Wednesday, July 27, 2011

தண்ணீர் .......... தண்ணீர்...............

தண்ணீர் .......... தண்ணீர்...............

தண்ணீர் .... தண்ணீர்...... என்று படமெடுத்து விட்டார் திரு பாலசந்தர் அவர்கல்..
தண்ணீருக்காக ஒரு புது தேசத்தையே காட்டி விட்டார் திரு வைரமுத்து அவர்கள் ......

கோடைகாலத்தில் அனைவருமே மகிழ்ச்சியாக இருப்பதில்லை ஏனென்றால் கோடையின் வெப்பமும், வேர்வையும் ஆனால் மழைக்காலத்தில் .......

வெள்ளாமையின் உயிர் மூச்சு தண்ணீர்தான்!!!

ஆடு, மாடு போன்ற பேச்சற்ற ஜீவங்களில் இருந்து பேசுகின்ற மனிதன் வரை அனைத்தின் உயிர் நாடியும் தண்ணீர்தான்!!!

ஆறும், குளமும், ஏரியும் நிரம்பி வழிந்து அதன் சந்தோசத்தைக் காட்டுகின்றன....

நீர் நிலைகளிலோ மீன்களின் கொட்டம் நீரால் .....

கொக்குகளுக்கோ கொண்டாட்டம் மீனால் .......

குளத்தில் கதைப் பேசிக் கொண்டிருக்கின்றன அல்லியும், தாமரையும்......

மலர்களை கண்டதும் பெண்களின் உள்ளமும்,முகமும் விரிகிறது தாமரையாய்........

கன்னிப் பெண்களின் மலர்ந்த முகம் அனைவருக்கும் இன்பத்தை அளிக்கிறது.......

இப்படி மனிதர்களின் இயல்புகள் மகிழ்ச்சி அளிக்கின்றது....

கால்வாய்கள், ஓடைகளின் நீர் வரத்தால், ஓரங்களில் உள்ள புல்வெளிகள் முதல் தோட்டம் , தோப்புகள் அனைத்தும் ஆரவரித்து தாகம் தீர்க்கின்றது.....

விவசாயிகளுக்கோ ஆனந்த பரபரப்பு உடலெங்கும்....

மரங்களும் தங்களின் பணிகளை தொடங்குகின்றது அடுத்த மழைக்காக........
மரம் இதை மட்டுமா செய்கின்றது...

மனிதனின் இன்றியமையாத தேவைகளான உணவு, உடை இவற்றுக்கு மரங்கள்தான் காவல் தெய்வம்...

நீரின்றி அமையாது உலகம் என்ற வாக்குகேற்ப,
நீரை உலகுக்கு அளிப்பதில் பெரும் பங்கு வகிப்பது மரங்கள்தான்!!!

நீரை ஆவியாக்கி மேலே அனுப்பி கருமேகமாக மாற்றுகின்றது.....

எவ்வளவுதான் தொழில் நுட்பத்தில் வளர்ந்த நாடாக இருந்தாலும்
தண்ணீரை உற்பத்தி செய்ய முடியாது,
தண்ணீருக்காக கை ஏந்தித்தான் ஆக வேண்டும்

மழை நீரை சேமிப்போம், நீரை சிக்கனமாக பயன்படுத்வோம்!!
மனிதர்களைப் போல் தன்னை மட்டும் நினையாமல்,

உலகையே வாழ வைக்கும் மகாத்மாக்களான மரங்களை வளர்த்து மனித வளம் மற்றும் நாட்டின் வளத்தைக் காப்போம்!!

வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!!




No comments: