அன்பை வெளிப்படுத்துவதில் வற்றாத நைல் நதி நீ!
துன்பத்தில்,"ஏம்மா என்னை பெற்றெடுத்தாய்
என்று கேட்கும் போதெல்லாம்
நான் சாதிக்க பிறந்தவள்"
என்று என்னையே எனக்கு உணர்த்தியவள் நீ!
பிரச்சனைகளை கண்டாளே கூட்டுப்புழுவாய் சுருங்கும் என்னை,
உனக்கும் சிறகு வரும், வண்ணங்கள் வரும்
என்று வசந்தத்தை காட்டி பட்டாம்பூச்சியாய் மாற்றியவள் நீ!
மகிழ்ச்சியிலும்,கவலையிலும் நான் தேடும் தேவதை நீ!
வெவ்வேறு முகம் காட்டினாலும் நான்
விரும்பும் அன்பு முகம் கொண்டவள் நீ!
எத்தனை கோபம் கொண்டு பேசினாலும்,
அடுத்த நிமிடமே வெள்ளைக் கொடி காட்டும் சமாதானப் புறா நீ
இரவில் கசியும் நிலா வெளிச்சம் போல்
அன்பை மட்டுமே அள்ளித்தரும் அட்சய பாத்திரம் நீ!!
எப்போதும் பிரியாமல் இருக்கும் பிரியமான தோழி நீ!!
3 comments:
nalla iruku :)
Nandri Hariharaselvam :)
Ranjani varugaikku Nandri. :)
Post a Comment