Friday, June 28, 2013

டா வின்சி போல யோசி!

டா வின்சி போல யோசி!

லியோனார்டோ டா வின்சியை எப்படி அறிமுகப்படுத்துவீர்கள்? உடற்கூறு வல்லுநர், பொறியியலாளர், நகர வடிவமைப்பாளர், ஆடை, மேடை வடிவமைப்பாளர், சமையற்கலை நிபுணர், அறிவியல் அறிஞர், புவியியலாளர், கணிதவியல் வல்லுநர், நகைச்சுவைப் பேச்சாளர், இசைக்கலைஞர், ஓவியர், தத்துவமேதை, இயற் பியல் மேதை... இன்னும் என்னவெல்லாம்?

இந்த எல்லா அறிமுகங்களுக்கும் பொருத்த மானவர், லியோனார்டோ டா வின்சி. 'சரி... இந்த உலகத்தை வடிவமைத்த மேதைகளில் வின்சிக்கு மறுக்க முடியாத பங்கு இருக்கிறது. 'அவரைப் போலவே நாமும் யோசித்து ஜீனியஸ் ஆகலாம் என்று பொய் நம்பிக்கை ஊட்டுவதைப்போல உள்ளதே 'think like da vinci' என்ற புத்தகத்தின் தலைப்பு' என்பது உங்கள் கேள்வியாக இருந்தால், வாவ்... நீங்கள் டா வின்சிபோல யோசிக்கத் துவங்கி இருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்!'இப்படி ஆரம்ப வரிகளிலேயே உற்சாகம் தெளிக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் மைக்கேல் ஜே.கெல்ப்.

டா வின்சி மறைந்தபோது, 'இந்த மனிதரின் மறைவு உலகத்துக்கே ஈடுசெய்ய முடியாதது. இயற்கையாலேயே இன்னொரு டா வின்சியை சிருஷ்டிக்க முடியாது!' என்பதுதான் அவருக்கான அஞ்சலி. அப்படிப்பட்ட ஒருவர்போல நாம் சிந்திக்க முடியாதுதான். ஆனால், அவர் தனது சிந்தனைகளை மேம்படுத்தக் கையாண்ட வழி முறைகளை அறிந்துகொண்டு, நமது சிந்தனைகளையும் ஒரு புதிய பாதையில் பயணிக்கச் செய்யலாம் என்று உத்தரவாதம் தருகிறார் மைக்கேல்.

ஆர்வத்துக்கு அணை போடாதீர்கள்!

ஜீனியஸ்களுக்கும் குழந்தைகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. பேசத் தொடங்கியவுடன்குழந்தை கள் எதைப் பார்த்தாலும் அது தொடர்பான கேள்வி களைக் கேட்டுக்கொண்டே இருக்கும். 'அம்மா, இந்த கிரைண்டர் எப்படி வேலை செய்கிறது?', 'நான் எப்படிப் பிறந்தேன்?', 'அப்பா, பாப்பா எங்கே இருந்து வருகிறது?', 'ஏன் ஞாயிற்றுக்கிழமை ஐஸ்க்ரீம் கடை லீவு?', இப்படி இப்படி. இந்த உலகத்தில் ஜீனியஸ் என்ற அடைமொழி வழங்கப்பட்டவர்கள் அனைவரும் குழந்தை மனநிலையில் தான் தங்களை நிலைநிறுத்திக்கொண்டார்கள். டா வின்சிக்குப் பெண்கள், மது, செல்வம், செல்வாக்கு, மதப்பற்று என எந்த விஷயங்களும் கிளர்ச்சியூட்டவில்லை. மாறாக, எதைப்பற்றியும் எப்போதும் கேள்விகள் எழுப்பிக்கொண்டே இருப்பதுதான் அவரை எப்போதும் துடிப்பாகவைத்திருந்தது என்கிறார். எப்போது எந்தக் கேள்வி எழுந்தாலும், தன்னுடைய சின்னக் குறிப்புக் கையேட்டில் குறித்து வைத்துக்கொள்வார் டா வின்சி. பின்னர், அவற்றுக் கான பதிலுக்காக மண்டையை உருட்டிக்கொண்டு இருப்பார்.

நீங்களும் எந்தச் சின்னச் சம்பவமாக இருந்தாலும், அதைப்பற்றி டாப் 10 கேள்விகள் எழுப்பிப் பழகுங்கள். உதாரணமாக, ஒரு பறவை பறக்கிறதென்றால்,

ஏன் அதற்கு இரண்டு சிறகுகள்?

ஏன் அவற்றுக்கு உடல் முழுக்க இறகுகள்?

அது எப்படி மேலெழும்புகிறது?

எப்படித் தன் வேகத்தைக் கட்டுப்படுத்துகிறது?

எப்படி வேகம் எடுக்கிறது?

எப்படி அவற்றால் பறக்க முடிகிறது?

அது எப்போது தூங்கும்?

அதன் பார்வைத் திறன் எவ்வளவு?

எப்படி அது உண்ணும்?

பாதி வழியில் மழை பெய்தால் தொடர்ந்து பறக்குமா?

இந்தக் கேள்விகளுக்குப் பதில்களை யோசிக்கத் தொடங்கினாலே, பறவையின் மறுபக்கம் குறித்துப் பல புதிய விஷயங்களை அறிந்துகொள்வோம்தானே! நீங்கள் எழுப்பும் கேள்விகள் அனைத்துக்கும் பதில் கண்டுபிடித்துவிட வேண்டும் என்பது இல்லை.ஆனால், அதற்கான உங்கள் சிந்தனை நிச்சயம் உங்களுக்குள்ளேயே ஓர் உற்சாகத்தை ஊற்றுவிக்கும்!

எனது ப்ளஸ், மைனஸ்!

1) எனது பலம், சிறந்த குணங்கள் என்ன?

2) எனது பலவீனம், திருத்திக்கொள்ள - கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?

3) இன்னும் திறமையான, உதவும் மனப்பான்மை கொண்ட, சின்ஸியரான நபராக ஆளுமையைவளர்த்துக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?

அதிகபட்சம் ஆறு மாத இடைவெளிகளில் இந்த மூன்று கேள்விகளையும் உங்களுக்கு நெருக்கமான நலன்விரும்பிகளிடம் கேட்டுப் பதில்களைப் பெறுங்கள். நேர்மையான பதில்களுக்கு ஏற்ப உங்கள் மனப்பான்மையில் தேவைப்படும் மாற்றங்களை மேற்கொள் ளுங்கள். கல்லூரி-அலுவலகங்களில் உங்கள் ஜூனியர், நீங்கள் எதிரியாக நினைக்கும் நபரிடம்இருந்து வரும் பதில்களைக்கூட உதாசீனப்படுத்தாதீர்கள். பதில் கள் நீங்கள் கேட்க விரும்பாதவையாக இருந்தால், உஷார் ஆக வேண்டிய தருணம் என்பதை உணர்ந்து உடனடியாகச் செயல்படுங்கள்!

எனி டைம் மாணவன்!

கல்லூரிக் காலம் முடிந்து வேலைக்குச் சேர்ந்து, திருமணம் முடித்து, ஒரு குழந்தை பெற்றுக்கொண்டதும் இந்த உலகம்பற்றி அனைத்தும் அறிந்தவர், தெரிந்தவர், புரிந்தவர் என்ற அந்தஸ்தை நமக்கு நாமே சூட்டிக் கொள்கிறோம். அங்கேதான் நாம் தங்கித் தேங்கிப்போகி றோம். டா வின்சி மரணப் படுக்கையில் விழும் கடைசி நொடி வரை ஏதோ ஒன்றைக் கற்றுக்கொண்டு இருக்கும் மாணவராகவே இருந்தார். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... நமது வாழ்வின் வசந்த காலமாக பள்ளி, கல்லூரிப் பருவங்களைத்தானே ஆயுளுக்கும் குறிப்பிடு வோம். காரணம், அந்தக் காலங்களில் நம்மை உற்சாக மாக வைத்திருக்கும் அந்த மாணவ மனப்பான்மை தான். புதிதாக ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ளும்போது நம்மை அறியாமல் நமது மனது தனது கதவு, ஜன்னல் களை அகலத் திறந்து வைத்துக்கொள்கிறது. புதிதாக ஓர் ஆடையோ, செல்போனோ, கார் - பைக்கோ வாங்கும்போது எப்படிக் குதூகலம் அடைகிறோமோ, அதேபோலத்தான் நமது அறிவு அப்டேட் ஆகும்போது உற்சாகமாக இருக்கும். புதிய மொழி ஒன்றைக் கற்றுக்கொள்வது, கிடார், நீச்சல், சமையல், டிரைவிங் பழகுவது என சுவாரஸ்யமான பயிற்சிகள் வாழ்வை இன்னும் எளிமை ஆக்கும். அவற்றில் கவனம் செலுத் தலாம்.

