Wednesday, October 27, 2010

2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்

திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.

இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும்.

பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை

அப்படி என்ன செய்து விட்டார்?அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.
தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.
ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார்.

இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்” என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.

நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.

ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்
http://www.akshayatrust.org/contact.php

Akshaya’s Helping in H.E.L.P.
Trust 9,
West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India
Ph: +91(0)452 4353439/2587104Cell:+91 98433 19933
E mail :ramdost@sancharnet.in
மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்
http://heroes.cnn.com/vote.aspx

இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம். இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்
(This post taken and copied from another blog for passing this message to everyone)

Thursday, August 20, 2009

இரண்டு வரி மந்திரம்

"வெற்றி" என்ற மூன்றெழுத்தில் உள்ள "வெறி" வேண்டுமடி தோழி
வாழ்வின் எட்டாத உயரங்களை எட்ட.....

Friday, April 25, 2008

அம்மா

அன்பை வெளிப்படுத்துவதில் வற்றாத நைல் நதி நீ!

துன்பத்தில்,"ஏம்மா என்னை பெற்றெடுத்தாய்
என்று கேட்கும் போதெல்லாம்
நான் சாதிக்க பிறந்தவள்"
என்று என்னையே எனக்கு உணர்த்தியவள் நீ!

பிர‌ச்ச‌னைக‌ளை கண்டாளே கூட்டுப்புழுவாய் சுருங்கும் என்னை,

உன‌க்கும் சிறகு வ‌ரும், வ‌ண்ணங்க‌ள் வ‌ரும்
என்று வ‌சந்த‌த்தை காட்டி பட்டாம்பூச்சியாய் மாற்றியவள் நீ!

ம‌கிழ்ச்சியிலும்,க‌வ‌லையிலும் நான் தேடும் தேவ‌தை நீ!

வெவ்வேறு முக‌ம் காட்டினாலும் நான்
விரும்பும் அன்பு முக‌ம் கொண்ட‌வ‌ள் நீ!

எத்த‌னை கோப‌ம் கொண்டு பேசினாலும்,
அடுத்த‌ நிமிட‌மே வெள்ளைக் கொடி காட்டும் ச‌மாதான‌ப் புறா நீ

இர‌வில் க‌சியும் நிலா வெளிச்சம் போல்
அன்பை ம‌ட்டுமே அள்ளித்த‌ரும் அட்ச‌ய‌ பாத்திர‌ம் நீ!!

எப்போதும் பிரியாமல் இருக்கும் பிரிய‌மான தோழி நீ!!

Thursday, November 29, 2007

பள்ளியின் கடைசி நாள்


எண்ணெய் வைத்து தலை வாரி விடுகிறாள் அம்மா
முகத்தில் ஒரே பூரிப்பு தன் மகள் பள்ளியில் சேரப்போகிறாளே!
என் எண்ணெய் வழியும் முகத்தை தன் முந்தானையால்
பவுடரையும் சேர்த்து துடைக்கிறாள்
சுண்ணாம்பு அடித்தது போல் பளிச்சிடுகிறது முகம்,
அப்பாவின் குண்டு விர‌லை பிடிக்க‌ முடிய‌ம‌ல் ந‌ட‌க்கிறேன்
ஒரு புது வித‌ ப‌ய‌த்தோடு புதிய‌ நாளை எண்ணி!
ஆம் அதே வித‌ ஒரு ப‌ழைய‌ ப‌ய‌ம்
என் முக‌த்தில் இப்போதும் ப‌ள்ளியின் க‌டைசி நாளை எண்ணி!

ப‌ள்ளியில் ந‌ட‌த்தும் அனைத்து போட்டிக‌ளிலும்
க‌ல‌ந்து கொண்டு ப‌ரிசு வாங்கும் நோக்க‌ம்,
எப்போதும் ந‌ட‌ந்த‌தில்லை,ஆனால் மனம் நினைக்கும்
அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம் என்று,
ஆனால் அடுத்த வருடம்?

எப்போதும் வெளுப்பாக‌ இருக்கும் க‌ரும் ப‌ல‌கை,
குளுகுளுவென‌ இருக்கும் புங்கம‌ர‌ நிழல்,
ஒயாம‌ல் வீசும் வேப்ப‌ம‌ர‌க்காற்று,
க‌லக‌ல வென்று பேச்சுக்குர‌லோடு இருக்கும் வ‌குப்ப‌றைக‌ள்,
ஆசிரிய‌ர்க‌ளை க‌ண்டாலே ந‌டுங்கும் மாண்வ‌ர்க‌ள்
இவை எல்லாம் இனி எப்போது?

ப‌ள்ளியின் க‌டைசி நாள் எற்ப‌டுத்திய‌ துக்க‌ம் ஒரு புற‌ம்,
அடுத்த‌து நான் ப‌டிக்க வைக்க‌ப்ப‌டுவேனா?
இல்லயா? என்ற க‌வ‌லை ஒரு புற‌ம்,
இப்ப‌டி ப‌ல‌வித‌ க‌ல‌க்க‌ங்களின் புதுவித‌ ப‌ய‌ம்தான்
ப‌ள்ளியின் க‌டைசி நாள்!!

க‌ரும்ப‌லகைக்கு சாறு கொண்டு வ‌ந்து பூசி,
க‌ருப்பாக்கி, அடுத்த‌ ஒரு ம‌ணி நேர‌த்தில் அது வெளுப்பாகி,
என்றும், எப்போதும், பட்டாம் பூச்சிக‌ளின் வ‌ண்ணத்தோடும்,
தேனீக்களின் சுறுசுறுப்போடும் இய‌ங்கி வ‌ரும் என் இனிய‌ நண்ப‌ர்க‌ளே!
உங்க‌ளை இனி எப்போது பார்ப்பேன்?

ஒவ்வொரு கோடை விடுமுறையும் சொல்லில் வ‌டிக்க‌ இய‌லாத‌து
ஆற்றில் மீன்க‌ளோடு மீனாக,
காட்டில் மானோடு மானாக,
ம‌ணலில் மின்னும் பொன்னாக‌,
காற்றில் ம‌லரின் ம‌ணமாக,
ஆடித்திரிந்த‌து , ஆஹா அது ஒரு வ‌ச‌ந்த‌ கால‌ம்.
ஆனால் இனி ஏது அந்த உல்லாச‌ம்!!!!

எப்பொழுது ப‌ள்ளி உணவு வேளை வ‌ரும் என்று காத்திருந்து,
ஒடி வ‌ந்து எதையாவ‌து வாங்கி நண்ப‌ர்க‌ளோடு சாப்பிட்டு,
விளையாட்டில் கூட‌ நண்ப‌ர்க‌ளோடு ச‌ண்டைப்போட்டு,
ஒரு வார‌ம் பேசாம‌ல் இருந்து அப்புறம் பேசி....
அட‌டா என்ன‌ இனிமையான‌ வாழ்கை அது.
அத‌ற்கெல்லாம் இதோ ஒரு முற்றுப்புள்ளி.

Saturday, November 03, 2007

உன்னிட‌மிருந்து
பூவிலிருந்து அதனுடைய மந்தகாச நறுமணத்தை பிரிக்க முடியுமா?

எங்கேயோ பிறந்து தென்றலிலே மிதந்து வரும்
இன்னிசையை,தென்றலிருந்து பிரிக்க முடியுமா?

அழகாக பரந்து விரிந்துள்ள வானத்திலிருந்து
நீலத்தை பிரிக்க முடியுமா?

விழிகளில் இருந்து தூக்கத்தைத்தான்
பிரிக்க முடியுமா?

எங்கே திரும்பினாலும் உள்ளம் கொள்ளை
கொள்ளும் இயற்கை,அந்த இயற்கையிலிருந்து
பசுமையை பிரிக்க முடியுமா?

ப‌னி வீசும் மார்கழி காலை,
அதிலிருந்து குளிரை பிரிக்க‌ முடியுமா?

இவையெல்லாம் எப்ப‌டி சாத்திய‌மில்லையோ
அதைப்போலவே உன‌க்குள் இருக்கும்
திறமையை யாராலும் உன்னிட‌மிருந்து பிரிக்க முடியாது

நமக்காக காத்திருக்கும் வாய்ப்புக‌ளை
யாராலும் தட்டிப் ப‌றிக்க‌ முடியாது,
துணிந்து செய‌ல் ப‌டுவோம்,
இதோ மிக‌ அருகில் வெற்றி!!!!