Thursday, May 14, 2015

ஏசி வாங்கும் முன்இன்னொரு முறை யோசியுங்கள்!



(Thanks to Kumudam)
‘‘நைட்டு ஒரே புழுக்கம்... தாங்கவும் முடியல... தூங்கவும் முடியல... எவ்வளவு செலவானாலும் புது ஏசி வாங்கி வீட்ல மாட்டப்போறேன்!’’ இப்படி அங்கலாய்த்துக் கொள்பவரா நீங்கள்? அப்போது நீங்கள்தான் முதலில் இதைப் படிக்க வேண்டும்!



ஒரு காலத்தில் ஏர்கண்டிஷனர் சாதனம் ஆடம்பரப் பொருளாக இருந்தது. காலத்தின் தேவையில் அலுவலகங்கள் குளிர்சாதன வசதிக்கு மாறிவிட்டன. இதனால் ஏசியின் குளுமைக்கு பெரும்பாலான மக்கள் பழகிப்போனார்கள். வீட்டிலும் ஏசி பயன்படுத்துவது அதிகரித்தது. இங்குதான் பிரச்னையே ஆரம்பம். தொடர்ந்து ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட அறைகளில் அமர்ந்து வேலை செய்வதால் உடலியல் சார்ந்த பல பிரச்னைகளும் நோய்களும் ஏற்படுவதாக சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன. ஏசியால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், அதை எவ்வாறு தவிர்ப்பது எனவும் மருத்துவ நிபுணர்களிடம் உரையாடினோம்...

டாக்டர் கே.ராஜ்குமார்
(
சுவாச நோய்கள் சிறப்புமருத்துவர்)

‘‘
இன்று குளிர்சாதன வசதி என்பது மிகவும் இன்றியமையாததாக மாறிவிட்டது. ஏசியில் வரும் காற்றானது இயற்கையானது கிடையாது. இயற்கையான காற்றில் இருந்து ஈரப்பதத்தை எடுத்து, அதைப் பயன்படுத்திக் குளிர் காற்றாக கொடுக்கிறது. இன்னொரு புறம் அறையில் உள்ள வெப்பமான காற்றை வெளியேற்றுகிறது. இதற்குகுளோரோஃப்ளுரோ கார்பன்மூலப் பொருளாகப் பயன்படுகிறது. இது வெளியேற்றும் உஷ்ணக் காற்றால்தான் புவி வெப்பமடைதல் அதிகமாகி ஓசோன் ஓட்டையை அதிகப்படுத்துகிறது.

ஏற்கனவே ஒவ்வாமை பிரச்னை (அலர்ஜி) உள்ளவர்களுக்கு ஏசி காற்று பல பிரச்னைகளை ஏற்படுத்தும். கூருணர்ச்சி (Hyper Reactive) அதிகமாக உள்ளவர்களுக்கு உடலில் சொறி, அரிப்பு, மூக்கில் சளி ஒழுகுதல், காதில் அரிப்பு, கண் எரிச்சல் போன்றவை ஏற்படக்கூடும். அலர்ஜி உள்ளவர்கள் ஏசியில் இருந்து விலகி இருப்பதே நல்லது. குறைந்தது 3 மாதங்களுக்கு ஒரு முறை ஏசியிலுள்ள தூசி மற்றும் அழுக்குகளை முறையாகச் சுத்தப்படுத்த வேண்டும். இல்லையெனில், அவற்றில் லிஜினல்லா நிமோபிலியா என்ற பாக்டீரியா வளரும். இது ஏசியில் மட்டும் வளரக்கூடிய பாக்டீரியா. சுவாசப்பாதையில் இவ்வகை பாக்டீரியா பரவினால் கடுமையான நிமோனியாவை உருவாக்கும்.

சில வீடுகளில் விண்டோ ஏசியில் பின்பக்கம் புறாக்கள் வசிக்க ஆரம்பிக்கும். புறாக்களின் கழிவுகள் அதில் சேர்ந்துவிடும். இதில் பூஞ்சைகள் வளரும். கிரிப்டோகாக்கஸ் எனப்படும் பூஞ்சையானது மனித மூளையைத் தாக்கக் கூடியது. இந்தப் பூஞ்சையானது சுவாசப் பாதையையும் மூளையையும் தாக்கிக்ரிப்டோகாக்கல் மெனிஞ்சைட்டிஸ்எனும் ஆபத்தான நோயை உருவாக்கக் கூடியது.

எந்நேரமும் ஏசியில் அமர்ந்திருப்பவர்களுக்கு சூரிய ஒளியானது போதுமான அளவு கிடைக்காது. இதனால் வைட்டமின் டி குறைபாடு உருவாகும். இந்த வைட்டமின், கருவுறுதலில் ஆரம்பித்து இதயம், நுரையீரல் சீராக இயங்குவது வரை தேவையான ஒன்றாகும். இது கிடைக்காமல் போனால் எலும்புகள் பலவீனமடையும். மூட்டு வலி, முதுகு வலி போன்றவை எளிதாக வரும். இதற்காகத்தான் நம் முன்னோர் அதிகாலையில் சூரிய வணக்கம் செய்து வந்தனர். காலை 6 மணியில் இருந்து 7:30 மணி வரை உள்ள கதிரவனின் கதிர்களில், மனித உடலுக்கு அவசியமான வைட்டமின் டி கிடைக்கும். இந்த நேரத்தில் உடலில் சூரியனின் ஒளி படுமாறு நிற்பது அவசியம்.

ஏசிக்கு நேராக முகத்தை வைத்து உட்காரக் கூடாது. அப்படி உட்கார்ந்தால் சைனஸ் தூண்டப்படும். மூக்கடைப்பு, தலைவலி, காது அடைத்தாற்போல இருப்பது ஆகிய பிரச்னைகளை ஏற்படுத்தும். சிலருக்கு ஏசியின் குளிர்ந்த காற்று சுவாசப் பாதையை ரணமாக்கிவிடும். கூருணர்ச்சி அதிகமுள்ளவர்கள் ஏசியை முடிந்த அளவு தவிர்த்து விட வேண்டும்.

சிலர் (விண்டோ) ஏசியின் அருகிலேயே தலை வைத்து படுப்பார்கள். குளிர்ந்த காற்றானது இரவு முழுவதும் காதுக்குள் சென்று முக நரம்பை பாதிப்படையச் செய்துபெல்ஸ் பேல்சி’ (Bell’s palsy) என்னும் முகவாதத்தை உருவாக்கும். காலையில் எழுந்து கண்ணாடியில் முகம் பார்த்தால் வாய் ஒரு பக்கம் கோணிக் காணப்படும். ஏசியின் மிக அருகில் தூங்குவதைத் தவிர்த்து விட வேண்டும்.

வீட்டின் அருகே மரம், செடி, கொடிகளை வளர்த்து, காலையில் எழுந்து சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும். சூரிய ஒளி உடலில் படும்படி சில உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். மூச்சுப் பயிற்சிகளை முறைப்படி தினமும் செய்வது உங்களது வாழ்நாளைக் கூட்டும். அலர்ஜி பிரச்னை உள்ளவர்கள் அமிலத்தன்மை உடைய திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்கள் தவிர்த்து, மற்ற பழங்களை உண்ணலாம்.

இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்வதன் மூலம் ஏசியால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம். ஏசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏசி பகுதியில் வேலை பார்க்கும் நிர்பந்தம் உள்ளவர்கள், காதுகளில் ஏர் பிளக் அல்லது பஞ்சை வைத்து சமாளிக்கலாம். முடிந்த வரை முகத்தை ஏசிக்கு அருகில் வைக்காமல் தள்ளி அமர்ந்துகொள்ள வேண்டும்..."

‘‘
ஏசியில் அதிக நேரம் அமர்ந்திருப்பதால் சருமமானது எண்ணெய் பசை சுரப்பதை நிறுத்திவிடுகிறது. எண்ணெய் பசை திரவங்களும் வியர்வையும் சரியான முறையில் சுரந்தால்தான் சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்கும். இல்லாவிட்டால் சருமம் உலர்ந்து, வறண்டு விடும். ‘ப்ரீமெச்சூர்டு ஏஜிங்எனப்படும் வயதுக்கு முந்தைய மூப்புத் தோற்றம் ஏற்படும்.
ஏசியில் அதிக நேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு தலைமுடியும் உடைய ஆரம்பிக்கும். கூந்தலின் வலுவும் குறையும். சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும். ஏசியை முறையாக சுத்தம் செய்யாமல் பயன்படுத்துபவர்களுக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டு சருமம் பாதிக்கும். அலுவலகத்தில் ஒருவருக்கு காய்ச்சல், அம்மை அல்லது மெட்ராஸ் போன்ற நோய்கள் இருந்தால், அது மற்றவர்களுக்கும் எளிதில் பரவிவிடும்.

சிலருக்கு கண்களில் கண்ணீர் சுரக்காமல் உலர்ந்துவிடும். இவர்களுக்கு கண்களில் வலி, எரிச்சல் இருக்கும். ‘ஆர்ட்டிஃபிசியல் டியர்ஸ்’ (Artificial tears) எனப்படும் செயற்கை கண்ணீர் இப்போது கிடைக்கிறது. மருத்துவர் ஆலோசனையுடன் அதைப் பயன்படுத்தி, கண்கள் உலர்வதை சரிசெய்து கொள்ளலாம். சருமம் உலர்வதை தரமான மாய்ச்சுரைஸிங் க்ரீம் பயன்படுத்துவதன் மூலம் தடுக்கலாம். ஹையலுரானிக் ஆசிட் (Hyaluronic acid) எனும் முகத்தில் சுரக்கும் திரவமே முகத்தைப் பொலிவாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இந்த ஆசிட் அடங்கிய மாய்ச்சுரைஸிங் க்ரீம் இப்போது கிடைக்கிறது. மருத்துவர் ஆலோசனையுடன் அதைப் பயன்படுத்தி முகச்சுருக்கங்களைத் தவிர்க்கலாம்.

ஏற்கனவே சோரியாசிஸ், எக்சிமா போன்ற சரும நோய்கள் உள்ளவர்கள் ஏசியில் அதிக நேரம் அமர்ந்தால் நோய் இன்னும் தீவிரமாகும். இயற்கையான சூரிய ஒளியும், மாசு இல்லாத சுகாதாரமான காற்றும் நமது சருமத்துக்கு அவசியம் என்பதை மறந்துவிடக்கூடாது. அதனால், தேவைக்கு ஏற்பவே ஏசியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏசியை அதிக நேரம் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.”ஏசியில் அதிக நேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு தலைமுடியும் உடைய ஆரம்பிக்கும். கூந்தலின் வலுவும் குறையும். சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும்...
டாக்டர் எல்.ஆர்த்தி
(
சருமநல நிபுணர்)


Tuesday, April 28, 2015

நகர்ந்துகொண்டே இருங்கள்.....by Bharathi


  1. வீண்பேச்சு நமது ஆற்றலைக் குறைக்கும். மவுனம் ஆற்றலைப் பெருக்கும். ஆகவே, அவசியமில்லாப் பேச்சைத் தவிர்த்துவிடுங்கள். எப்பொழுதும் சிந்தித்த பிறகே பேச வேண்டும். அதே நேரத்தில், சிந்தித்ததையெல்லாம் பேசிவிடக் கூடாது. காரணத்தோடு சிந்தித்துக் கருத்தோடு பேசுவதற்குப் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
    வார்த்தைகளைவிட மவுனமே வலிமையானது. மொழி என்பது வெளியே இருந்து நாம் பெறுகின்ற பயிற்சி ஆனால், மவுனம் என்து உள்ளத்தில் இருந்து எடுக்கின்ற முயற்சியின் காரணமாகக் கிடைக்கின்ற எழுச்சி உள்ளத்தில் உண்டாகும் எழுச்சி, எல்லாவிதமான சவால்களையும் வெல்லுகின்ற ஆற்றலைக் கொடுக்கவல்லது. மனம் தான் ஆற்றலின் சுரங்கம். மனம் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும்போது, புதுப்புதுச் சிந்தனைகள் உங்களுக்குள் சிறகு விரிக்கும் அதன் காரணமாகச் சாதனை வளத்தின் முகவரி கிடைக்கத் தொடங்கிவிடும்.

    கூர்ந்து நோக்க வேண்டும்:

    புத்திசாலியாக இருப்பதற்கு எந்தக் காரியத்தையும் கூர்ந்து நோக்க வேண்டும்; ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். எதையும், மேலெழுத்துவாரியாகப் பார்க்கும்போது, அதிலிருந்து எதையும் கற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொன்றின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்வதற்கு அவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும். பாடங்களைப் படிக்கும்போது, கவனித்து அவற்றின் உட்பொருளைப் புரிந்து படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


    புதியன படைக்கும் வேட்கையைப் பள்ளிப்பருவத்திலேயே வளர்த்துக் கொண்டவர்கள், பிற்காலத்தில் அறிவியல் அறிஞர்களாகவும், தத்துவ ஞானிகளாகவும் உருவாகியுள்ளார்கள் என்பதை வரலாறுகள் காட்டுகின்றன.


    ஆப்பிள் பழம் மரத்திலிருந்து கீழே விழுவதைக் கூர்ந்து கவனித்த ஐசக் நியூட்டன், புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தார். பறவைகள் பறப்பதைக் கூர்ந்து கவனித்த ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்தார்கள். இவ்வாறு ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்புகளும் கூர்ந்து கவனித்ததின் வெளிப்பாடு என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.


    ஆகவே, எதையும் கூர்ந்து கவனித்து, ஆழ்ந்து சிந்தனை செய்யுங்கள். அவ்வாறு செய்வதால், உங்களுடைய அறிவு விரிவடைவதுடன், சிந்திக்கும் ஆற்றலும் அதிகமாகின்றது. வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு அடித்தளமாக கூர்ந்து கவனிக்கும் பழக்கமும், ஆழ்ந்து சிந்திக்கும் மனமும் முக்கியம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.


    ஒளியின் பாதையை தேர்ந்தெடுங்கள்:

    சாதனைக்கு வயது தடையல்ல. முயற்சியும், உழைப்பும் இருந்தால் சாதனைச் சிகரத்தை எந்த வயதிலும் எட்ட முடியும். இளமையிலேயே வரலாறு படைத்தவர்களும் உண்டு. முதுமையில் சாதனைச் சிகரங்களைத் தொட்டவர்களும் உண்டு. எப்பொழுதும், எதற்காகவும் மனம் தளர்ந்து விடாதீர்கள். மக்களுக்குப் பயனுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் உங்களுடைய உள்ளமெங்கும் பரவ விடுங்கள் பின்னர் உங்களுக்குள் ஓர் உண்மை ஒளி பரவத் தொடங்கும். அதன் விளைவாக, உங்களுடைய வாழ்வின் இலட்சியம் தெளிவாகப் புரியத் தொடங்குவதை உணர்வீர்கள்.

    முயற்சிகள் தோற்பதில்லை:

    முன்னேற்றத்தின் திசைநோக்கி நகர்ந்துகொண்டே இருங்கள். நிழல் கூட நகரும்போது, நாம் நின்ற இடத்திலேயே நிலையாகிவிடுவது நியாயமா? சிந்தியுங்கள்Ð உங்களாலும் சாதிக்க முடியும் என்பதை உணர்வீர்கள்.

    விதைகளை விருட்சமாக்குங்கள்:

    ஒருவர் விதைகளை மடியில் கட்டிக்கொண்டு அலைவதால், எந்த விதப் பயனும் கிடைக்கப் போவதில்லை. அந்த விதைகளைப் பயிரிட்டு, விருட்சங்களை உருவாக்கினால், அவை அனைவருக்கும் பயன்படும். அதுபோல்தான், உங்களுக்குக் கல்வியின் மூலமாகவும், நூல்களின் வாயிலாகவும் சான்றோர்கள், உரைகளின் மூலமாகவும் கிடைக்கும் கருத்துக்களை வெறுமனே வைத்துக்கொண்டு இருப்பதால், எந்தவிதப் பயனுமில்லை.


    அந்த அரிய கருத்துக்களை வாழ்க்கையில் பயன்படுத்தும் போதுதான் வளர்ச்சி பிறக்கின்றது. உங்களுக்கு எவ்வளவு விஷயங்களைத் தெரியும் என்பதைவிட அவற்றில் எவ்வளவு விஷயங்களை வாழ்க்கையில் பயன்படுத்துகின்றீர்கள் என்பதுதான் மிகவும் முக்கியம். இங்கே, நாம் இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அதாவது, ஒன்று எப்பொழுதும் யாரிடமிருந்தும் கற்றுக்கொள்கின்ற மனநிலையுடன் இருக்க வேண்டும். இரண்டாவதாக, கற்றவற்றை முடிந்த அளவிற்கு உடனடியாகச் செய்யும் இயல்பும் இருக்க வேண்டும்.


    இந்த இரண்டு பண்புகளும், ஒரு சாதாரண மனிதனைச் சாதனையாளன் ஆக மாற்றுவதுடன், அவன் தொடர்ந்து சாதனையாளனாகவே இருப்பதற்கு வழிவகுக்கும். எனவே, ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். கற்றதை நடைமுறைப்படுத்தி முன்னேறிக் கொண்டே இருங்கள். ஏனென்றால், வளர்ச்சி என்பது வாழ்வின் தத்துவம். முயற்சி என்பது முன்னேற்றத்தின் அடித்தளம்.

    கனிகள் இனிக்கும்:

    “கல்வியின் வேரானது கசக்கும். ஆனால், அதன் விளைச்சல் இனிக்கும்” என்றார் அரிஸ்டாட்டில். இதைத்தான் நமது முன்னோர்கள், “மூத்தோர் சொல்லும் முற்றிய நெல்லிக் காயும் முன்னே கசக்கும்; பின்னர் இனிக்கும்” என்றார். ஆரம்பத்தில் சற்றுச் சிரமமாக இருந்தாலும் கல்வியில் மனம் ஊன்றிப் படிக்க வேண்டும். புரியாமல் படிக்கும்போது, படிப்பில் ஈடுபாடு வராது. ஆனால் அதையே நன்கு கவனித்துப் புரிந்து படிக்கும்போது நெஞ்சில் ஆர்வம் துளிர்விடத் தொடங்கும். ஆழ்ந்து படித்துப் புரிந்துகொள்ளும் கருத்துக்களை, நடைமுறை வாழ்வில் முடிந்தவரை பயன்படுத்தியும் பழக வேண்டும்.

    அவ்வாறு வாழ்க்கைக்கு உதவும் வகையில் கல்வியைக் கற்றுக்கொள்ளும்போது, எதிர்காலம் மிகவும் சிறப்பானதாகவும், மகிழ்ச்சி மிக்கதாகவும், பயனுடையதாகவும் அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. விதைக்காமல் விளைச்சல் இல்லை; உழைக்காமல் உயர்வு இல்லை என்பதை உணர்ந்து, ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்தை நோக்கி உழைத்துக் கொண்டே இருங்கள். விதைத்துவிட்டால் மட்டும் விளைச்சல் கிடைக்காது. தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

    “எவன் ஒருவன் விடாமல் முயற்சி மேற்கொள்கிறானோ, அவனுக்கு வெற்றி என்னும் புகழ் தேவதை மாலை சூட்டுகிறான்” என்றார் நெப்போலியன். ஆம் முடியாது என்று முடங்கிவிட்டால், மூச்சுக்காற்றும் நின்றுவிடும். முடியும் என்று துணிந்துவிட்டால், மூளைக்கும் மின்சாரம் பிறப்பெடுக்கும் முனைப்போடு செயல்களைச் செய்து முன்னேற்றப் பாதையில் முன்னேறுங்கள் வெற்றிக் கனிகளைச் சுவைத்து மகிழுங்கள்!

Wednesday, April 15, 2015

படித்ததில் பிடித்தது

  1. ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரைப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க.


    முனிவர்கிட்ட அந்த 4 பேரும்”சாமி உலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே ,அதுக்கு என்ன வழின்னு” கேட்டாங்க.


    அதுக்கு அந்த முனிவர்”தெரியலயேப்பா’ன்னு” ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு.


    ஆனாலும் வந்தவங்க விடாம.”என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே!” அப்டின்னு கேட்டாங்க.
    அதுக்கு முனிவர் அவங்ககிட்ட “சரி இப்ப நான் உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன். போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன்.


    அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லனும், கருத்து தப்பா இருந்துச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ தள்ளிவிட்டுடும்” அப்டின்னாரு.


    சரின்னு அந்த 4 பேரும் முனிவரோட சேந்து புஷ்பக விமானத்துல ஏறினாங்க.


    கொஞ்ச தூரம் போன பிறகு ஒரு இடத்துல ஒரு புலி , குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பிறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு இரை தேடி அந்தப் பக்கமா போனது.



    ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரைப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க.


    அந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கு தண்ணீர் குடிக்கிறதுக்கு வந்திச்சி.


    மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி அதைக் கொன்னு தானும் சாப்பிட்டு தன்னோட குட்டிகளுக்கும் குடுத்திச்சி. அத சாப்பிட்ட அந்தப் புலிக் குட்டிங்களுக்கு சந்தோசம்.


    இந்தப் பக்கமா தன் அம்மாவ பறிகொடுத்த மான் குட்டிகளுக்கு வருத்தம். இந்தக் காட்சிய அவங்கிட்ட காட்டின முனிவர் இதப் பத்தி உங்க கருத்து என்ன’ன்னு கேட்டாரு.


    அதுக்கு அந்த 4 பேருல ஒருத்தர் “இது ரொம்ப தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சேன்னு சொன்னாரு”. உடனே அவர அந்த விமானம் கீழ தள்ளிவிட்டுடுச்சு.


    அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு,”ஏம்பா உன் கருத்து என்னன்னு?
    ஏற்கனவே ஒருத்தன் கீழ விழுந்தத பாத்த ஆளு இவன்,” இல்ல இது சரிதான், ஏன்னா புலிகளுக்கு இரையாகத் தானே மான்கள் இருக்குது அப்படின்னு சொன்னாரு.


    ஒடனே அவரையும் விமானம் கீழ தள்ளி விட்டுடுச்சு.
    இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு ரொம்ப உசாரா சொன்னான், “ இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு”. ஒடனே அவனையும் அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி.


    கடைசியா விமானத்தில இருந்தவனைப் பாத்து கேட்டாரு முனிவர்,”ஏம்பா உன் கருத்து என்னன்னு”, அதுக்கு அவன்,”தெரியலயே சாமின்னு”, சொன்னான். இந்த மொற அவன அந்த விமானம் கீழ தள்ளல. இரண்டு பேரையும் சொமந்துகிட்டு பயணம் செய்ய ஆரம்பிச்சிச்சி.


    நீதி: நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும் தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது அனாவசியம்,


    அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்.


    நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்.

Tuesday, April 14, 2015

மன்மத ஆண்டே வா! வா! வா!


          மன்மத ஆண்டே வா! வா! வா!

சித்திரையே!! ஆண்டுக்கு ஒரு முறைதான் வருவாயோ!!!
உனக்கும், பங்குனிக்கும் நீண்ட தூரமாமே, ஆனால் பங்குனிக்கும், உனக்கும் மிக மிக அருகாமே!!!

உனக்குள் தான் எத்தனை சிறப்புகள்....