ஆனால், எந்தப் பயிற்சியில் ஈடுபட்டாலும் சில விஷயங்களைக் கவனத்தில்கொள்ள வேண்டும். பயிற்சி யின்போது நாம் செய்யும் தவறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த இடத்தில் நாம் ஒரு குழந்தையைப் போலத்தான் என்பதை உணர்ந்துகொண்டு, தெரிந்தவர் கள் வழிநடத்துவதை - அவர்கள் நம்மைவிட எவ்வ ளவு சிறியவர்களாக இருந்தாலும் - ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு பயிற்சியை ஆரம்பித்தால், அதைமுடிக் காமல்விடக் கூடாது என்ற உறுதியுடன் இருக்கவேண் டும்!

வாருங்கள்... நாம் அனைவரும் டா வின்சியின் இழப்பை ஈடுசெய்வோம்!

- கி.கார்த்திகேயன்

(thanks to Vikatan.com)

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான்

ரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சின்னாபின்னமானது. என்றாலும், சாம்பலிலிருந்து பீனிக்ஸ் பறவையாக அது எழுந்துவரக் காரணமாக இருந்தவர்கள் இருவர். அந்த இருவரும் ஜப்பானியர்கள் அல்ல, அமெரிக்கர்கள்!            

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஒருபக்கம்; இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் எதிர்பக்கம். 1939-ல் தொடங்கிய யுத்தம் 1945 வரை நீடித்தது.  

ஆகஸ்ட் 6, 1945, அதிகாலை 8.15 மணி. ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா அணுகுண்டு வீசியது. உலக வரலாற்றின் முதல் அணுகுண்டு வெடிப்பு. நம்பவே முடியாத நாசம். குண்டு வெடித்த பகுதியிலிருந்து மூன்று மைல் தொலைவில் இருந்த 90,000 கட்டடங்கள் மண்ணோடு மண்ணாயின. மூன்றில் இரண்டு பகுதி ஹிரோஷிமா அழிந்தது. சுமார் 70,000 பேர் உடனே மரணமடைந்தார்கள். மேலும், 70,000 பேர் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பல நோய்களுக்கு ஆளாகி மரணமடைந்தார்கள். ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டுக்கு அமெரிக்கா வைத்த சங்கேதப் பெயர் குட்டிப் பையன் (Little Boy).

மூன்று நாட்கள் ஓடின. ஜப்பான் அடிபணியவில்லை. ஆகஸ்ட் 9. காலை மணி 11.02. குண்டுப் பையன் (Fat Boy) என்கிற பெயரில் இன்னொரு அணுகுண்டை நாகசாகி மீது வீசியது அமெரிக்கா. இதனால் 40,000 பேர் உடனே மரணமடைந்தார்கள். 30,000 பேர் கதிர்வீச்சுப் பாதிப்பால் மரணமடைந்தார்கள்.              
ஆகஸ்ட் 15. ஜப்பான் சக்கரவர்த்தி ரேடியோவில் பேசினார், 'என் கண்ணீரை விழுங்கிக்கொண்டு சரணாகதிக்குச் சம்மதிக்கிறேன்.' ஜப்பான், அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. நாட்டின்
பொருளாதாரம், தொழிற்சாலைகள், பிஸினஸ் அத்தனையுமே நொறுங்கிப் போயிருந்தன. சரணாகதிக்குப்பின், பிஸினஸ் மெள்ள மெள்ள முளைக்கத் தொடங்கியது.

ஜப்பானில் மக்கள் தொகை மிக மிகக் குறைவு. உள்ளூர் மார்க்கெட் இயற்கையிலேயே சிறியதாக இருப்பதால், ஜப்பான் தன் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதியை நம்பியிருந்தது. வெளிநாட்டு மார்க்கெட்களைப் பிடிக்க முனைந்த ஜப்பான் குறைந்த விலையில் பொருட்களைத் தயாரித்தது. தரம் இரண்டாம் இடம்தான். இதனால், ஜப்பான் தயாரிப்பு என்றாலே, விலையும் தரமும் குறைந்த சீஃப் சாமான் என்கிற கண்ணோட்டம் உலக அரங்கில் உருவானது.

ஜப்பானை நிர்வகிக்கும் பொறுப்பை ஜெனரல் மெக் ஆர்தர் (MacArthur) வசம் ஒப்படைத்திருந்தது அமெரிக்கா. ஜப்பானின் வளர்ச்சி தொடர்கதையாக வேண்டுமென்றால், உயர்ந்த தரம் என்னும் அடித்தளம் அவசியம் என்று மெக் ஆர்தர் உணர்ந்தார். மக்களிடமும், தொழில் அதிபர்களிடமும் இந்த விழிப்புஉணர்வை உருவாக்க ரேடியோவில் இதுபற்றி அடிக்கடி பேசினார். நாட்டின் தலைவரே நேரடியாக எடுத்த முயற்சியால் தரத்தின் அவசியத்தை மக்கள் மனதில் பதிய வைத்தது.

இதற்காக மெக் ஆர்தர் சிலரை களத்தில் இறக்கினார். அவர்களுள் முக்கியமானவர் ஹோமர் சாராஸோன் (Homer Sarasohn). போரின்போது ஜப்பானின் தொலைதொடர்பு வசதிகளைக் குறிவைத்து அழித்திருந்தது அமெரிக்கா. ஜப்பான் தலைதூக்க இந்த வசதிகளை மீண்டும் எழுப்ப வேண்டும். அப்படி எழுப்பும்போது வெறுமனே ரிப்பேர் வேலை பண்ணாமல் உலகத் தரத்தோடு உருவாக்க வேண்டும். இந்த கனவை நனவாக்க மெக் ஆர்தர் அழைத்து வந்தவர் சாராஸோன்.


சாராஸோனுக்கு அப்போது வயது 29 மட்டுமே. அவரால் சிதிலமாகிப் போன ஜப்பானை மீண்டும் கட்ட முடியுமா என பலரும் நினைத்தனர். மெக் ஆர்தரா கொக்கா? சரியான ஆளைத்தான் தேர்வு செய்திருந்தார்.

சாராஸோன் மேஜிக் செய்தார். ரேடியோ, தந்தி, ராடார் துறைகளில் முக்கிய கம்பெனிகளைத் தேர்ந்தெடுத்தார். அதன் தலைவர்களாக மகா திறமைசாலிகளைச் சல்லடையிட்டுச் சலித்தார்.  இவர்கள் அனைவருக்கும் தரத்தின் அவசியம் பற்றி பயிற்சி கொடுத்தார். இல்லை, மூளைச் சலவையே செய்தார். உயர்மட்டத்தில் ஊற்றிய இந்த அறிவு நீர் அடிமட்ட ஊழியர் வேர் வரை கசிந்தது. தரம் இந்த கம்பெனிகளின் தாரக மந்திரமானது.

ஆனால், ஜப்பான் உற்பத்தி செய்த இப்பொருட்களின் தரம் மட்டும் உயர்ந்தால் போதுமா? நாட்டின் அத்தனை தொழிற்சாலைகளும் தர மந்திரத்தை உச்சரிக்க வேண்டாமோ? இந்த அறிவுப் பரப்பலுக்கு சாராஸோன் ஒரு உலக மேதையைத் தயாராக வைத்திருந்தார். அவர் எட்வர்ட்ஸ் டெமிங் (Edwards Deming).

1950-ல் சாராஸோன், டெமிங்கை ஜப்பானில் ஒரு கருத்தரங்கு நடத்துமாறு அழைத்தார். அதில் அவர் பேசிய பேச்சு சூப்பர் டூப்பர் ஹிட். டெமிங் ஜப்பானின் தரக் கடவுளானார். அவரது கொள்கைகளை Union of Japanese Scientists and Engineers (JUSE)என்கிற முன்னணி அமைப்பு 30 நாட்கள் பயிற்சி வகுப்பு நடத்தி நாடெங்கும் பரவ வைத்தது. அடுத்த பத்து ஆண்டுகளில் 20,000 அறிவியல் வல்லுநர்களும்,     விஞ்ஞானிகளும் டெமிங் கொள்கையில் தேர்ச்சி பெற்றார்கள். ஜப்பானுக்கு என்ன தேவையோ, அதைத் தருகிற தேவதூதன் ஆனார் டெமிங்.

குவாலிட்டி மேனேஜ்மென்ட் என்கிற தர நிர்வாகத்தின் வரலாற்றுக்கு  நான்கு காலகட்டம். 1. பரிசோதனைக் ( Inspection) காலம், 2. தரக் கட்டுப்பாடு (Quality Control) காலம், 3. தர உறுதிப்படுத்துதல் (Quality Assurance)  காலம், 4. முழு தர மேலாண்மை (Total Quality Management) காலம்.

அமெரிக்கா போன்ற நிர்வாகத் துறையில் முன்னணியில் நிற்கும் நாடுகள்கூட முதல் மூன்று நிலைகளைக் கடந்திருக்க, ஜப்பானோ, முழு தர மேலாண்மை என்கிற உச்சத்தைத் தொட்டுவிட்டது.

முழு தர மேலாண்மை பிற நிலைகளைவிட ஏன் மேலானது? முதல் மூன்று நிலைகளிலும் தரக் கட்டுப்பாடு தரப் பரிசோதனையாளர்கள் அல்லது உற்பத்தி நிர்வாகிகளின் பொறுப்பு. ஆனால், முழு தர மேலாண்மையில் தரம் என்பது முதலாளி தொடங்கி காபி, டீ வாங்கிவரும் ஆபீஸ் பையன் வரை அத்தனை ஊழியர்கள் மனதிலும் தவிர்க்க முடியாத விஷயமாகப் பதியப்படுகிறது. இதனால், ஒவ்வொரு ஊழியரிடமும் தர உணர்வு, முயற்சி எடுக்காமல் அனிச்சைச் செயலாக வருகிறது.

முழு தர மேலாண்மையை கம்பெனிகளில் நிறைவேற்றுவது எப்படி? இதற்காக டெமிங் 14 கட்டளைகள் வகுத்தார். (பார்க்க பெட்டிச் செய்தியில்!) இந்த பதினான்கு கட்டளைகள் முகேஷ் அம்பானி முதல் மூலக்கடை முத்து வரை அனைவரும் பின்பற்ற வேண்டிய வேதபாடம். நீங்களும் கடைப்பிடித்துப் பாருங்கள், ஜப்பானைப் போல் ஜெயித்துக் காட்டுவீர்கள்!
(கற்போம்)
படங்கள்: வி.ராஜேஷ், ரா.நரேந்திரன்.


1. நமது தயாரிப்புகள்/சேவைகளின் தரத்தை மேம்படுத்துவது, போட்டியில் முன்நிற்பது, தொழிலில் நீடிப்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகிய நோக்கங்களிலிருந்து நாம் எப்போதும் விலகக்கூடாது.

2. இதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்ட காலதாமதம், தவறுகள், குறைபாடான பொருட்கள், வேலைத்திறன் ஆகியவற்றை இனிமேலும் ஏற்றுக்கொள்ள முடியாது.  

3. தரம் தயாரிப்பின் அங்கமாகட்டும்.

4. வாங்கும் மூலப் பொருட்களின் தரத்தை உயர்த்துவோம். விலையை மட்டும் அடிப்படையாக வைத்து மூலப் பொருட்கள் வாங்குவதை நிறுத்துவோம். விலை, தரம் ஆகிய இரண்டும் பொருட்கள் வாங்கும் அளவுகோல்கள் ஆகட்டும்.

5. பிரச்னைகளின் அடிப்படைக் காரணங்களைக் கண்டுபிடிப்போம். பொருட்கள்/சேவைகளின் தரத்தை தொடர்ந்து முன்னேற்றுவோம். விரயம் தொடர்ந்து குறைய வேண்டும்; ஒவ்வொரு செயல்பாட்டிலும் இவை வெளிப்பட்டு, உற்பத்தித் திறன் உயர்ந்து செலவுகள் குறைய வேண்டும்.

6. எல்லோருக்கும் பயிற்சி அவசியம். பயிற்சிக்கு நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தொழிலாளிக்கும் தன் வேலையைச் செம்மையாகச் செய்வதற்கான பயிற்சி தரப்பட்டிருக்கிறதா என்று கண்டுபிடிக்கவேண்டும்.

7. நவீன மேற்பார்வை முறைகளைப் பயன்படுத்த வேண்டும். மேலதிகாரியின் கடமை, அவர் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் தம் பணிகளைச் சிறப்பாகச் செய்ய உதவுவது. தரம் உயர்ந்தால், உற்பத்தித் திறன் உயரும். மேலதிகாரிகள் சுட்டிக் காட்டும் குறைகள், இயந்திரச் சீர்கேடு, தவறான உபகரணங்கள், தவறான உற்பத்தி முறைகள் ஆகியவற்றில் நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8. பயம், முன்னேற்றத்தின் முக்கிய எதிரி. தொழிலாளிகளும் அதிகாரிகளும் சுமூகமாகப் பழகுவதன் மூலம் பயத்தை ஒழிக்கலாம். நிறுவனத்தின் அத்தனை ஊழியர்களும் மாற்றங்களில் பங்கெடுக்க வேண்டும்.

9. கம்பெனியின் பற்பல துறைகளுக்குள்ளும் இருக்கும் பிரிவினைச் சுவர்களை அகற்ற வேண்டும். தயாரிப்புப் பொருட்கள்/சேவைகள் ஆகியவை தொடர்பான பிரச்னைகளை ஆராய்ச்சி, டிசைன், நிர்வாகம், உற்பத்தி ஆகிய எல்லாத் துறைகளும் ஓர் அணியாகத் தோளோடு தோள் கொடுத்து எதிர் மோத வேண்டும்.

10. தர உயர்வைச் செயல்படுத்தவும், விரயங்களைத் தடுக்கவும் தக்க முறைகளைத் தொழிலாளிகளுக்குக் கற்றுத் தரவேண்டும், இதைச் செய்யாமல், வெறும் கோஷங்கள், போஸ்டர்கள், வார்த்தை ஜாலங்கள் ஆகியவற்றில் ஈடுபடுவது பயனற்ற வேலை.  

11. இலக்குகளை எண்ணிக்கைகளில் மட்டுமே வைப்பது பலன் தராது. தலைமைப் பண்புகளை வளர்க்க வேண்டும்.    

12. ஒவ்வொரு தொழிலாளியும், அதிகாரியும் தங்கள் வேலை குறித்துப் பெருமைப்பட வேண்டும்.

13. பயிற்சியால் எல்லோரும் சுய முன்னேற்றம் பெறச் செய்ய வேண்டும். எல்லா நிறுவனங்களுக்கும் நல்ல ஊழியர்கள் இருந்தால் மட்டும் போதாது, இவர்கள் பயிற்சியால் தொடர்ந்து முன்னேறிக்கொண்டேயிருக்க வேண்டும்.

14. தரத்தைத் தொடர்ந்து உயர வைக்கும் நடவடிக்கைகளில் நிர்வாகத் தலைமை முழு அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும்.

(Thanks to Vikatan.com)

Thursday, June 27, 2013

ஒரு பெரிய அவமானத்திற்குப் பிறகு

ஒரு பெரிய அவமானத்திற்குப் பிறகு •

நன்றாகக் குளிக்க வேண்டும்
வெந்நீராக இருந்தால் மிகவும் நல்லது
இருப்பதிலேயே நல்ல அதிகம் பயன்படுத்தாத‌
தெம்பூட்டும் ஆடையை அணியலாம்

தெருவில் இறங்கி நடக்கும்போது
அடிக்கடித் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை

அதிக இறுக்கம் அதிக இணக்கம்
இரண்டுமே நம்மைக் காட்டிக் கொடுத்துவிடும்
குழந்தைகளை இயல்பாகக் கொஞ்சவேண்டும்

மர்மமாகப் புன்னகைப்பவர்கள்
கேட்காமலேயே தம் பேச்சை மாற்றுபவர்கள்
செயற்கையாகப் பேச்சை மாற்றுபவர்கள்
எல்லோரையும் நாகரீகமாக வணங்கலாம்

சாதுரியமாக விரைவாக‌
தப்பிச் சென்றுவிட வேண்டும்
நாம் மதிக்கப்படும் ஒவ்வொரு இடத்திலிருதும்

தனித்த அறை ஒன்றில்
மனங்கசந்து அழும்போது
கதவு தட்டும் ஓசைகேட்டு
கண்களைத் துடைத்துக்கொள்ள வேண்டும்

எல்லையற்றது
இந்த உலகின் தீமை
எல்லையற்றது
இந்த உலகின் கருணை!

-Manushya Puthiran

Wednesday, June 26, 2013

Today's Quote :)

தீயா வேலை செய்யனும் குமாரு....திரை விமர்சனம்

அன்புள்ள நண்பர்களே!!

    வணக்கம். நலம்தானே?

மீண்டும் ஒரு திரைவிமர்சனத்தில் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. நாம் இன்று பார்க்க இருக்கும் படம் தீயா வேலை செய்யனும் குமாரு... வாங்க படத்தை பார்க்கலாம்.

  படத்துல ரெண்டு கதாநாயகன்ங்க. இல்ல இல்ல சந்தானம் சேர்த்து மூணுங்க. ஏன்னா படம் முழுக்க கூட வருவது இவருதாங்க. குமார்(சித்தார்த்) இவரப் பத்தி மொதல்ல பார்க்கலாம். இவர் குடும்பத்துல கொள்ளு தாத்தாவுல இருந்து இவரோட கடைசி அக்கா வரைக்கும் காதல் திருமணம் செய்தவர்கள். ஆனால் குமாருக்கோ காதல் என்றால் வேப்பங்காய். பெண் என்றால் பாகற்க்காய் :). அதற்க்கு காரணமாக அவரது சிறுவயது பிரச்சினைகளையும், அவர் பெண்களிடம் வாங்கிய பல்ப்புகளையும் காமிக்கிறார்கள். இவர் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர். இவர் பணிபுரியும் இடத்தில் இவரை விட உயர்ந்த நிலையில் ஜார்ஜ்(கணேஷ்) இருக்கிறார். செம மேன்லியாக இருக்கும் இவர் மேல் அனைத்து பெண்களுக்கும் ஒரு கண்ணு.

  சஞ்சனா(ஹன்சிகா) இவர்களுடன் வேலையில் சேர, அத்தனை பேரும் மொய்க்க இதில் ரெண்டு கதாநாயகன் மட்டும் விதிவிலக்கா என்ன? சித்தார்த் காதலில் விழ ஆனால் அதற்க்கு கணேஷ் குறுக்கே வருகிறார். இதனால் மோக்கியா என்ற பெயரில் வரும் சந்தானம் இவருக்கு முழு பயிற்ச்சி அழிக்கிறார். பயிற்ச்சி முழுவதும் வயிறு குலுங்க குலுங்க சிரிப்புதாங்க. 
இந்த பயிற்ச்சிக்கு அப்புறம் இவர் ஹன்சிகாவின் காதலைப் பெற்றாரா? என்பதே கதை.


  ஆரம்பத்தில் அப்பாவியாக வரும் சித்தார்த் பெண்களை அசர வைக்கிறார். எப்படி பெண்களை புகழ வேண்டும் என்று தெரிந்து கொள்கிறார். என்ன மாதிரி சராசரி ஆளுங்கதான் உங்க கூட எப்பவும் நாய் மாதிரி சுத்தி வருவாங்க என்று சொல்வதிலாகட்டும், சந்தானம் வைக்கும் பரிச்சைகளில் திருதிரு வென்று முழிப்பதில் ஆகட்டும் மிக அருமை. இயல்பாக நடித்திருக்கிறார்.

  மோக்கியாவாக வரும் சந்தானம் மனதை அள்ளுகிறார். ஒவ்வொரு முறை அவர் உபதேஷம் அளித்து விட்டு பணத்தைக் கறப்பது மிகவும் கலாட்டா. ஹன்சிகாவை காதலிக்க ஜடியாவைக் கொடுத்துவிட்டு அது தன் தங்கைதான் என்று தெரித்ததும் வில்லனாக அவதாரம் எடுப்பது விசேஷ சிறப்பு. பாலியல் தொழில் செய்யும் இடத்தில் இவரும், மனோபாலாவும் அடிக்கும் கூத்து சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு காட்சியிலும் சந்தானம் தன்னுடைய நடிப்பிலும், இவர் ஆப்பிள் முதல் ஜபேட் வரை பெண்களை வகைப்படுத்தி அடிக்கும் காட்சியிலும் மிக மிக கலக்கல்.


   வசனங்கள் நன்றாக இருக்கிறது உதாரணத்திற்க்கு காலையில தென்னமரம் வைத்துவிட்டு, சாயங்காலம் சட்னி கேட்டா எப்படி போன்ற வசனங்கள் சிறப்பு. இசை சத்யா சில பாடல்கள் கேட்கும்படி உள்ளது. ஆனால் மனதில் நிற்க்க வில்லை.

  சுந்தர் C இயக்கத்தில் வந்த இன்னொரு கலகலப்பு. எந்த ஒரு லாஜிக்கும் இல்லாமல் காமெடி மட்டுமே பிராதானமாக வைத்து எடுக்கப் பட்ட படும். ஹன்சிகா கொஞ்சம் உடம்பைக் குறைத்து, ரசிகர்களுக்கு எனர்ஜியை ஏத்தி இருக்கிறார். குஷ்பூவின் உடை வடிவமைப்பில் மின்னுகிறார். சில முகபாவங்கள் குஷ்பூ செய்வது போலவே நமக்கு தோன்றுகிறது.


 எல்லாரும் திருட்டு பசங்க என்று படத்தை முடிக்கிறார்கள். நீங்களும் படத்தைப் பார்த்துட்டு உங்க கருத்த சொல்லுங்க நண்பர்களே.

மீண்டும் சந்திக்கலாமா?

Monday, June 24, 2013

படித்ததில் பிடித்தது :)

* அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது.

* கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது.


* குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது.


* அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுக்கொள்கிறது.


* பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது.


* ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது.


* புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது.


* நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது.


* நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது.


* * 4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும்.


** தினமும் அரை மணி நேரமாவது தந்தை, குழந்தைகளிடம் நண்பனைப்போல் உரையாடுங்கள்

Saturday, May 25, 2013

சூது கவ்வும் திரைவிமர்சனம் (Soodhu Kavvum movie review)

அன்புள்ள நண்பர்களே!!


வணக்கம். 


சமீபகாலமாக நமக்கு நிறைய வித்தியாசமான படங்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதுவும் குறைந்த முதலீட்டில், புது முகங்களை வைத்து எடுப்பது மிகவும் சிறப்பு. இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் மிகவும் வித்தியாசமாகவும், நகைச்சுவையை கலந்தும் கொடுப்பது. அதே வரிசையில் நாம் பார்க்க இருக்கும் திரைப்படம் சூது கவ்வும்.


தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் சினிமா துறையில் கால் பதித்தவர் விஜய் சேதுபதி. அதன் பிறகு சுந்தரபாண்டியன், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணம் போன்ற படங்களின் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் இவர். அதைப் போலவே இந்த படத்திலும் தன் இயல்பான நடிப்பில் அசத்தி இருக்கிறார். 


சரி வாங்க படத்தை பார்க்கலாம் . இந்த படத்தின் உண்மையான கதாநாயகன் திரைக்கதை தான். தாஸ் (விஜய் சேதுபதி) பொதுவாக கடத்தல் தொழில் செய்பவர். ஆனால் கொள்கையோடு சின்ன சின்ன கடத்தல் செய்பவர். அது என்னவென்றால் ஐந்து கொள்கைகளை வைத்துக் கொண்டு அதை மீறாமல் கடத்த வேண்டும் என்று எண்ணுபவர். அவருடன் காதலியாக பயணிக்கிறார் சஞ்சிதா ரெட்டி. மூன்று நண்பர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். ஒரு சண்டையில் தாஸ் உடன் சேர்கிறார்கள். இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து ஒரு மந்திரியின் மகனைக் கடத்த திட்டமிடுகிறார்கள். அதனால் இவர்களுக்கு பெரும் லாபம் இரண்டு கோடி கிடைக்கும் என்று தோன்றுவதால். ஏற்கெனவே அரசியல்வாதிக்கும், மகனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதனால் மகன் தானே தன்னை கடத்த திட்டமிடுகிறான். இவர்களும் அதே நாளில் திட்டமிடுகிறார்கள். எப்படியோ கடத்தியும் விடுகிறார்கள். மகனும் இதற்க்கு கூட்டாக இருப்பதால் 50% என்று பிரித்துக் கொள்வதாக முடிவு செய்கிறார்கள். ஆனால் அரசியல்வாதியோ இவர்கள் கேட்கும் தொகைக்கும், பேச்சுக்கும் மதிப்பு கொடுப்பதில்லை. நான் போலிஸ் மூலம் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி விடுகிறார். முடிவு என்ன ஆனது? பணம் கிடைத்ததா? இருவரும் பகிர்ந்து கொண்டார்களா? இல்லை காவல்துறையிடம் மாட்டிக் கொண்டார்களா? என்பதுதான் மீதிக்கதை.




கதையின் மிகப் பெரிய பலம் நகைச்சுவைதாங்க. ஒவ்வொரு காட்சி அமைப்பிலும் நகைச்சுவையை சேர்த்திருப்பது மிகவும் ருசிக்கிறது. தாஸின் கொள்கைகளையும், அவன் செய்யும் சின்ன கடத்தலையும் காட்டுவது மிகவும் ரசிப்பு. கடத்தி முடித்து விட்டு பணம் கைக்கு வந்ததும், டிப்ஷ் கொடுத்து அனுப்புவது இதுவரை பார்க்காத ஒரு காட்சி. சஞ்சிதா ரெட்டியை ஒரு கற்பனை காதலியாக காட்டி இருக்கிறார்கள். அவரும் அவருடைய பங்கை தெளிவாக செய்திருக்கிறார்.இவரை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யும் காட்சி மிகவும் இனிமை. அரசியல் வாதியாக பாஸ்கரும், அவருடைய மகனாக அருமை பிரகாசமும் நடித்திருக்கிறார்கள். அருமை பிரகாசம், தன்னுடைய அப்பாவிடம் எப்படி பணம் வாங்குவது என்பதை அவர் செயல்படுத்தும் காட்சி அனைவரிடமும் சிரிப்பை ஏற்படுத்தும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இவர்களை பிடிப்பதற்க்காக வரும் காவல்துறை அதிகாரி பிரம்மா சொல்லவே வேணாங்க அவ்வளவும் சுவாரஸ்யம் மிகுந்த பகுதிகள். ராதா ரவி ஓரிரு காட்சியில் மட்டுமே வந்தாலும் மிகவும் கணம்.


இப்படத்தை எழுதி, இயக்கி இருப்பவர் நலன் குமாரசுவாமி. இவர் நாளைய இயக்குனர் மூலம் அறிமுகமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது முதல் படத்தின் மூலம் நல்ல முத்திரையை பதித்து விட்டார் என்று நம்பலாம். இசை சந்தோஷ் நாராயணன். 


நிச்சயமாக பாராட்டவேண்டிய விஷயம் நகைசுவை, குத்துப்பாட்டு மற்றும் டூயட் இல்லாமல், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல் கொடுத்திருப்பது.


வசனங்கள் உதாரணத்திற்க்கு இது இட்லின்னு சொன்னா, சட்னிக் கூட நம்பாது, சென்னைக்கு என்ன பண்ணலாம்ன்னு திட்டம் போட்டு வந்தவன் சாதிக்கல, என்னப் பண்ண போறோம்ன்னே தெரியாம வந்தவங்கதான் ஜெயிச்சிருக்காங்க போன்றவை மிகவும் சிறப்பு.


ஆரம்பக் காட்சிகளில் அடிக்கடி டாஸ் மார்க்கை காட்டி தண்ணி அடிக்க வைப்பதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.


அதிகமான முதலீடு இல்லை, அனைவரும் புது முகங்கள், வித்தியாசமான கதை மற்றும் காட்சி அமைப்பு. நிச்சயம் பாராட்டலாம்.


நீங்களும் உங்கள் கருத்தை சொல்லுங்களேன்?


மீண்டும் சந்திக்கலாமா?


வணக்கம். வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!

Saturday, May 04, 2013

எதிர்நீச்சல் திரைவிமர்சனம் ( Ethir Neetchal Movie Review)


  எதிர்நீச்சல் திரைவிமர்சனம்

அன்புள்ள நண்பர்களே!!

    வணக்கம். நலம்தானே?  மீண்டும் ஒரு திரைவிமர்சனத்தில் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. எதிர்நீச்சல் என்ற ஒரு படம் K பாலசந்தர் அவர்களால் இயக்கப்பட்ட ஒரு படம். அருமையான வரவேற்ப்பை பெற்று இன்றும் நீங்கா இடம் பெற்ற படம் என்றால் அது மிகையல்ல. எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாத அந்த படத்தின் புது வடிவமாக இருக்குமோ என்றால் அதுதாங்க இல்லை. இது ஒரு புது நீச்சல்.ஆனால் எதிர்நீச்சல் :) .சரி வாங்க படத்துல நீந்தலாம், மன்னிக்கவும் அலசலாம் :).

  காலம் காலமாகவே பெயர் வைக்கும் முறையில் உள்ள ஒரு பழக்கம் முன்னோர்களின் பெயர்களையோ அல்லது குல தெய்வத்தின் பெயரை வைப்பதோ பல குடும்பங்களில் உள்ள முறை. அந்த மாதிரி பெயர்களை வைப்பதால் இந்த தலைமுறை கொஞ்சம் கஷ்டங்களை சந்திக்கத்தான் செய்கிறது. அதுவும் பெயர் சுருக்கமும் அதிகமாக உள்ளதால், பெருங்கஷ்டம்தான். அந்த மாதிரி ஒரு பெயராலும், பெயர் சுருக்கத்தாலும் நம் கதாநாயகன் அடையும் கஷ்டமும், பெயரில் ஒன்றுமே இல்லை எல்லாம் நாம் செய்யும் செயலில்தான் இருக்கிறது என்ற கருத்தையும் சும்மா நச்சுன்னு சொல்லும் படம்தாங்க எதிர்நீச்சல்.

 குஞ்சுதபாதம் ( சிவகார்த்திகேயன்) சிறு வயது முதலே இந்த பெயரால் பல அவமானங்களை அடைகிறார். நண்பர்கள் இவரை குஞ்சி என்று செல்லப்பெயரோடு வேறு கூப்பிட கூச்சம் பிடுங்கி தின்கிறது.இதனால் இந்த பெயரை மாற்றினால்தான் பள்ளிக்கூடம் போவேன் என்று அடம் பிடிக்கிறான். ஆனால் அம்மாவுக்கு உடல் நலக் குறைவு வருவதால் பெயரை மாற்றிக் கொள்வதில்லை. ஆனால் இவர் படும் கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளாகிறார். பின்னாளில் தாயார் இறந்ததும் பெயர் மாற்றிக் கொள்ள முடிவெடுக்கிறார். இவர் பெயர் மாற்றம்(ஹரிஷ்) செய்த உடனே கீதா(ப்ரியா ஆனந்த்) என்ற பெண்ணை சந்திக்கிறார். காதலிலும் விழுகிறார்(காதல் குளம் இல்லாமலா நீச்சல் :))

   இவரின் பழைய பெயரை மறைத்து இவர் அவரை காதலிக்கிறார். அது பின்னாளில் தெரிய வர ஏதாவது செய்து உன் திறமையை இந்த உலகிற்க்கு புரிய வை என்று சொல்லிவிடுகிறார். அதனால் தன் பழைய திறமைகளை தூசு தட்டி தன்னை மாரத்தானில் ஐக்கிய படுத்திக் கொள்கிறார். அங்கே இவருக்கு வழிகாட்டியாக வருகிறார் வள்ளி(நந்திதா). சிறந்த வீராங்கனையான இவர் ஊதுபத்தி விற்று பிழைத்துக் கொண்டிருக்கிறார். இந்த விளையாட்டிற்க்கும், வீரர்களின் திறமைக்கும் பின்னாள் என்ன என்ன சதி வேலைகள் நடக்கிறது போன்றவை இவரது பின்கதையில் கணமாக காண்பிக்கப்படுகிறது.

 சிவகார்த்திகேயனுக்கு இது மீண்டும் ஒரு நல்ல வெற்றிப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். காதலில் வழிவதிலும் சரி, தன் பெயரால் படும் தர்மசங்கடமும் சரி, பின்பாதியில் வென்று காட்ட வேண்டும் என்று வெறி கொள்வதிலும் சரி தேர்ச்சி தெரிகிறது.  எழுதி இயக்கி இருப்பவர்  துரை செந்தில்குமார். படம் முழுவதிலும் நிறம்பி வழியும் நகைச்சுவையும், ஒரு கருத்தோடு கதை சொன்ன விதமும் நிச்சயம் பாராட்டப் பட வேண்டிய ஒன்று. ஆனால் தேவையே இல்லாமல் தனுசும், நயன்தாராவும் ஆடிப்பாடுவது கொஞ்சம் ஒட்டவில்லை. இதை தவிர்த்திருக்கலாம்.

 தன் பெயரை மாற்றிக் கொள்ள முடிவெடுக்கும் பொழுது ஒரு ஜோசியரை(மனோபாலா) சந்திக்கும் இடத்தில், நல்ல கலகலப்பு. இங்கே சுவாமிநாதனை சந்திக்கிறார். இவரும் தன்னுடைய பெயர்(பாவாடை சாமி) புலம்பலை சொல்ல, அப்படி ஒரு சிரிப்புதான் போங்க :)


 கதாநாயகியாக பிரியா ஆனந்த். LIC agent இருக்கேன் நீங்க ஒரு பாலிசி போடுங்களேன் என்று சொல்லும் பொழுதும், அவருடன் ஆடிப்பாடும் பொழுதும் கொஞ்சமும் குறையாமல் தன் பங்கை செய்திருக்கிறார்.

 கோச்சாக வரும் நந்திதா, அழுத்தமும், எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கும் துணிவும் நிச்சயம் ஒரு ஓ போடலாங்க. அழுத்தமான மிகவும் கணமான கதாபாத்திரம் மிகவும் உணர்ந்து செய்திருக்கிறார்.



Directed byR. S. Durai Senthilkumar
Produced byDhanush
Written byR. S. Durai Senthilkumar
Screenplay byR. S. Durai Senthilkumar
Story byR. S. Durai Senthilkumar
StarringSivakarthikeyan
Priya Anand
Nandita
Music byAnirudh Ravichander
CinematographyVelraj
Editing byKishore Te.

சதிஷ், மனோபாலா, ஜெயபிரகாஷ், ரவி பிரகாஷ், மதன்பாப் மற்றும் பலர் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து செய்திருக்கிறார்கள். இசை அனிருத். பாடல்களுக்கு கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறார் என்று தெரிகிறது. வாழ்த்துக்கள். தயாரிப்பு தனுஷ் அவர்கள்.

எப்பொழுதுமே மனிதன் வெற்றி பெருவதைத்தான் விரும்புவான். அதுவும் விளையாட்டில் வெற்றி என்றால் அனைவரும் விரும்புவோம். அந்த யுக்தியை இங்கே பயன்படுத்திய விதமும், காசும் பணமும் இருந்தால் திறமை உள்ளவன் பின் தள்ளப்படுகிறான் என்ற செய்தியும், பெயரில் மட்டும் இல்லை உன் பயணம், உன் செயலிலும் இருக்கிறது என்ற ஒரு பெரும் உண்மையும் சொல்லும் படம். எதிர் நீச்சல் , கண்டிப்பாக கரையேற்றம்.

மீண்டும் சந்திப்போமா?

நன்றி!! வணக்கம்!!
வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன் !!
















 

Wednesday, April 24, 2013

கௌரவம் திரைவிமர்சனம்




அன்புள்ள நண்பர்களே,

    வணக்கம். நலம்தானே? நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு நெஞ்சைத் தொட்ட படம் :)

கௌரவம். இந்தப் படம் வருவதற்க்கு முன்பே பெரும் தாக்கத்தை நிறைய் இடங்களில் ஏற்படுத்தியது என்று சொன்னால் அது மிகையாகாது. நடித்து, தயாரித்து வழங்கி இருப்பவர் திரு பிரகாஷ்ராஜ் அவர்கள். இப்படத்தை இயக்கி இருப்பவர் திரு ராதாமோகன் அவர்கள்.

  அர்ஜுன் (அல்லு சிரிஷ், இவர் தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுனாவின் தம்பி) ஒரு தொழில் விஷயமாக தமிழகத்தின் ஒரு மாநிலத்திற்க்கு வருகிறார். எதிர்பாராத விதமாக அவருடைய விமானம் காலதாமததிற்க்கு உள்ளாகிறது. அவருடன் படித்த நண்பன் கிராமம் அருகில் இருப்பதால் சென்று பார்த்துவிட்டு வர நினைக்கிறார். அங்கே அவர் சந்திக்கும் வித்தியாசமான மனிதர்களும், அவர்களுடைய அணுகுமுறையும், இன்னும் தொடரும் தனித் தனியே இருக்கும் டீ குடிக்கும் டம்ளரும் அவரை வரவேற்கின்றன. இதனால் சுவாரஷ்யம் இருந்தாலும்
தன்னுடைய நண்பர் பெயரை சொல்லி விசாரிக்கிறார். அவரை வித்தியாசமாக பார்க்கும் டீக்கடை மனிதர்கள், இங்கெல்லாம் நான்கு பக்கமும் சுடுகாடு தம்பி என்று விரட்டி விடுகிறார். இதை பார்த்துக் கொண்டிருக்கும் மாசி என்பவர், அவர்களை பின் தொடர சொல்லி செல்கிறார். அவர் சண்முகம் (நண்பனின் பெயர்) இப்பொழுது இங்கே இல்லை ஆறு மாசத்திற்க்கு முன்பு அந்த ஊரின் பெரிய மனிதரின் மகளை இழுத்துக் கொண்டு ஓடி விட்டதாக சொல்கிறார். சாதிகளால் பிளவுப்பட்டிருக்கும் அந்த கிராமம், இவன் இப்படிப்பட்ட காரியத்தை செய்ததால் எவ்வளவு பாதிப்பை அடையும் என்று வேதனைப் படுகிறார்.

 இதைக் கேட்டு மனம் வேதனைப் பட்ட அர்ஜுன், நண்பனின் தந்தையை பார்க்க விரும்புகிறார். சண்முகத்தின் தந்தை கையைப் பிடித்துக் கொண்டு அழுகிறார். அவன் எங்கே இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் எங்கேயாவது இருக்கிறான் என்று தெரிந்தால் பரவாயில்லை என்று. இது அர்ஜுன் மனதை மிகவும் பாதிக்கிறது. சென்னை சென்றதும் தன் நண்பனிடம் சொல்லி, ஒரு வாரம் போய் அங்கே தங்கி பார்க்கலாம் என்று முடிவெடுக்கிறார்கள். சண்முகத்தின் பெயரை எடுத்தாலே பலப் பிரச்சினைகள் கிளம்புகின்றது.அங்கே சென்றார்களா, சண்முகத்தை கண்டு பிடித்தார்களா? ஏன் அவர்கள் ஆறு மாதமாக யாரையும் தொடர்பு கொள்ளவில்லை?  என்பதே கௌரவம்.

  ஒவ்வொரு படத்திலும் நல்ல அழகான விஷயங்களை அழகாக சொல்பவர்கள் ராதாமோகன் மற்றும் பிரகாஷ்ராஜ் கூட்டணி.
இந்தப் படத்திலும் அது தவறவில்லை. ஒவ்வொரு காட்சியும், ஒரு விதமான விறுவிறுப்போடும், இயல்பாகவும் நகர்கிறது. அர்ஜுனிடம் ஒரு விபத்து நடந்து விட்டது, கொஞ்சம் காப்பாத்துங்க என்று கேட்கிறார் யாழினி(யாமி கவுதம்). பார்த்த உடன் காதலில் விழும் காட்சி இங்கேயும் நடக்கிறது ஆனால் அது இயல்பாகவும், அழகாகவும் இருக்கிறது. ஆனால் அதை மிகைப்படுத்தாமல் இயல்பாக்கி இருப்பது சிறப்பு.

 நண்பனுக்காக நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்வது, அதற்க்காக பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகள் அனைத்தும் வருவது போன்றவை நன்றாக இருக்கிறது. இவர்களின் தேடலில் யாழினியும், மாசியும் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு காட்சியும் மிக இயல்பு. ஆனால் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டி இருக்கலாம். பொட்டு கதாபாத்திரத்தைக் காட்டும் பொழுதே நமக்கும் தெரிகிறது. அது ஒரு முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் என்று. அந்த கிராமத்தின் அழகை நாம் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். கண்ணுக்கு அப்படி ஒரு குழுமையும், பரவசத்தையும் தருகிறது.

 வசனம் நிறைய இடங்களில் மிக அற்புதம். நாட்டுல தொலைக்காட்சியும், பத்திரிக்கைகளும் இருக்கும் அளவிற்க்கு செய்திகள் இல்லை , தருவித்த பீட்சா அரை மணி நேரத்தில் வரவில்லை என்றால், காசு குடுக்காம இலவசமா சாப்பிடற ஊர்ல இருந்து வர்றீங்க, 20 வருடங்களில் யாரும் என் ஜாதியை கேட்டதில்லை சென்னையில், என் குலத்து பெண்களை சூரையாடும் பொழுதோ அல்லது எங்களை அடிக்கும் பொழுதோ தீட்டு வருவதில்லை மற்ற நேரங்களில் எங்களை தொடுவதில்லை, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

நிறைய குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கிறது. சிறிது நேரப்படத்திற்க்குள் நம்மால் அனுமானிக்க முடியும் விஷயம் அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது. இந்த அனுமானங்களை தவிர்க்க இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் திரைக்கதையில் செலுத்தி இருக்கலாம். இன்னும் கூட கதாபாத்திரங்களுக்கு கணம் சேர்த்திருக்கலாம் உதாரணத்திற்க்கு நாசர், பொட்டு மற்றும் சண்முகம் கதாபாத்திரத்திற்க்கு.



பசுபதியாக பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார். குறை சொல்ல முடியுமா? நன்றாக உணர்ச்சிகளைக் கொட்டி இருக்கிறார். மனைவியாக நடித்திருப்பவரை கொஞ்சம் நடிக்க வைத்திருக்கலாம் என்பது என் எண்ணம். பெண்ணின் சாவில் கூட சாதரணமாக நடித்திருந்தார். அண்ணியும் கூட, அந்த சோகம் நம் நெஞ்சைத் தொடவில்லை. மிகவும் சாதரணமாக இருக்கிறது.  பசுபதியின் மகனாக நடித்திருந்தவர் நல்ல நடிப்பு. கோபம், படபடப்பு, ரோஷம் முதலானவை.

இசை தமன். லேசாக நம் நெஞ்சைத் தொடுகிறது ஒரு கிராமம் பாடல். மற்றவை அவ்வளவாக எட்டவில்லை. இந்த மாதிரி கதைகள் இந்தியா முமுவதும், குறிப்பாக தமிழகத்தில் அதிகமாக நடக்கிறது என்பது நெஞ்சைத் சுடும் நிஜம்.



எப்பொழுதும் உண்மை சுடத்தானே செய்யும்? இன்னும் எத்தனை பெரியாரும், பாரதியாரும், அம்பேத்காரும் வந்தாலும் நம் மக்களின் சாதி வெறியும், வெட்டி கௌரவமும் மாறாது போல் இருக்கிறது. அறியாமையை அகற்றி அனைவரும் சமம் என்ற எண்ணத்தை நம் இளைய தலைமுறையிடம் உருவாக்குவது மட்டுமே இதற்க்கெல்லாம் தீர்வாக அமையும். எதிர்ப்பார்ப்போம் இனி வரும் தலைமுறையிடம் மாற்றம் இருக்கும் என்று. இதை படமாக்கி ஒரு அதிர்வை ஏற்படுத்தியதிற்க்காக நிச்சயம் பிரகாஷ்ராஜ் பாராட்டப்படுவார். நீங்களும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்.

நன்றி!! வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!

மீண்டும் சந்திப்போமா?














Sunday, April 21, 2013

இன்றைய தத்துவம் :)

மரம் சொன்னக் கதை

படித்ததில் பிடித்தது :)


அந்த விஞ்ஞானக் கூடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விஞ்ஞானி தன் மேலதிகாரியிடம் வேண்டினார்.

“நான் என் பிள்ளைகளை இன்று கண்காட்சிக்கு அழைத்துச் செல்வதாய் வாக்குக் கொடுத்திருக்கிறேன். மாலை ஐந்தரை மணிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்”.

மேலதிகாரியும் அனுமதித்தார்.

வேலை மும்முரத்தில் மூழ்கிய விஞ்ஞானி கடிகாரத்தைப் பார்த்த போது மணி இரவு எட்டரை. பிள்ளைகள் வீட்டில் பிரளயம் கிளப்புவார்கள் என்ற பயத்துடன் போனார்.

வீட்டில் மனைவி மட்டுமே இருந்தார். “குழந்தைகள் எங்கே..?” கேட்டதும் மனைவி சொன்னார்.

“சரியாக ஐந்தரை மணிக்குக் கிளம்பி கண்காட்சிக்குப் போய்விட்டார்கள். உங்கள் மேலதிகாரிதான் வந்து அழைத்துப் போனார்” என்று.

விஞ்ஞானி வேலையில் மூழ்கிவிட்டதைப் பார்த்த மேலதிகாரி, அவர் கவனத்தையும் கலைக்க விரும்பவில்லை, குழந்தைகள் கனவையும் கலைக்க விரும்பவில்லை. தானே சென்று குழந்தைகளை அழைத்துச் சென்றார்...

அந்த மேலதிகாரியின் பெயர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்...!

படித்ததில் பிடித்தது :)


ஒரு கறுப்பின சிறுவனை பார்த்த ஒரு வெள்ளைக்காரன் ஏளனமாய் சிரித்தானாம்.

எதற்க்காக சிரிக்கிறீர்கள் ? என்று அந்த சிறுவன் கேட்க நானோ வெள்ளை நீயோ கருப்பு எனக்கு தான் எதிலுமே முன்னுரிமை, வெள்ளையர்கள் தான் மேல் இருப்பார்கள் கருப்பர்கள் கீழே தான் இருப்பார்கள் என்று ஏளனம் செய்து சிரித்தான்.

அந்த வெள்ளையனை பார்த்து அந்த சிறுவன் சிரிக்கத் துடங்கினான். ஏனடா சிரிக்கிறாய் ? என்று கேட்டான் அந்த வெள்ளைக்காரன்.

எப்பொழுதும் வெள்ளை தான் மேலே கருப்பு கீழே என்றீர்களே அதை நினைத்துதான் சிரித்தேன்.. என்னை பொருத்தவரை கருப்பு என் தலைக்கு மேலே, வெள்ளை என் காலுக்கு கீழே என்றான்.

ஒன்றும் புரியவில்லை அந்த வெள்ளையனுக்கு. என்ன சொல்கிறாய் ? என்று கேட்டான்.

கருப்பு என் தலைக்கு மேலே அது " என் தலை முடி" வெள்ளை என் காலுக்கு கீழே அது "என் கால் பாதம்" என்று விளக்கம் கூறினான் அந்த சிறுவன். வாயடைத்துப் போய்விட்டார் அந்த வெள்ளைக்காரர்.

எதையுமே வித்தியாசமாக பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும்...!

வர்கீஸ் குரியன் - இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை


"முகங்கள்"

"இந்தியாவின் பாசமிகு பால்காரர்! - வர்கீஸ் குரியன் - இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை"

ஆனந்த்(குஜராத்):”பாம்பேயில் விற்கும் பால் லண்டனில் சாக்கடை நீரை விட அசுத்தம்” – இங்கிலாந்துக்கு பயணிக்கும் வேளையில் யாரோ கிண்டலடித்தது வர்கீஸ் குரியன் என்ற இந்தியருக்கு ரோஷத்தை ஏற்படுத்தியது. இந்த ரோஷம் இந்தியாவில் உற்பத்தியாகும் பாலை உலகில் மிகச் சிறந்ததாக மாற்றவேண்டும் என்ற சிந்தனையை குரியனிடம் ஏற்படுத்தியது.

இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடந்து வந்த 1921-ஆம் ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வர்கீஸ் குரியன் பிறந்தார். சென்னை லயாலோக் கல்லூரியில் 1940-ஆம் ஆண்டு இயற்பியலில் இளங்கலை பட்டமும், பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் பொறியியல் பட்டமும் பெற்ற குரியன் பின்னர் 1946-ஆம் ஆண்டு ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா எஃகு தொழில்நுட்ப நிலையத்தில் பட்ட மேற்படிப்பை முடித்தார். இத்தோடு நிற்காமல் அரசு உதவித்தொகையில் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக்த்தில் இயந்திரவியல் பொறியியலில் எம்.எஸ் பட்டத்தை சிறப்பு நிலையில் பெற்றார்.

தனது 28-வது வயதில் குஜராத் மாநில கைரா மாவட்டத்தில் உள்ள குக்கிராமமான ஆனந்திற்கு வருகை தந்தார். கால்நடைகளை வளர்த்தல் தொழிலை நிரந்தர வாழ்வாதாரமாக்கிய கிராம மக்களை சுரண்ட ஆங்கிலேயர்கள் களமிறங்கிய பொழுது சுதந்திர இயக்கத்தின் போராட்ட வழிமுறைகளில் ஒன்றாக கருதி சர்தார் பட்டேலும், இன்னும் சிலரும் இணைந்து பால் வள விவசாயிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

1949-ஆம் ஆண்டு ஆன்ந்த் கிராமத்திற்கு வந்த வர்கீஸ் குரியன், எதுவும் யோசிக்காமல் இந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். கெட்டுப்போன பாலை சுத்தப்படுத்தும் இயந்திரத்தை பழுதுபார்க்க வந்த மெக்கானிக் ஒருவர், எதிர்பாராத வகையில் தலைமைத்துவ பண்புடன் பால் வள விவசாயிகளை வழிநடத்தும் காட்சியை பின்னர் இந்திய தேசம் கண்டது. அரசுப் பணியில் சவால்களில்லாமல் வெறுத்திருந்த குரியனுக்கு இது ஓர் நல்ல வாய்ப்பாக அமைந்தது. கைரா பால் சங்கத் தலைவர் திரிபுவன்தாஸ் படேலிடம் பால் பதப்படுத்தும் ஆலையை நிறுவிட உதவுவதாகக் கூறினார். இதுவே அமுல் பிறக்க வழி வகுத்தது. குறைந்த சம்பளத்தில் நியமிக்கப்பட்டாலும் கூட நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களை கொண்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தை இந்தியாவில் மிகப்பெரிய பால் உற்பத்தி சங்கமாக மாற்றிக் காட்டினார் வர்கீஸ் குரியன்.

1950களில் 100 லிட்டர் மட்டுமே பால் உற்பத்தி என்றால் 1990களில் 90 லட்சம் லிட்டராக மாறியது அமுலின் வளர்ச்சி. இன்று 10 ஆயிரம் கோடி ரூபாய் பால் விற்பனை வருமானமும், குஜராத் மாநிலம் முழுவதும் 15 மாவட்ட யூனிட்டுகளும், 16 ஆயிரம் கிராமங்களில் 30 லட்சம் உறுப்பினர்களுடன் அமுல் வளர்ச்சிப் பெற்றுள்ளது. இன்று இந்தியா முழுவதும் பரவியுள்ள அமுலின் உறுப்பினர்களில் பெரும்பாலோர் பெண்கள் ஆவர்.

2006-ஆம் ஆண்டு குரியன், Gujarat Co-operative Milk Marketing Federation Ltd. அல்லது GCMMF இன் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுப் பெற்றார். 1973-ஆம் ஆண்டு GCMMF நிறுவப்பட்டது முதல் குரியனே தலைவராக இருந்து வந்தார்.

பால் வளம் தவிர இன்னும் பல துறைகளிலும் குரியன் தனது கவனத்தை செலுத்தினார். 1979-ஆம் ஆண்டு ஆனந்தில் நிறுவப்பட்ட இந்தியன் இன்ஸ்ட்யூட் ஆஃப் ரூரல் மேனேஜ்மெண்டின் தலைவராக குரியன் நியமிக்கப்பட்டார். பிரட்டனின் இளவரசர் சார்ல்ஸ், நெதர்லாந்து இளவரசி, பிரிட்டீஷ் பிரதமராக பதவி வகித்த ஜேம்ஸ் கலிகன் ஆகியோர் ஆனந்தின் விருந்தினர்கள் ஆவர்.

இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தையான வர்கீஸ் குரியன் தனது 90-வது வயதில் மரணமடையும் வேளையில் 2011-ஆம் ஆண்டு புள்ளிவிபரப்படி பால் உற்பத்தியில் உலகில் இந்தியாவின் பங்கு 17 சதவீதம் ஆகும். முன்பு இந்திய பாலை லண்டனில் ஓடு சாக்கடை நீரைவிட கேவலம் என பேசிய பிரிட்டீஷ்கார்ர்களும் இந்திய பாலுக்காக காத்திருக்கும் பொழுது வர்கீஸ் குரியன் மறக்கமுடியாத சாதனைகளைப் புரிந்துவிட்டு மரணமடைந்துள்ளார்.


வர்கீஸ் குரியன் பெற்ற விருதுகள்;
1963 ரமன் மக்சேசே பரிசு சமூக தலைமைக்காக
1965 பத்மஸ்ரீ
1966 பத்ம பூசண்
1986 கிருஷி ரத்னா விருது (இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து)
1986 வாடேலர் அமைதிப் பரிசு (கார்னெகி நிறுவனம்)
1989 உலக உணவுப் பரிசு
1993 ஆண்டின் பன்னாட்டு மனிதர் – உலக பால்பண்ணை கண்காட்சி, மாடிசன், ஐக்கிய அமெரிக்கா
1999 பத்ம விபூசண்
2007, கரம்வீர் புரஸ்கார்

To know the latest trends & fashions like this page
https://www.facebook.com/Nilafashions

Saturday, April 06, 2013

படித்ததில் பிடித்தது :)


அன்புள்ள நண்பர்களே,

  நான் படித்ததை இங்கே பகிர்கிறேன் :)


அருகம்புல்லுக்கு ஆயுள் முடிவு என்பதே இல்லை. காய்ந்து தீய்ந்து மண்ணோடு மக்கிப் போயிருக்கும். சில துளி மழை விழுந்தால் மறுபடியும் பசுமையோடு சிலிர்த்தெழுந்து முளைக்கும்...

மெய்யான லட்சியங்கள் அருகம்புல்லைப் போன்றவை. அவை மக்கினாலும் மடிந்து போகாது. தருணம் பார்த்து மீண்டும் முளைக்கும். வெற்றி பெரும்வரை ஓய்ந்து போகாது...!

Todays Quotes :)

Monday, April 01, 2013

சாதனை பெண்மணி நவநீதம்பிள்ளை..!


சாதனை பெண்மணி நவநீதம்பிள்ளை..!

1941 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் பிறந்த ஒரு தமிழரான நவநீதம் பிள்ளை ஓர் இந்திய வம்சாவளிப் பெண். தென்னாப்பிரிக்காவின் இனவெறி ஆட்சி முடிவுக்கு வந்ததன் பிறகு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்துக்கு தேர்வுசெய்யப்பட்ட வெள்ளையினத்தவரல்லாத முதல் நீதிபதி என்ற பெருமைக்குரியவர்.

இவர் நிறவெறி மிகுந்த தென் ஆப்பிரிக்காவில், நீதிபதியாக உயர்ந்ததே மாபெரும் சாதனைதான். இப்போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளராக அகில உலகமும் வியப்புடன் பார்க்கும் உயரத்தில் ஜொலிக்கிறார்.

இந்த நீதி தேவதை. சமீபத்தில், தன் முன்னோர்கள் பிறந்த பூமியான இந்தியாவுக்கு வருகை புரிந்த நவநீதம் பிள்ளை, ஊடகங்களின் முக்கிய செய்தியானார்.

தன் வாழ்க்கை முழுதுமே பல வேதனைகளை சந்தித்த இவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே தென் ஆப்பிரிக்காவில்தான். ஏழை குடும்பத்தில் ஒரு பேருந்து ஓட்டுநரின் மகளாகப் பிறந்த இவரை, உலகப் புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வரை சென்று சட்டம் படிக்கச் செய்தது இவருடைய அம்மாதானாம்.
என் அம்மாவை என் தாத்தா பள்ளிக்கு அனுப்ப வில்லை, எழுத, படிக்க தெரிந்து விட்டால், என் அம்மா யாருக்காவது காதல் கடிதம் கொடுத்து விடுவாரோ என்கிற பயம்தான் காரணமாம். தனக்கு நேர்ந்த கொடுமை எங்கள் நால்வருக்கும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் அம்மா மிகுந்த கவனத்துடன் இருந்தார். பெண்களுக்கு கல்வியும் சுதந்திரமும் அவசியம் என்று அவர் நம்பியதால்தான், இன்று நான் இப்படி ஒரு பதவியில் வந்து உட்கார்ந்திருக்கிறேன்! என்கிறபோது ஈரத்துடன் பளபளக்கின்றன அவர் விழிகள்!

1982ம் ஆண்டில் அமெரிக்காவில் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முதுமாணிப் பட்டம் பெற்று 1988 இல் முனைவர் பட்டமும் பெற்றார்.
1967 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் நட்டால் மாகாணத்தின் முதலாவது பெண் சட்டத்தரணியாக அவர் பணியாற்றத் தொடங்கினார். அப்போதே நிற வெறிக்கு எதிராக மிகுந்த உறுதியுடன் குரல் எழுப்பினார் நவநீதம் பிள்ளை. இதற்காக அப்போதைய தென் ஆப்பிரிக்காவை ஆண்ட வெள்ளையர்களால் இவர் சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். ஒரு கட்டத்தில் இவருடைய பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்பட்டது.

அதற்கெல்லாம் அயர்ந்து விடாமல் சட்டத்தின் மூலமே தன்னைத் தற் காத்துக் கொண்டதோடு, நிற வெறியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு விடிவெள்ளியாகவும் விளங்கினார். நிற வெறிக்கு எதிராக 28 ஆண்டுகள் போராடினேன். சட்டக் கல்லூரியில் வெள்ளையர் அல்லாதவர்களுக்கான தனி வகுப்பறையில் படித்துத்தான் சட்டம் முடித்தேன்.
ஒரு வழக்குரைஞராக, நீதிமன்றத்தில் பிறரின் உரிமைகளுக்காக வாதாடிய சமயத்திலும்கூட, நான் வெள்ளையர்களில் ஒருத்தி இல்லை என்ற ஒரே காரணத்துக்காக நீதிபதியின் அறைக்குள் நுழைகிற உரிமை எனக்குத் தரப்படவில்லை. ஆனால், அந்த வலிகளெல்லாம்தான் எனக்கு வலிமை தந்தது என்று தன் வாழ்நாளின் கறுப்புப் பக்கங்களை கசப்போடு திரும்பிப் பார்க்கிறார் நவநீதம் பிள்ளை.

தென்னாபிரிக்க விடுதலைப் போராளிகளுக்காவும் , இவரது கணவர் உட்பட தென்னாபிரிக்க விடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கும் அவர் ஒரு பாதுகாவலராக கடமையாற்றியவர். 1973 இல் நெல்சன் மண்டேலா ரொபன் தீவு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவரை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு வெற்றிகரமாக வாதாடி வெற்றி பெற்றார்.

1992இல் தன்னுடன் வேலை பார்த்த சக வழக் கறிஞர்கள் இருவர் துணையுடன் "இக்வாலிட்டி நவ்" என்ற பெண்களுக்கான மனித உரிமை அமைப்பை தோற்றுவித்து பெண்களின் நலனுக்காகவும் போராடி வருகிற இவர், கறுப்பு இன மக்களின் மனதில் எவரெஸ்ட்டாக உயர்ந்து நிற்கிறார்.

மனித உரிமை சட்டங்கள் பயின்றிருந்த அவர், 1995ல் தென்னாப்பிரிக்காவின் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதுவரை வெள்ளையினத்தவர் மட்டுமே வீற்றிருந்த உயர் நீதிமன்ற நீதிபதியின் ஆசனத்தை அலங்கரித்த வெள்ளையரல்லாத முதல் ஆள் அவர்தான்.

ருவாண்டா இனப்படுகொலையை விசாரிப்பதற்காக டான்ஸானிவின் அருஷா நகரில் அமைக்கப்பட்ட தீர்ப்பாயத்தில் நீதியரசராக நியமிக்கப்பட்டதிலிருந்து சர்வதேச அளவில் அவர் பங்காற்றத் துவங்கினார். நான்கு ஆண்டுகாலம் அப்பொறுப்பை வகித்த பின்னர் தி ஹேக்கிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இவர் நீதிபதியாக இருந்தார்.

2003 இல் இவருக்கு பெண்கள் உரிமைக்கான குரூபர் பரிசு வழங்கப்பட்டது. பூகோள ரீதியாகவும் பாலியல் மற்றும் அனுபவ ரீதியாகவும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் பொறுப்புக்கு இரு குழுக்களால் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த சாதனைக்குப் பின்னால் நிச்சயம் என் கணவர் பரஞ்ஜோதியின் பங்கு இருக்கிறது. அவரும் வழக்குரைஞர் தான். நிற வெறிக்கு எதிராக அவர் வாதாடியதால் ஐந்து மாதங் கள் சிறையில் தள்ளப்பட்டார். இப்போது அவர் உயிருடன் இல்லை என்றாலும் என் மனதிலும் நினைவிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்று உணர்வுபூர்வமாக நினைவுகூர்கிறார் தன் கணவரை ஒரு காலத்தில் வெள்ளையர்கள் எங்களை பிளாக் பியூட்டி என்று அழைத்தனர். ஆனால், குதிரைகளைத் தான் அப்படி அழைப்பார்கள் என்று தெரிய வந்தபோது அந்த வார்த்தையையே நான் வெறுத்தேன். அப்படி, அவர்களின் ரத்தத்திலேயே கலந்திருக்கும் நிறவெறிக்கு ஒரு முற்றுப்புள்ளி வரும் என நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. இப்போது உள்ள குழந்தைகளுக்கு நிற வெறி என்றால் என்ன என்று கூட தெரியவில்லை. அது தான் எங்களின் வெற்றி… என்று கண்களை மூடி மெது வாக சிரிக்கிறார் நவநீதம்பிள்ளை

நீதி என்றும், யாருக்கும் மறுக்கப்படுவதில்லை என்று நம்புவோம்!