நீ
(Chillzee competition poem)
Wednesday, July 27, 2011
தண்ணீர் .......... தண்ணீர்...............
தண்ணீர் .......... தண்ணீர்...............
தண்ணீர் .... தண்ணீர்...... என்று படமெடுத்து விட்டார் திரு பாலசந்தர் அவர்கல்..
தண்ணீருக்காக ஒரு புது தேசத்தையே காட்டி விட்டார் திரு வைரமுத்து அவர்கள் ......
கோடைகாலத்தில் அனைவருமே மகிழ்ச்சியாக இருப்பதில்லை ஏனென்றால் கோடையின் வெப்பமும், வேர்வையும் ஆனால் மழைக்காலத்தில் .......
வெள்ளாமையின் உயிர் மூச்சு தண்ணீர்தான்!!!
ஆடு, மாடு போன்ற பேச்சற்ற ஜீவங்களில் இருந்து பேசுகின்ற மனிதன் வரை அனைத்தின் உயிர் நாடியும் தண்ணீர்தான்!!!
ஆறும், குளமும், ஏரியும் நிரம்பி வழிந்து அதன் சந்தோசத்தைக் காட்டுகின்றன....
நீர் நிலைகளிலோ மீன்களின் கொட்டம் நீரால் .....
கொக்குகளுக்கோ கொண்டாட்டம் மீனால் .......
குளத்தில் கதைப் பேசிக் கொண்டிருக்கின்றன அல்லியும், தாமரையும்......
மலர்களை கண்டதும் பெண்களின் உள்ளமும்,முகமும் விரிகிறது தாமரையாய்........
கன்னிப் பெண்களின் மலர்ந்த முகம் அனைவருக்கும் இன்பத்தை அளிக்கிறது.......
இப்படி மனிதர்களின் இயல்புகள் மகிழ்ச்சி அளிக்கின்றது....
கால்வாய்கள், ஓடைகளின் நீர் வரத்தால், ஓரங்களில் உள்ள புல்வெளிகள் முதல் தோட்டம் , தோப்புகள் அனைத்தும் ஆரவரித்து தாகம் தீர்க்கின்றது.....
விவசாயிகளுக்கோ ஆனந்த பரபரப்பு உடலெங்கும்....
மரங்களும் தங்களின் பணிகளை தொடங்குகின்றது அடுத்த மழைக்காக........
மரம் இதை மட்டுமா செய்கின்றது...
மனிதனின் இன்றியமையாத தேவைகளான உணவு, உடை இவற்றுக்கு மரங்கள்தான் காவல் தெய்வம்...
நீரின்றி அமையாது உலகம் என்ற வாக்குகேற்ப,
நீரை உலகுக்கு அளிப்பதில் பெரும் பங்கு வகிப்பது மரங்கள்தான்!!!
நீரை ஆவியாக்கி மேலே அனுப்பி கருமேகமாக மாற்றுகின்றது.....
எவ்வளவுதான் தொழில் நுட்பத்தில் வளர்ந்த நாடாக இருந்தாலும்
தண்ணீரை உற்பத்தி செய்ய முடியாது,
தண்ணீருக்காக கை ஏந்தித்தான் ஆக வேண்டும்
மழை நீரை சேமிப்போம், நீரை சிக்கனமாக பயன்படுத்வோம்!!
மனிதர்களைப் போல் தன்னை மட்டும் நினையாமல்,
உலகையே வாழ வைக்கும் மகாத்மாக்களான மரங்களை வளர்த்து மனித வளம் மற்றும் நாட்டின் வளத்தைக் காப்போம்!!
வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!!

Sunday, July 24, 2011
இளமையிலேயே கடமையாற்றுங்கள்
* யாருடைய குற்றங்களையும் காணாதே. பிறரது குற்றங்களைக் காணத்
தொடங்கினால் அதுவே கடைசியில்
உங்கள் இயல்பாகிவிடும்.
* மனித உடம்பு நிலையற்றது. இப்போது இருக்கிறது. ஆனால், அடுத்த கணம்
இல்லாமல் போய்விடும். அதற்குள் உன்னால் முடிந்த நல்ல செயல்களைச் செய்வது மேலானது.
* சாதனை ஆகட்டும். தவமாகட்டும். தீர்த்த யாத்திரை ஆகட்டும். பணம் சம்பாதிப்பது ஆகட்டும். எந்த நல்ல செயலையும் செய்வதென்று தீர்மானித்து விட்டால் அதை இளமையிலேயே செய்துவிடுங்கள்.
* ஆசையின் சாயலே நம் மனதில் அற்றுப் போக
வேண்டும். அப்போது தான் பிறவியில் இருந்து
விடுதலை கிடைக்கும்.
