Saturday, November 17, 2012

துப்பாக்கி திரைவிமர்சனம் (Thuppakki movie review)

அன்பு நண்பர்களுக்கு,

வணக்கம். நலம்தானே?

மீண்டும் ஒரு நல்ல படத்தில் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி :)
சிலப் படங்கள் வெளி வரும் பொழுது அல்லது பார்த்தப் பின்பு பரபரப்பை ஏற்படுத்தும்.ஆனால் இந்த படம் கொஞ்சம் விதி விலக்கு. அட ஆமாங்க துறு துறு துப்பாக்கி படம்தான் வரும் முன்பும் வந்த பின்பும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 காரணம் இருக்கு, இளைய தளபதி மற்றும் முருகதாஸ் அவர்களும் இணைந்து கலக்கி இருக்கும் படமே இது. எப்பொழுதும் பரபரப்பான படங்களை கொடுத்து பரபரப்பை ஏற்படுத்துபவர் முருகதாஸ். உதாரணம் ரமணா, கஜினி மற்றும் ஏழாம் அறிவு இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

அதேப்போல் விஜய் அவர்களும் சளைத்தவர் அல்ல. பலப்படங்கள் நெஞ்சை விட்டு நீங்காதவை. நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு வெற்றிப்படம். இதில் ஒரு வித்தியாசமான விஜயை பார்க்கலாம்.

நாட்டுப்பற்று மிக்க இராணுவ வீரராக நடித்திருக்கிறார். இவருக்கு இணையாக ஜிலு ஜிலுவென நம்ம காஜல் அகர்வால்தான். வில்லனாக விட்யுட் ஜம்வால்.
படத்தின் விஜய் அறிமுகம் வானத்தை பிளந்து வருவாரா? அல்லது தண்ணீரை பிளந்து வருவாரா? :) என்று பார்த்து கொண்டிருக்கும் பொழுது ஒரு வித்தியாசமான அறிமுகம். :)



ஜெகதீஷ்(விஜய்) ஊரில் இருந்து வந்ததும் நடக்கும் பெண்பார்க்கும் படலம் மிக மிக அருமை. நிஷா (காஜல்) வைப் பார்த்து தம்மடிக்கிற பொண்ணுதான் எனக்குப் பிடிக்கும் என்று கலாய்ப்பது முத்தாய்ப்பு.

நடிகர் ஜெயராம் ஜெகதீஷ் அதிகாரியாக வருகிறார். அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் கலகலப்பு.

சத்யன், ஜெகதீஷின் நண்பன். சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். ஆனால் இன்னும் கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கலாமோ?
ஜெகதீஷ் தீவிரவாதிகளை பந்தாடும் பொழுதும், நிஷாவிடம் கலாட்ட செய்து, காதலிப்பதிலும் அசத்துகிறார். நண்பர்களுடன் சேர்ந்து தீவிரவாதிகளை பின்தொடர்ந்து சென்று கொள்வது உச்சக்கட்ட பரபரப்பு.

தன் தங்கையை கடத்த அனுமதிப்பதிப்பதும், தன்னையும் தீவிரவாதிகளோடு இறக்க உயிரை பணயம் வைப்பதும் நல்ல நாட்டுப்பற்று.

"Sleepers cells" என்ற ஒரு பயங்கரத்தகவல் நெஞ்சை உலுக்குகிறது. இப்படத்தைப் போல தீவிரவாதத்தை வேரோடு ஒழித்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். அங்கங்கே சிலப்பல இடங்களில் கதை உதைக்குது, இருந்தாலும் பார்க்கலாம். :)

இப்படத்தில் எனக்கு பிடித்த வரிகளாக நான் நினைப்பது,

" ஆயிரம் பேரை அழிக்க நினைக்கும் அவர்களே உயிரைக் கொடுக்கும் பொழுது,
காப்பாற்ற நினைக்கும் நாம் கொடுக்கக் கூடாதா? "
என்று விஜய் கேட்கும் பொழுது நிஜம் நம்மையும் சுடுகின்றது.

ஹாரிஷ் ஜெயராஜ் இசை நெஞ்சில் பதியவில்லை என்றாலும் வெண்ணிலவே மற்றும் கூகுல் பாடல் ரசிக்க வைக்கிறது. கூகுல் பாடல் விஜய் பாடி இருப்பது ரசிகர்களுக்கு ரெட்டைக் கொண்டாட்டம்.



Directed byA. R. Murugadoss
Produced byKalaipuli S. Dhanu
Written byA. R. Murugadoss
StarringVijay
Kajal Aggarwal
Jayaram
Vidyut Jamwal
Sathyan
Music byHarris Jayaraj
CinematographySantosh Sivan
Editing byA. Sreekar Prasad
StudioKalaipuli Films International
Distributed byGemini Film Circuit


மொத்தத்தில் துப்பாக்கி முழுச் சீற்றம். டம்மி இல்லை :)

நீங்களும் உங்கள் கருத்தைச் சொல்லுங்களேன். மீண்டும் சந்திபோமா?
வாழ்க வளமுடன் !!

---------- அனு

No comments: