அன்பு நண்பர்களே!!
வணக்கம். உலகில் விலை மதிப்பிட முடியாத விஷயங்கள் நிறய்ய உள்ளன. அவற்றில் ஒன்றுதான் "தாய்ப் பால்". அதையும் ஒரு தாய் மற்ற குழந்தைகளுக்காக பகிர்ந்ததை நான் வியந்து உங்களுடன் பகிர்கிறேன். நீங்களும் வியப்பீர்கள் அதில் எனக்கு வியப்பில்லை :)
கிரேட் அலிசியா!
இங்கிலாந்தில் உள்ள கிரான்பரி என்ற இடத்தை சேர்ந்தவர், அலிசியா ரிச்மேன். 28 வயதே ஆன இந்த இளம்பெண் தாய்ப்பாலை தானமாக வழங்கி கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறார். வளரும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை காட்டிலும் சிறந்த உணவு இல்லை என்பதை விஞ்ஞானிகளே எடுத்துக்கூறும் சூழலில், இன்றைக்கு பல தாய்மார்கள் அழகு குறைந்துவிடுமோ என்று எண்ணி பெற்ற குழந்தைக்கு தாய்ப்பால் தரவே தயங்குகின்றனர்.
இப்படியான நிலையில், தன் மகனை பிரசவித்த முதல் நாளில் இருந்தே, அதாவது கடந்த ஆண்டு ஜுன் மாதம் தொடங்கி இந்த ஆண்டு மார்ச் வரைக்குமான 10 மாத காலத்தில் 11 ஆயிரம் அவுன்ட்ஸ் தாய்ப்பாலை, தாய்ப்பால் வங்கியில் தானமாக வழங்கியிருக்கிறார், அலிசியா. அதனை அந்த வங்கி பெற்று தாய்ப்பால் பருக வாய்ப்பில்லாத குழந்தைகளுக்கு வழங்கியிருக்கிறது. மிக அதிக அளவில் தாய்ப்பாலை தானமாக கொடுத்து கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றிருக்கிறார், இந்த சேவைப் பெண்!
வாழ்க வளமுடன். நன்றி : அவள் விகடன்.

No comments:
Post a Comment