* நீங்கள் ஒரு நற்பணி செய்தால், அதனால் உங்கள்
பாவச்சுமை விலகும். தியானம், ஜபம், தெய்வீகச்
சிந்தனை இவற்றால் பாவம் குறைவதோடு புண்ணிய
பலன் நம்மை வந்தடையும்.
* யார் என்ன சொன்னாலும், மனதிற்குச் சரியென்று
பட்டதை துணிவோடு செய்து முடியுங்கள். நிச்சயம்
கடவுளின் துணை உங்களுக்கு கைகொடுக்கும்.
-சாரதாதேவியார்

Saturday, July 23, 2011
தெரிந்ததை சொல்லிக் கொடுங்கள்
நல்ல விஷயங்களைச் சொல்லும் போது கேட்பவருக்கும் தகுதி வேண்டும். தகுதி இல்லாதவனிடத் தில் நல்ல விஷயங்களைச் சொன் னாலும் பயனேதும் விளையாது. உலகியல் இன்பத்தின் மீதானஆசை, புறவுலக இன்பத்தையும், பந்ததத்தையும் தூண்டி விடுவதாக இருக்கும். வைராக்கியத்தின் (பக்தி) மீது வைக்கும் ஆசை நம்மை கட்டுக்களிலிருந்து விடுவிக் கும். உங்களுடைய துன்பங்களைக் கண்ணீருடன் இறைவனிடம் எடுத்துச் சொல்லுங்கள். மனச்சுமையை அவர்முன் இறக்கி வையுங்கள். உங்கள் எதிர்பார்ப்புகளை நிச்சயம் அவர் நிறைவேற்றி வைப்பார். இந்த உலகம் இறைவனுடையது. அவரது கையில் நாம் வெறும் பொம்மைகளே. அவர் நம்மை எப்படி வைத்தாலும், எங்கு வைத்தாலும் அதை நாம் திருப்தியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். விவேகமும், வைராக்கியமும் ஒவ்வொரு மனிதனுக்கும் கட்டாயமாக இருக்க வேண்டியவை. இவை இருந்தால் தான் இல்லறமும் சோபிக்கும். துறவறமும் சோபிக்கும். தானங்களில் சிறந்ததாக இருப்பது ஞானதானமே. தனக்குத் தெரிந்த நல்ல விஷயங்களை மற்றவர்களுக்கு வழங்கிடும் மகத்தான பண்பினை எல்லோரும் பெற
Friday, July 22, 2011
பொறுமை தான் சிறந்த பண்பு
* உண்மை என்பதற்காக முரட்டுத்தனமாக சொல்வதில் பயனில்லை. மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் சொன்னால் தான் சொல்பவருக்கும் மதிப்பு, உண்மைக்கும் மதிப்பு என்பதை உணருங்கள்.
* ஆன்மிக ஈடுபாடு கொண்டவர்கள் பின்பற்ற வேண்டிய குணங்களில் பொறுமை மிக முக்கியமானது. பொறுமையை விடச் சிறந்த பண்பு வேறு இல்லை.
* பெண்களுக்கு அழகு தருவது தங்கத்தால் ஆன
ஆபரணங்கள் என்று நாம் நினைக்கிறோம்.
உண்மையில் சிறந்த ஒரே ஆபரணம் நாணம் மட்டுமே. நாணத்தை இழந்தவள், பெண் என்ற தகுதியையே இழந்து விடுவாள்.
* மனதிற்கு அமைதி வேண்டும் என்று எண்ணுபவர்கள் முதலில் பின்பற்றவேண்டிய அடிப்படை குணம் பிறர் குற்றங்களைப் பற்றி எண்ணாமல் தன்னைப் பற்றி
அறியத் தொடங்குவது தான்.
* செல்வந்தர்கள் தங்கள் பணத்தைக் கொண்டு
ஆண்டவனுக்கும் அடியவர்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும். முடியாத ஏழைகளோ உடலுழைப்பால் தம்மால் முடிந்த சேவைகளைச் செய்ய வேண்டும்.
* போதுமென்ற மனநிறைவிற்கு நிகரான செல்வம் எதுவுமில்லை. சாதிக்க முடியாததையும், உண்மையான பக்தியின் மூலமாக நிச்சயம் சாதித்துக் காட்டலாம்.
- சாரதாதேவியார்
Thursday, July 21, 2011
நல்லது நடக்குமென நம்புங்கள்ஏப்ரல்
* ஒரு மனிதனுக்கு நல்லகாலம் வந்தால் மட்டுமே அவன் மனம் ஆன்மிக
விஷயத்தில் நாட்டம் கொள்ளும்.
* ஆசைகள் அனைத்தும் நம்மை விட்டு எப்போது விலகிச் செல்கிறதோ அந்தப்
பிறவிதான் நம்முடைய கடைசிப் பிறவியாகும்.
* கவலைப்படுவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. உலகைப் படைத்தவன் யாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறான். நல்லது நடக்கும் என்று பூரணமாக நம்பி அவனைச் சரணடையுங்கள்.
* நம்மை விட்டு என்றும் நீங்காத உறவு கடவுள் மட்டுமே. அவனுடைய கருணைக்காக மனம் ஒன்றி வழிபடுங்கள். நிச்சயம் பிரச்னைகள் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்று மகிழ்வீர்கள்.
* முதலில் ஒழிக்கவேண்டியது சோம்பல் மட்டும் தான். அதிகாலையில் எழுந்து தியானப்பயிற்சியில் ஈடுபடுவதால் அபரிமிதமான ஆற்றலை நாம் பெற்று விடமுடியும்.
*பணியிடத்தில் ஒவ்வொரு வேலையையும் தவமாக எண்ணி புனிதமான பணியாற்றுங்கள்.
* நாம் அனைவருமே தெய்வீகக்குழந்தைகள். வாசனை மிக்க மலர்களை ஆண்டவன் விரும்பி ஏற்பது போல, நம்மையும் கடவுள் அன்போடு அரவணைத்துக் கொள்வார்.

Wednesday, July 20, 2011
மீண்டும் பிறக்காத தருணங்கள்!!
இன்பத்தைத் தவிர வேறு அறியாத பள்ளிப் பருவம்....
பள்ளியின் இடைவேளையில் கிடைக்கும் தின்பண்டங்கள்..
பள்ளியின் இடைவேளையில் கிடைக்கும் தின்பண்டங்கள்..
பிடிக்கும் போது ஒட்டிய வண்ணத்துப் பூச்சியின் வண்ணம்...
மின்சாரம் இல்லாத இரவுகளில்
மணல் மேட்டில் நண்பர்களோடும்,
நிலவோடும் ஆடிய விளையாட்டு ....
குளு குளு குளியல் ஆற்றிலே ,
சுடச் சுடச் உணவு ஆற்றங்கரையிலே ....
பூ மலரும் தருணம் .....
புல்லின் நுனியில் சிரித்துக் கொண்டிருக்கும்
காலைப் பனித்துளி ....
மழலையின் குறும்பு சிரிப்பு ....
ஊர் அடங்கிய வேளையில் , மெல்லியதாக கேட்க்கும் பாடல்.....
தெய்வத்தின் சந்நிதானத்தில் கிடைக்கும் மனஅமைதி......
அவசர நேரத்தில் செய்த உதவிக்காக பெற்ற கண்ணீரும், புன்னகையும்......
குழந்தையின் எச்சில் ஒழுகும் முத்தம்.....
தாயின் கதகதப்பில், குழந்தையாக மடியில் உறங்கிய கவலை மறந்த உறக்கம்....
மீண்டும் பிறக்குமா?

சோம்பேறித்தனம் கூடாது
* எப்போதும் வேலையில் ஈடுபட்டிருங்கள். மனத்தைச் சிதறவிடாமல் ஒருமைப்படுத்தி ஏதாவது ஒரு வேலையைச் செய்யுங்கள். இப்படித் தொடர்ந்து ஒரு வேலையில் மனம் ஈடுபடும் போது, அது இரண்டு நிலைகளில் செயல்பட்டு நம்மை அழைத்துச் செல்கிறது.
* முதலாவது நிலையில் எப்போதும் சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபட்டிருப்பதால், கெட்ட எண்ணங்கள் மனதில் தோன்றாது. சோம்பித் திரியும்போதுதான், மனத்தில் எல்லாத் தீய எண்ணங்களும் தோன்றும்.
* இரண்டாவது நிலையில், செயல்புரிவதன் மூலம் கர்மத்தளையை விலக்க முடியும். வேலையில் முழுமையாக ஈடுபடும்போது படிப்படியாக மனதில் வைராக்கியம் உதயமாகும்.
* சிறிய வேலையாயினும், பெரிய வேலையாயினும் அதை முழுமனதோடு அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யுங்கள். விரைந்தோடும் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் இறைவனுக்கு அர்ப்பணிப்பாக்குங்கள்.
* காலையிலும், மாலையிலும் சிறிது நேரமாவது பிரார்த்தனை, ஜபம், தியானம் செய்யுங்கள். அப்போது தான் நம் எண்ணங்கள், பேச்சு, செயல் அனைத்தும் உயர்ந்தவையாக நம்மை மேல்நிலைக்கு இட்டுச் செல்பவையாக அமையும்.
- சாரதாதேவியார்
Subscribe to:
Posts (Atom)