சித்திரா பௌர்ணமியாம்......
அக்ஷ்ய திரிதியையாம்...
அக்னி நட்சத்திரமாம்....
கோடை விடுமுறையாம்.....
அந்த கள்ளழகரே ஆண்டு முழுதும் உனக்காகத்தான் காத்திருக்கிறாரேமே!!!

இந்த முறை மன்மத ஆண்டாக வேறு பிறந்திருக்கிறாயாமே!!
உன் மன்மத அன்(ம்)புகளால் அன்பையும், ஆரோக்கியத்தையும்,சந்தோஷ்த்தையும் அள்ளி வீச வா வா வா....

அனைவருக்கும் மன்மத ஆண்டு சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்!!!!

நன்றி!!!
வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!!



Sunday, March 01, 2015

உடல் பருமன் ஏற்படுவது ஏன்?


(Thanks to THEHINDU)


இடுப்பின் அளவு அதிகமாக அதிகமாக, நம் ஆயுளின் அளவு குறையும் என்பது இயற்கையின் நியதி. கடந்த ஆண்டில் உலக அளவில் மாரடைப்பால் மரணம் அடைந்தவர்களில் உடல் பருமனாக இருந்தவர்கள்தான் அதிகம் என்கிறது புள்ளிவிவரம். ஆனால், இது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் குறைவாகவே உள்ளது என்று வருந்துகிறது உலகச் சுகாதார நிறுவனம்.
2007-ம் ஆண்டு எடுத்துள்ள புள்ளிவிவரப்படி, இந்தியாவில் மட்டும் 4 கோடிப் பேருக்கு உடல் பருமன் (Obesity) பிரச்சினை உள்ளது. இந்த எண்ணிக்கை 2030-ல் இரண்டு மடங்காக அதிகரித்துவிடும் என்று அது எச்சரித்துள்ளது.
எது உடல் பருமன்?
ஒருவருக்கு உடல் பருமன் உள்ளதா என்று தெரிவிப்பது, 'பாடி மாஸ் இன்டெக்ஸ்' ( Body Mass Index - BMI). இது 18.5-க்குக் கீழே இருந்தால், உடல் எடை குறைவு என்று பொருள்; 18.5 முதல் 23.9 -க்குள் இருந்தால், சரியான உடல் எடை. 24 – 29.9 என்று இருந்தால், அதிக உடல் எடை; 30-க்கு மேல் என்றால் அது உடல் பருமனைக் குறிக்கும். இது பெரியவர்களுக்கான அளவு.
காரணம் என்ன?
உடல் பருமனுக்குப் பரம்பரை ஒரு முக்கியக் காரணம். பெற்றோருக்கு உடல் பருமன் இருக்குமானால், மரபுரீதியாக அடுத்த தலைமுறைக்கு இது கடத்தப்படுகிறது. குடும்பத்தின் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை, இதற்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்தலாம். எண்ணெயில் வறுத்த, பொரித்த கொழுப்புள்ள உணவு வகைகளை அதிகமாக உண்பது, சோம்பலான வாழ்க்கை முறை, உடலியக்கம் குறைவது, உடலுழைப்பு/உடற்பயிற்சி இல்லாதது, தைராய்டு பிரச்சினை போன்றவை உடல் பருமனைச் சீக்கிரமே அதிகரித்துவிடும்.
சில மாத்திரைகளின் பக்கவிளைவாகவும் உடல் எடை அதிகரிக்கலாம். ஹார்மோன் மாத்திரைகள், ஸ்டீராய்டு மாத்திரைகள், பயோகிளிட்டசோன் எனும் நீரிழிவு நோய் மாத்திரை, இன்சுலின் போன்றவற்றை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம்.
ஆண்களைவிடப் பெண்களுக்கு உடல் பருமன் பிரச்சினை அதிகம். காரணம், தற்போது பெண்களிடையே உடல் உழைப்பு பெரிதும் குறைந்துவிட்டது. உட்கார்ந்துகொண்டே வேலை செய்யும் பணிகளில் ஈடுபடும் பெண்கள்தான் அதிகம். தவிர, வீட்டில் மிச்சமுள்ள உணவைத் தூக்கி போட மனமில்லாமல் சாப்பிடுவதும், தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே நொறுக்குத்தீனியை அளவு தெரியாமல் சாப்பிடுவதும், இந்தப் பிரச்சினையை உருவாக்கும். பல பெண்களுக்குக் குழந்தை பிறந்த பிறகு, ஹார்மோன்களின் அதீத விளைவால் உடல் பருமன் ஏற்படுவதுண்டு.
பாதிப்புகள் என்ன?
உடல் பருமன் காரணமாக உடலில் ஏற்படும் பாதிப்புகள் பல. அவற்றுள் முக்கியமானவை: டைப் 2 சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, மூச்சுத் திணறல், மூட்டு வலி, முதுகு வலி, இடுப்பு வலி, குதிகால் வலி, மார்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய், பித்தப்பைக் கற்கள், குடலிறக்கம், குறட்டை, ‘ஸ்லீப் ஏப்னியா’ எனும் உறக்கச் சுவாசத் தடை, மலச்சிக்கல், மலட்டுத்தன்மை, மாதவிலக்குப் பிரச்சினைகள், சினைப்பை நீர்க்கட்டி, மூலநோய், மனச்சோர்வு.
எடையைக் குறைக்க என்ன வழி?
உடல் பருமனுக்குக் காரணம் தெரிந்து, அதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுவது நல்லது. மேலும் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகிய இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்தினால் உடல் எடையைக் குறைப்பது எளிது. ஓர் உணவியலாளர் உதவியுடன் உங்கள் BMI-க்குத் தகுந்த கலோரிகளைக் கணக்கிட்டு, அதற்கேற்ப உணவைச் சாப்பிடுங்கள்.
உணவைப் பொறுத்தவரைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், அதிக மாவுச்சத்து, கொழுப்பு, எண்ணெய் உள்ள உணவு வகைகள், பானங்களைத் தவிர்க்க வேண்டும். கொழுப்புள்ள உணவைத் தேவைக்கு மேல் சாப்பிட நேர்ந்தால், உடனுக்குடன் வேலையோ-உடற்பயிற்சியோ செய்து அதை எரித்துவிட வேண்டும்.
உண்ணும் உணவுக்கேற்ப நடைப்பயிற்சி, உடற்பயிற்சி என ஏதாவது ஒரு பயிற்சியை மேற்கொண்டு, உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆரோக்கிய உணவு எது?
உடல் எடையைக் குறைக்கிறேன் எனப் பலரும் காலையில் சிற்றுண்டியைத் தவிர்க்கிறார்கள். இது தவறு. இதனால் மதிய உணவு அதிகமாகிவிடும். எனவே, காலை உணவு கட்டாயம். காலையில் எழுந்ததும் காபி, தேநீர் குடிப்பதற்குப் பதிலாகக் கிரீன் டீ, லெமன் டீ ஆகியவற்றில் ஒன்றைக் குடிக்கலாம். காலை டிஃபனுக்குக் கேழ்வரகு இட்லி, இடியாப்பம், புட்டு, உப்புமா, மிளகுத் திணை பொங்கல் சாப்பிடலாம்.
தேங்காய்ச் சட்னிக்குப் பதிலாக, புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, வெண்டைக்காய்ச் சட்னியுடன் சாப்பிடலாம். நூடுல்ஸ், ஃபிரைடு ரைஸ், புரோட்டா, எண்ணெயுடன் இட்லி பொடி காலை உணவில் வேண்டாம்.
பொதுவான ஆலோசனைகள்
கொழுப்பு மிகுந்த, கலோரிகள் மிகுந்த தயிர், நெய், வெண்ணெய், சீஸ், இனிப்பு, பேக்கரிப் பண்டங்கள், பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற உணவு வகைகளை ஓரங்கட்டுங்கள். மாலை சிற்றுண்டிக்கு வடை, பஜ்ஜி, போண்டா, பீட்சா, பர்கர், சேவு, சீவல், சிப்ஸ், பப்ஸ், லேஸ், கடலைப்பருப்பு, கார்ன் ஃபிளேக்ஸ், முறுக்கு, மிக்சர், கார வகைகள், விதவிதமான ரொட்டி கள் ஆகியவற்றைச் சாப்பிடக் கூடாது.
பதிலாக வேர்க்கடலை, எள்ளுருண்டை, கடலை உருண்டை, பொரிகடலை, சுண்டல், முளைகட்டிய பயறு, காய்கறி கட்லெட், பழச் சாலட் ஆகியவற்றில் ஒன்றைச் சாப்பிடுங்கள். மாலையில் பழச்சாறு/காய்கறி சூப் சாப்பிடுங்கள். ஐஸ்கிரீம், மில்க் ஷேக், கோக், குளிர்பானங்கள் வேண்டவே வேண்டாம். புரோட்டா, நூடுல்ஸ், ருமாலி ரொட்டி, ஃபிரைடு ரைஸ், நாண், பட்டர் நாண், பேல் பூரி, பானி பூரி போன்ற ஹோட்டல் உணவு வகைகளில் கலோரி மிக அதிகம். இவற்றைத் தவிர்க்க வேண்டியதும் அவசியம்.
கீரைகள், கத்திரிக்காய், புடலங்காய், சுரைக்காய், சுண்டைக்காய், வெண்டைக்காய், வெள்ளரிக்காய், முருங்கைக்காய், காரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், பாகற்காய், வாழைத்தண்டு ஆகியவற்றில் கலோரிகள் குறைவு. தினமும் சராசரியாக 500 கிராம் காய் நமக்குத் தேவை.
கிழங்குகள், மா, வாழை, பலா, சீத்தா, அத்தி, திராட்சை, சப்போட்டா ஆகியவற்றில் கலோரி அதிகம். ஆகவே, இவற்றைத் தவிருங்கள். பதிலாக, கொய்யா, மாதுளை, தக்காளி, சாத்துக்குடி, அன்னாசி, பேரிக்காய் சாப்பிடலாம். தினமும் 250 கிராம் பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. விரதம் இருக்காதீர்கள்; அடிக்கடி விருந்துக்கும் ஹோட்டலுக்கும் செல்லாதீர்கள். டிவி முன்னால் உட்கார்ந்து சாப்பிடுவதைத் தவிருங்கள். மது அருந்தாதீர்கள்.
அசைவம் கவனம்!
தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சியைக் குழம்பு வைத்துச் சாப்பிடலாம். ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி வேண்டாம். முட்டையில் வெள்ளைக் கருவைச் சாப்பிடலாம். மஞ்சள் கரு ஆகாது. ஃபிரைடு சிக்கன், தந்தூரி சிக்கன், ஆம்லெட் போன்ற எண்ணெயில் தயாரித்த அசைவ உணவு வகைகள் வேண்டாம்.
எந்த எண்ணெய் நல்லது?
சமையலுக்குச் சூரியகாந்தி எண்ணெய், அரிசித் தவிட்டு எண்ணெய் (Rice bran oil) அல்லது ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதன் அளவு ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 15 மி.லி.
தேங்காய் எண்ணெய், பாமாயில், வனஸ்பதி ஆகியவற்றில் செறிவுற்ற கொழுப்பு அமிலம் (Saturated fatty acid) அதிகமுள்ளது. இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, கொழுப்பு அதிகமாகி உடல் பருமனுக்கு வழிவகுக்கும். ஆகவே, இவற்றைத் தவிர்க்க வேண்டும். நினைத்தால் எண்ணெய் பயன்பாட்டைப் பெருமளவு குறைக்க முடியும்.
உடற்பயிற்சி முக்கியம்
குழந்தைகள் தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் விளையாட வேண்டும்; பெரியவர்கள் குறைந்தது 45 நிமிடங்களுக்கு வேகமான நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், டென்னிஸ், கைப்பந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து போன்ற ஏரோபிக் பயிற்சிகளில் ஒன்றைச் செய்ய வேண்டும்.
ஒரு மணி நேரம் வேகமாக நடக்கும்போது அல்லது உடற்பயிற்சி செய்யும்போது, உடல் தசைகளில் 300 கலோரி சக்தி செலவாகிறது. இதன் பலனாக, உடலில் தேவையற்ற கொழுப்பு கரைகிறது. சராசரியாக ஒரு மாதத்தில் இரண்டு கிலோ எடை குறைவதற்கு வாய்ப்புண்டு.
நமக்குத் தேவையான உணவு
உடல் எடையைக் குறைக்க உணவின் வகை மட்டும் முக்கியமல்ல; உணவின் அளவும் முக்கியம். சராசரியாகத் தினமும் நமக்கு 1,800 கலோரி சக்தியைத் தருகிற உணவு தேவை.
# காலை டிஃபனுக்கு மூன்று இட்லி அல்லது 200 கிராம் பொங்கல் அல்லது உப்புமா, சிறுவெங்காயச் சட்னி, பாசிப்பருப்பு சாம்பார்.
# பகல் 11 மணிக்கு 150 மி.லி. மோர் அல்லது எலுமிச்சைச்சாறு, 50 கிராம் சுண்டல் சாப்பிடுங்கள்.
# மதியம் பிரியாணி, இறைச்சி வேண்டாம். 300 கிராம் சம்பா அரிசி சாதம் அல்லது முழு கோதுமையில் ஆன 2 சப்பாத்தி, 200 கிராம் பருப்பு அல்லது சாம்பார், ரசம், மோர், 200 கிராம் கீரை, ஒரு காய்கறி, மீன் ஒரு துண்டு சாப்பிடுங்கள்.
# மாலையில் 150 மி.லி பால்/தேநீர் அல்லது பழச்சாறு/காய்கறி சூப், 50 கிராம் பயறு / பழ சாலட் சாப்பிடலாம்.
# இரவில் சாதம், பூரி வேண்டாம். 3 சோள தோசை அல்லது 3 சப்பாத்தி 200 மி.லி. சாம்பார் அல்லது காய்கறி குருமா, 100 மி.லி. தக்காளிச் சட்னி சாப்பிடுங்கள்.
# படுக்கப் போகும் முன் 150 மி.லி பால், ஒரு பழம் சாப்பிடலாம்.
- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com

Saturday, February 21, 2015

Today's Quote :)

Dear All,

Hope all are doing good. Take care and have a nice day!!!




Wednesday, January 14, 2015

பொங்கல் நல்வாழ்த்துக்கள்(Happy Pongal) :)

அன்புள்ள நண்பர்களே!!!

இந்த தை திருநாள் உங்கள் வாழ்வில் இன்பத்தையும், ஆரோக்கியத்தையும் மற்றும் காரிய வெற்றியையும் வழங்கட்டும்.
அனைவருக்கும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் :)


Wednesday, December 24, 2014

Merry Christmas :)

http://www.christmasnewyearwallpapers.com/wp-content/uploads/2014/12/Merry-Christmas-Greeting-Card-3.jpg
வாழ்க்கை இங்கு கொஞ்ச நேரம்
வந்த தூரம் கொஞ்ச தூரம்
சொந்தமில்லை எந்த ஊரும்
தேவையில்லை ஆரவாரம்
.......
நேற்று மீண்டும் வருவதில்லை
நாளை எங்கே தெரியவில்லை
இன்று ஒன்று மட்டுமே உங்கள் கையில் உள்ளது

வாழ்க்கை வந்து உங்களை வாழ்ந்து பார்க்கச் சொன்னது


இரயில் சிநேகம் என்ற சீரியல் பாடலில் இருந்து சில வரிகள்.

இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திபோம்.

Sunday, December 14, 2014

லிங்கா திரைவிமர்சனம் (Linga Tamil movie review)


அன்புள்ள நண்பர்களே!!!

     வணக்கம். நலம்தானே?  மீண்டும் ஒரு திரைவிமர்சனத்தோடு உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. ஒரு சில நடிகர்களின் படங்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தும் ரசிகர்கள் மத்தியில். அப்படியொரு நடிகரின் படம்தான் நாம் பார்க்க இருப்பது. என்ன நண்பர்களே கண்டுபிடித்து விட்டீர்களா? ஆம்!! நீங்கள் நினைப்பது போல் லிங்கா தாங்க நாம் பார்க்க போவது. வாங்க பார்க்கலாம்.

   சோலையூர் கிராமத்தில் உள்ள ஒரு அணையில் பழுது இருப்பதாக அந்த ஊரை சேர்ந்த எம்பி(MP) நாகபூஷன் (ஜகபதி பாபு) அரசுக்கு சொல்கிறார். ஆனால் அதை விசாரிக்க வரும் அரசு அதிகாரி அணையில் எந்த பழுதும் இல்லையென்றும் இன்னும் ஆயிரம் வருடம் நன்றாக இருக்கும் என்றும் எழுதி வைத்து விடுகிறார்.அதை மாத்தி எழுத சொல்லி, கேட்காமல் போக அவரை கொலை செய்து விடுகிறார் ஜகபதி பாபு. இறக்கும் தருவாயில் ஊர் தலைவரான விஸ்வநாத்திடம் கோயிலை திறங்க அப்பதான் இந்த ஊரை காப்பத்த முடியும் என்று சொல்லி விட்டு இறந்து விடுகிறார். எழுவது வருடங்களாக பூட்டி இருக்கும் கோயிலை திறக்க கோயிலையும், அணையும் கட்டிய ராஜா லிங்கேஷ்வரனின் பேரன் லிங்கா (எ) லிங்கேஷ்வரனை தேடுகிறார் ஊர் தலைவரின் பேத்தியும், பப்ளிக் டிவியின் தொகுப்பாளினியும் ஆன அனுஷ்கா .

  லிங்கா (ரஜினிகாந்த்) சின்ன சின்ன திருட்டுகளை செய்து கொண்டு கனவு வாழ்க்கையில் இருக்கும் லிங்காவுக்கோ தாத்தா பேரை சொன்னாலே பிடிப்பதில்லை அதனால் தன் பேரை லிங்கா என்று சுருக்கி கொள்கிறார். திருடி விட்டு ஜெயிலுக்கு செல்லும் அவரை ஜாமினில் எடுக்கும் அனுஷ்கா அவரை சோலையூர் கிராமத்திற்க்கு வந்து அந்த கோவிலை திறக்கச் சொல்லி வேண்டுகிறார். அவர் மறுத்து விடவே, அவர் திருடும் ஒரு பெரிய திருட்டில் போலிசிடம் இருந்து அவரை காப்பாற்றி ஊருக்கு கூட்டி செல்கிறார். அங்கே போனதும் தான் தெரிகிறது அது ஒரு மரகத லிங்கம் என்று. அதை திருடிக் கொண்டு ஊரை விட்டே ஓடி விடலாம் என்று தீர்மானிக்கும் பொழுது மாட்டிக் கொள்கிறார்கள். அதில் இருந்து அழகாக தப்பித்துக் கொள்கிறார் லிங்கா தனது சமயோசித புத்தியால். அப்பொழுதான் தன் தாத்தாவின் வாழ்க்கை முழுவதும் , அவர் செய்த தியாகங்கள் முதற்க் கொண்டு தெரிய வருகிறது.
  தாத்தாவாகிய லிங்கேஷ்வரன் எவ்வாறெல்லாம் ஃப்ரிடிஷ் அரசாங்காத்திடம் அல்லல் பட்டு அந்த அணையை கட்டினார், எப்படி அவ்வளவு சொத்துக்களை இழந்தார், ஏன் அந்த கோவில் பூட்டிக் கிடக்கிறது, ஏன் லிங்கா அரச குடும்பத்தில் பிறந்து  திருடுகிறார், ஜகபதி பாபு ஜெயித்தாரா? லிங்கா அந்த லிங்கத்தை திருடினாரா?   என்பதெல்லாம் மீதீ கதைங்கோ.

 புதிய கோப்பையில் பழைய தேன் மாதிரிதான் இந்த கதை. பல இடங்களில் பழைய ரஜினி படங்கள் சாயல்கள். ஒரு சில இடங்கள் நன்றாக இருக்கிறது. அதற்க்காக வேண்டுமானால் நாம் இயக்குநர் KS ரவிக்குமார் அவர்களை பாராட்டலாம். மத்தபடி படம் மிகவும் சாதரணமாக இருக்கிறது. இது சூப்பர் ஸ்டார் படம் அதுதான் நிற்க்கிறது. மற்றபடி புதிதாக எதுவும் இல்லை. ஒரு சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம் குறிப்பாக ஸ்பைடர் மேன் போல் ரஜினி பறந்து வரும் காட்சியை.



 ரஜினி அவர்களுக்கு இது அல்வா சாப்பிடுகிற மாதிரி படம்தான். இரட்டை வேடம் பேரன் ரஜினியைவிட தாத்தா ரஜினி அசத்துகிறார். இந்த படத்திலும் அவருடைய ஸ்டைல், புன்னகைக்கு குறைவில்லை அதே அசத்தல்.

 அனுஷ்கா நம் படங்களில் நடிகைகளுக்கு எவ்வளவு தரப்படுமோ அதே அளவு தரப்பட்டு இருக்கிறது. குறைவின்றி செய்து இருக்கிறார். இன்னொரு ஜோடி சோனாக்ஷி சின்ஹா , ஒரு சில இடங்களில் அபரீத அழகோடும், ஒரு சில இடங்களில் ஒட்டாத அழகோடும் திகழ்கிறார். இவருக்கு பின்னனி கொடுத்தவரை கிராமத்து தமிழ் பேசும் யாரையாவது போட்டிருக்கலாம். ஒட்டாமல் நிற்க்கிறது.


  சந்தானம், இவருது நகைச்சுவை சில இடங்களில் நல்ல ரசிப்பு. கருணாகரன் அதிக வேலை இல்லை ஆனால் அந்த மஞ்சள் பை, காமெடி சிறப்பு. அந்த நகை திருடும் காட்சி நல்ல கலகலப்பு.

ரஜினி படம் என்றாலே ஏராளமான நட்சத்திரக் கூட்டம் இருக்கும் . இந்த படத்திலும் அதற்க்கு குறைவில்லை.

இசை A R ரஹ்மான் அவர்கள். நிச்சயமாக பாடல்கள் நெஞ்சை தொடவில்லை என்பதே என் எண்ணம். ஆங்கிலப் பாடலா அல்லது தமிழ் பாடலா என்கிற திகைப்பு நமக்குள். லிங்கா சொத்தை யெல்லாம் இழக்கும் வேளையில் நாம் எதிர்பார்த்தது இன்னொரு நெஞ்சைத் தொடும் விடுகதையா இந்த வாழ்க்கை போன்ற பாடலை. அந்த உணர்ச்சி பெருக்கு இதில் இல்லை.
ஒரு வேளை கேட்க கேட்கத்தான் பிடிக்குமோ ? :)

 பாடல் வரிகள் வைரமுத்து மற்றும் மதன் கார்க்கி. வைரமுத்து அவர்களின் வரிகள் சில இடங்களில் நெஞ்சை அள்ளுகிறது.

வசனம் பொன் குமரன். சில வரிகள் மனத்திற்க்கு புத்துணர்வு தருபவை குறிப்பாக, வாழ்க்கையில் எதுவும் ஈஸி இல்ல முயற்ச்சி பண்ணா எதுவும் கஷ்டம் இல்ல போன்றவைகள்.

மொத்தத்தில் லிங்கா, முதற் பாதி தரிசனம், பிற்பாதி தூக்கம்.

ரஜினி படம் அதுவே சிறப்புதானே ரசிகர்களுக்கு :)

மீண்டும் சந்திப்போமா?

நன்றி!!! வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!!!