Sunday, January 20, 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா? திரை விமர்சனம்


அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம். நலம்தானே? என்ன பால் பொங்கி விட்டதா? :).

மீண்டும் பொங்கல் தினத்தன்று வெளியான படங்களைப் பற்றிய ஒரு சிறப்பு பார்வையில் உங்களை சந்திக்கிறேன். படம் வருவதற்க்கு முன்பே பெரும் எதிர்ப்பார்ப்பிற்க்கு உள்ளாகி இருந்த ஒரு படம். ஓ கண்டு பிடிச்சிட்டீங்களா? சரி படம் எப்படி இருக்குன்னு பாக்கலாம் வாங்க.
முக்கியமாக சொல்ல வேண்டிய விஷயம். இது நாட்டிற்க்கு ரொம்ப தேவையான முக்கிய பிரச்சினைகளைப் பற்றிய படமோ அல்லது கருத்து படமோ இல்லைங்க. முழுக்க நகைச்சுவையை மையமாக கொண்ட படம். இதில் மூன்று கதா நாயகர்களும், அவர்கள் சுற்றி வருவதற்க்கு ஒரு கதாநாயகியும், முக்கியமான நிறய கதாபாத்திரங்களும் உண்டு.

கலியபெருமாள்(சந்தானம்) செல்லப் பெயர் கேகே(கல்யாணம் முதல் கருமாந்திரம் வரை) :), பவர் குமார்(சீனிவாசன்), சிவா(சேது) இவர்கள் மூவரும் நண்பர்கள். பெண்கள் என்றால் அவ்வளவு உயிர்(அப்படி ஒரு ஜொள்ளூ). சிவாவின் வீட்டிற்க்கு அருகே உள்ள வீட்டிற்க்கு சௌமியா(விஷாகா) குடி வருகிறார். சௌமியாவைப் பார்த்ததும், மூன்று பேரும் காதலில் விழுகிறார்கள். இதனால் நண்பர்களுக்குள் போட்டியும், சண்டையும் வருகிறது. பின்பு சமாதானமாகி ஒரு முடிவிற்க்கு வருகிறார்கள். மூன்று பேரும் முயற்ச்சி செய்வோம். சௌமியா யாரை விரும்புகிறாறோ மற்றவர்கள் விலகிக் கொள்ள வேண்டும் என்று.

சௌமியாவின் மனதைக் கவர இவர்கள் எடுக்கும் முயற்சியே கண்ணா லட்டு தின்ன ஆசையா?.

இந்த படம் இன்று போய் நாளை வா என்ற கே. பாக்கியராஜ் படத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் என்ன வித்தியாசம் என்றால் பழைய மதுவை புது கோப்பையில் ஊற்றிக் கொடுத்திருக்கிறார்கள். சந்தானம் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்திருக்கிறார்.திரு மணிகண்டன் அவர்கள் இயக்கி இருக்கிறார்கள்.
பவர் வரும் இடங்களில் நம்மையும் அறியாமல் சிரிப்பு வருகிறது. சௌமியா மனதைக் கவர அவர் தந்தையிடம் நடனம் பயில வரும் பவர். அவர் சித்தப்பாவிடம் பாடல் பயில வரும் கேகே, சித்தியிடம் வீட்டு வேலை செய்யும் சிவா. இந்த இடங்களை சுற்றி கதை நகர்கிறது. சில இடங்கள் ரசிக்க வைத்தாலும், பல இடங்கள் நம்மை நெளிய வைக்கின்றன. உதாரணத்திற்க்கு இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் வயதானவர்களை அவன் , இவன் என்று சொல்லி சந்தானம் கலாய்ப்பது முகம் சுழிக்க வைக்கின்றது. கொஞ்சம் தவிர்த்து இன்னும் கொஞ்சம் நன்றாக நகைச்சுவையை சேர்த்திருக்கலாம்.
நிறய திறமையான கலைஞ்ஞர்களை வீணடித்து விட்டார்கள். கோவை சரளா, ராஜா, விடிவி கணேஷ், கணேஷ்கர், தேவதர்ஷினி, சிவசங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். எந்த கதாபாத்திரமும் மனதில் நிற்க்க வில்லை. சௌம்யா இன்னும் கூட நடிப்பில் அக்கரை செலுத்த வேண்டுமோ? நிறய விளப்பர படங்களில் பார்த்து, நமக்கு நெருங்கிய முகமாக தெரிகிறார். கவர்ச்சியை தாரளமாக வழங்கி இருக்கிறார்.

பவரை கலாய்க்கும் இடங்கள் உதாரணத்திற்க்கு நானாவது காமெடியன்னு தெரியும், ஆனா நீ இன்னும் காமெடியன்னு தெரியாமயே இருக்கிற பாரு அதுதான் பெரிய காமேடி என்று சந்தானம் கலாய்ப்பது மிக ரசிப்பு.
சிறப்புத் தோற்றமாக சிம்பு, கவுதம் மேனன் வருகிறார்கள். இசை எஸ் தமன் அவ்வளவாக நெஞ்சில் நிற்க்க வில்லை. லவ் லெட்டர் எழுத ஆசப்பட்டேன் ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றது.

தவிர்க்கவே முடியாமல் நிறய இடங்களில் பழைய படம் ஞாபகம் வருகிறது. Old is Gold னு சும்மாவா சொன்னாங்க.


Directed byK. S. Manikandan
Produced bySanthanam
Rama Narayanan
Written bySanthanam
K. S. Manikandan
StarringSanthanam
Srinivasan
Sethu
Vishaka
Music byS. Thaman
CinematographyBalasubramaniem
StudioHand Made Films
Sri Thenandal Films
Distributed byRed Giant Movies


கண்ணா லட்டு தின்ன ஆசையா? சர்க்கரைக் குறைவு :)
இன்னும் கொஞ்சம் சர்க்கரையை(நகைச்சுவையை) சேர்த்திருக்கலாம்.
மீண்டும் சந்திப்போமா? வாழ்க வளமுடன்






No comments: