அன்பு நண்பர்களே!!!
வணக்கம்!! சுகம்தானே?
மீண்டும் பீட்சா திரைவிமர்சனத்தில் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
திரைப்படங்களில் பலவகை. அவற்றில் இது வித்தியாசமான முயற்சி. பாராட்டுக்குரியது.
எத்தனைக் காலம்தான் நாமும் 100 ரௌடிகளை ஒரு ஹீரோ பொலந்து கட்டுவதயும், மரத்தை சுத்தி சுத்தி டூயட் பாடுவது மட்டும் பார்த்து ரசிப்பது சொல்லுங்கள். தமிழ் சினிமா மாறத் தொடங்கி விட்டது. அதற்க்கான இந்த முயற்சியை நாம் பாராட்ட வேண்டும்.
சாதாரண பீட்சா மையத்தில் வேலை செய்யும் நபராக விஜய் சேதுபதி(மைக்கேல்-கதாபாத்திரத்தின் பெயர்) நடித்துள்ளார். இவர்தான் படத்தின் கதாநாயகன். நாயகி ரெம்யாவும்(அனு-கதாபாத்திரத்தின் பெயர்) இவரும் ஒரு வீட்டில் வசித்து வரும் காதலர்கள். எதிர்பாராமல் கற்பவதியாகிறார்(?). அதனால் வீட்டிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள்.
ரெம்யா ஒரு மனநலம் சார்ந்த படிப்பை படித்தவர். அது மட்டுமல்லாமல், அதிகமாக பேய் மற்றும் கெட்ட சக்திகளை படிப்பது ,பேய் வைத்து கதையும் எழுதும் ஆற்றல் படைத்தவர். ஆனால் நம்ம ,மைக்கேல் இவருக்கு நேர் எதிர். அப்படி பயந்த சுபாவம் கொண்டவர்.
இவர் ஒரு சமயம் பீட்சா வீட்டிற்க்கு விநியோகம் (Home Delivery) செய்ய போகிறார்.மைக்கேல் அந்த வீட்டில் மாட்டிக்கொள்கிறார். அந்த வீட்டில் நடக்கும் பயங்கரமான நிகழ்வுகள்தான் பீட்சா .
ஒவ்வொரு காட்சியையும் மிக மிக விறு விறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர்(Karthik Subburaj). இவருக்கு நாம் கைத்தட்டல்களை பரிசாக கொடுப்போம்.
காதல் இல்லையென்றால் கடத்தல், கொலை, கொள்ளை இதை மட்டும் வைத்து செய்யாமல் ஒரு வித்தியாசமான நோக்கோடு படத்தை நகர்த்தியிருக்கிறார்.
மிக மிக பாராட்டப்பட வேண்டுய ஒன்றாக நான் கருதுவது குத்துப்பாட்டும், ஒயின்சாப்பும், இரட்டை அர்த்த வசனங்களும் இல்லை.
நூறு பேரை அடித்து நொறுக்கும் காட்சி இல்லை, தேவை இல்லாத வசனங்கள் இல்லை.
ஆனாலும் குழந்தைகள் பார்க்க முடியாது ஏனென்றால், அவ்வளவு விறு விறுப்பு (thrilling). பயங்கரமான காட்சி அமைப்புகள்.
விஜய் சேதுபதி நடிப்பில் அசத்தி இருக்கிறார். ரெம்யா கண்களுக்கு மிதமான குளிர்ச்சி. அப்படி ஒரு துறு துறு அழகு .
பணம் மற்றும் அது சார்ந்த அனைத்தும் கவர்ச்சியானது. அதற்க்கு மயங்காதவர்கள் விதி விலக்குகள். நம் மூட நம்பிக்கைகள் மற்றும் பயம் போன்றவை எப்படி எதிராளிக்கு சாத்தியமாகின்றன என்பதே கதை.
பெண்களை பேராசை பிடித்தவர்கள் என்று சொல்கிறார்கள், அது இப்படத்தில் உண்மையாகிறது.
அழகான ஒரு வசனம் என்னை வசப்படுத்தியது, என் முதலாளி ரொம்ப நல்லவர் என்று மைக்கேல் சொல்வார், அப்பொழுது அனு நாமும் ரொம்ப நல்லவங்கதான் என்பார் ( ஆனால் அவர் தவறு செய்வார்). இப்படித்தான் இந்த உலகம் ஓடிகொண்டிருக்கிறதா?
எப்படியோ அரைத்த மாவை அரைக்காமல், காதில் புய்ப்பம் வைக்காமல் நம்மை வெளியே அனுப்புகிறார்கள்
Cast: Vijay Sethupathi, Remya Nambeesan
Director: Karthik Subburaj
Producer: C.V. Kumar
Music: Santhosh Narayanan
Cinematography: George William
Screenplay: Karthik Subburaj
Story/Writer: Karthik Subburaj
படத்தை சார்ந்த அத்தனைப் பேருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டும்.
நன்றி!!
மீண்டும் சந்திப்போம்!! வாழ்க வளமுடன் !!
-- அனு
Wednesday, November 14, 2012
பீட்சா---- திரைவிமர்சனம் (pizza movie review)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment