Wednesday, July 20, 2011

மீண்டும் பிறக்காத தருணங்கள்!!

இன்பத்தைத் தவிர வேறு அறியாத பள்ளிப் ப‌ருவ‌ம்‍‍‍‍‍....
பள்ளியின் இடைவேளையில் கிடைக்கும் தின்பண்டங்கள்..
பிடிக்கும் போது ஒட்டிய வண்ணத்துப் பூச்சியின் வண்ணம்...

மின்சாரம் இல்லாத இரவுகளில்
மணல் மேட்டில் நண்பர்களோடும்,
நிலவோடும் ஆடிய விளையாட்டு ....

குளு குளு குளியல் ஆற்றிலே ,
சுடச் சுடச் உணவு ஆற்றங்க‌ரையிலே ....

பூ ம‌ல‌ரும் தருணம் .....

புல்லின் நுனியில் சிரித்துக் கொண்டிருக்கும்
காலைப் ப‌னித்துளி ....

ம‌ழலையின் குறும்பு சிரிப்பு ....

ஊர் அட‌ங்கிய‌ வேளையில் , மெல்லிய‌தாக கேட்க்கும் பாட‌ல்.....

தெய்வ‌த்தின் சந்நிதான‌த்தில் கிடைக்கும் ம‌னஅமைதி......

அவ‌ச‌ர நேரத்தில் செய்த உதவிக்காக பெற்ற கண்ணீரும், புன்ன‌கையும்......

குழந்தையின் எச்சில் ஒழுகும் முத்த‌ம்.....
தாயின் க‌த‌க‌தப்பில், குழந்தையாக ம‌டியில் உறங்கிய‌ க‌வ‌லை ம‌றந்த உறக்கம்....

மீண்டும் பிறக்குமா?

No comments: