அன்பு நண்பர்களே!!!
வணக்கம்!! சுகம்தானே?
மீண்டும் பீட்சா திரைவிமர்சனத்தில் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
திரைப்படங்களில் பலவகை. அவற்றில் இது வித்தியாசமான முயற்சி. பாராட்டுக்குரியது.
எத்தனைக் காலம்தான் நாமும் 100 ரௌடிகளை ஒரு ஹீரோ பொலந்து கட்டுவதயும், மரத்தை சுத்தி சுத்தி டூயட் பாடுவது மட்டும் பார்த்து ரசிப்பது சொல்லுங்கள். தமிழ் சினிமா மாறத் தொடங்கி விட்டது. அதற்க்கான இந்த முயற்சியை நாம் பாராட்ட வேண்டும்.
சாதாரண பீட்சா மையத்தில் வேலை செய்யும் நபராக விஜய் சேதுபதி(மைக்கேல்-கதாபாத்திரத்தின் பெயர்) நடித்துள்ளார். இவர்தான் படத்தின் கதாநாயகன். நாயகி ரெம்யாவும்(அனு-கதாபாத்திரத்தின் பெயர்) இவரும் ஒரு வீட்டில் வசித்து வரும் காதலர்கள். எதிர்பாராமல் கற்பவதியாகிறார்(?). அதனால் வீட்டிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள்.
ரெம்யா ஒரு மனநலம் சார்ந்த படிப்பை படித்தவர். அது மட்டுமல்லாமல், அதிகமாக பேய் மற்றும் கெட்ட சக்திகளை படிப்பது ,பேய் வைத்து கதையும் எழுதும் ஆற்றல் படைத்தவர். ஆனால் நம்ம ,மைக்கேல் இவருக்கு நேர் எதிர். அப்படி பயந்த சுபாவம் கொண்டவர்.
இவர் ஒரு சமயம் பீட்சா வீட்டிற்க்கு விநியோகம் (Home Delivery) செய்ய போகிறார்.மைக்கேல் அந்த வீட்டில் மாட்டிக்கொள்கிறார். அந்த வீட்டில் நடக்கும் பயங்கரமான நிகழ்வுகள்தான் பீட்சா.
ஒவ்வொரு காட்சியையும் மிக மிக விறு விறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர்(Karthik Subburaj). இவருக்கு நாம் கைத்தட்டல்களை பரிசாக கொடுப்போம்.
காதல் இல்லையென்றால் கடத்தல், கொலை, கொள்ளை இதை மட்டும் வைத்து செய்யாமல் ஒரு வித்தியாசமான நோக்கோடு படத்தை நகர்த்தியிருக்கிறார்.
மிக மிக பாராட்டப்பட வேண்டுய ஒன்றாக நான் கருதுவது குத்துப்பாட்டும், ஒயின்சாப்பும், இரட்டை அர்த்த வசனங்களும் இல்லை.
நூறு பேரை அடித்து நொறுக்கும் காட்சி இல்லை, தேவை இல்லாத வசனங்கள் இல்லை.
ஆனாலும் குழந்தைகள் பார்க்க முடியாது ஏனென்றால், அவ்வளவு விறு விறுப்பு (thrilling). பயங்கரமான காட்சி அமைப்புகள்.
விஜய் சேதுபதி நடிப்பில் அசத்தி இருக்கிறார். ரெம்யா கண்களுக்கு மிதமான குளிர்ச்சி. அப்படி ஒரு துறு துறு அழகு.
பணம் மற்றும் அது சார்ந்த அனைத்தும் கவர்ச்சியானது. அதற்க்கு மயங்காதவர்கள் விதி விலக்குகள். நம் மூட நம்பிக்கைகள் மற்றும் பயம் போன்றவை எப்படி எதிராளிக்கு சாத்தியமாகின்றன என்பதே கதை.
பெண்களை பேராசை பிடித்தவர்கள் என்று சொல்கிறார்கள், அது இப்படத்தில் உண்மையாகிறது.
அழகான ஒரு வசனம் என்னை வசப்படுத்தியது, என் முதலாளி ரொம்ப நல்லவர் என்று மைக்கேல் சொல்வார், அப்பொழுது அனு நாமும் ரொம்ப நல்லவங்கதான் என்பார் ( ஆனால் அவர் தவறு செய்வார்). இப்படித்தான் இந்த உலகம் ஓடிகொண்டிருக்கிறதா?
எப்படியோ அரைத்த மாவை அரைக்காமல், காதில் புய்ப்பம் வைக்காமல் நம்மை வெளியே அனுப்புகிறார்கள்
Cast: Vijay Sethupathi, Remya Nambeesan
Director: Karthik Subburaj
Producer: C.V. Kumar
Music: Santhosh Narayanan
Cinematography: George William
Screenplay: Karthik Subburaj
Story/Writer: Karthik Subburaj
படத்தை சார்ந்த அத்தனைப் பேருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டும்.
நன்றி!!
மீண்டும் சந்திப்போம்!! வாழ்க வளமுடன் !!
-- அனு
Wednesday, November 14, 2012
பீட்சா---- திரைவிமர்சனம் (pizza movie review)
Friday, November 09, 2012
மாவீரன் நெப்போலியன்
பிரான்ஸ் நாட்டினை ஆட்சி செய்தவர் மாவீரன் நெப்போலியன்.
இந்த மாவீரன் வேற்று நாடாகிய இங்கிலாந்து நாட்டின் மருத்துவரும் விஞ்ஞானியுமான ஜென்னர் மீது அதிக மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்.
மருத்துவர் ஜென்னர் கொள்ளை நோய் எனப்படும் வைசூரி நோய்...
இந்த மாவீரன் வேற்று நாடாகிய இங்கிலாந்து நாட்டின் மருத்துவரும் விஞ்ஞானியுமான ஜென்னர் மீது அதிக மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்.
மருத்துவர் ஜென்னர் கொள்ளை நோய் எனப்படும் வைசூரி நோய்...
க்கு மருந்து கண்டுபிடித்தவர்.
எதிரி நாட்டு விஞ்ஞானியை ஏன் மதிக்கிறீர்கள் என்று நெப்போலியனிடம் கேள்வி கேட்டனர். அதற்கு, மன்னர்களின் பெருமை போரில் ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொல்வதில் இருக்கிறது. அவர்களால் தாங்கள் அழித்த உயிர்களை மீண்டும் தர இயலாது. ஆனால், டாக்டர் ஜென்னர், வைசூரி நோயால் இறக்காமல் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் சேவையைச் செய்துள்ளார். எனவே, ஒரு மன்னர் விஞ்ஞானியை மதிப்பதுதான் நியாயம் என்று கூறியுள்ளார் மாவீரன் நெப்போலியன்.

Thursday, November 01, 2012
பார்த்ததில் பாதித்தது :(
அன்பு நண்பர்களே!!
வணக்கம். நான் இந்த படத்தை பார்த்ததும் என்னை மிகவும் பாதித்தது. இப்படி ஒரு நிலைமைக்கு நாம் வந்து விடக் கூடாது. ஆனால் யாராவது செய்வார்கள் என்று நாம் அமைதியாக இருக்கிறோமோ என்றும் ஒரு கேள்வி உள்ளே!! உன்னால் முடியும் தம்பி என்ற படத்தில் வரும் ஒரு வசனம் என் நினைவில் பசுமையாக. ஒரு கை உன்னை காக்க, மற்றொரு கை ஊரைக் காக்க. நாமும் ஏதாவது செய்வோம்!! வாருங்கள் தோழிகளே!! வாழ்க வையகம் !! வாழ்க வளமுடன்!!

படித்ததில் வியந்தது :)
அன்பு நண்பர்களே!!
வணக்கம். உலகில் விலை மதிப்பிட முடியாத விஷயங்கள் நிறய்ய உள்ளன. அவற்றில் ஒன்றுதான் "தாய்ப் பால்". அதையும் ஒரு தாய் மற்ற குழந்தைகளுக்காக பகிர்ந்ததை நான் வியந்து உங்களுடன் பகிர்கிறேன். நீங்களும் வியப்பீர்கள் அதில் எனக்கு வியப்பில்லை :)
கிரேட் அலிசியா!
இங்கிலாந்தில் உள்ள கிரான்பரி என்ற இடத்தை சேர்ந்தவர், அலிசியா ரிச்மேன். 28 வயதே ஆன இந்த இளம்பெண் தாய்ப்பாலை தானமாக வழங்கி கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறார். வளரும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை காட்டிலும் சிறந்த உணவு இல்லை என்பதை விஞ்ஞானிகளே எடுத்துக்கூறும் சூழலில், இன்றைக்கு பல தாய்மார்கள் அழகு குறைந்துவிடுமோ என்று எண்ணி பெற்ற குழந்தைக்கு தாய்ப்பால் தரவே தயங்குகின்றனர்.
இப்படியான நிலையில், தன் மகனை பிரசவித்த முதல் நாளில் இருந்தே, அதாவது கடந்த ஆண்டு ஜுன் மாதம் தொடங்கி இந்த ஆண்டு மார்ச் வரைக்குமான 10 மாத காலத்தில் 11 ஆயிரம் அவுன்ட்ஸ் தாய்ப்பாலை, தாய்ப்பால் வங்கியில் தானமாக வழங்கியிருக்கிறார், அலிசியா. அதனை அந்த வங்கி பெற்று தாய்ப்பால் பருக வாய்ப்பில்லாத குழந்தைகளுக்கு வழங்கியிருக்கிறது. மிக அதிக அளவில் தாய்ப்பாலை தானமாக கொடுத்து கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றிருக்கிறார், இந்த சேவைப் பெண்!

வாழ்க வளமுடன். நன்றி : அவள் விகடன்.

Thursday, October 25, 2012
பார்த்ததில் ரசித்தது :)
அன்பு தோழமைகளே!!
வணக்கம் :)பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன் ஒரு சமயம். அப்பொழுது என் கண்ணில் பட்ட ,நான் மிகவும் ரசித்த படத்தை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நிச்சயமாக நீங்களும் ரசிப்பீர்கள் என்று நினைக்கிறேன் :).
எப்படிதான் இப்படி யோசிக்கிறாங்களோ!! ரூம் போட்டு யோசிப்பாங்களா இருக்கும். :)
Saturday, October 20, 2012
Tuesday, October 09, 2012
இங்கிலிஷ் விங்கிலிஷ் --- திரைவிமர்சனம்
செந்தூரப்பூவே! செந்தூரப்பூவே! ஜில்லென்ற காற்றே!!........ என்ற பாடலுக்கு தாவணி விசற ஊஞ்சலில் ஆடும் ஸ்ரீதேவியை அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியுமா என்ன? ஆம் மீண்டும் ஸ்ரீதேவி தலைக்காட்டியிருக்கும் படம் இது. ஒவ்வொரு வயதிலும் பெண்மை அழகாக மிளிரும் என்பது எவ்வளவு உண்மை. அதை மெய்பித்திருக்கிறது. ஸ்ரீதேவி அவர்களின் நளினமும்,அழகும். நடிப்பில் மீண்டும் அசத்தியிருக்கிறார்.
ஒரு பெண் எத்தனையோ அவதாரங்கள் எடுக்கிறாள். ஒரு தாயாக , ஒரு மனைவியாக, ஒரு மருமகளாக இருக்கும் பெண்களுக்கும் மனசு இருக்கும் மற்றவர்களைப் போல, அதில் வலியும் இருக்கும் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்கள். கணவன் , மனைவியை எப்படி மதிக்க வேண்டும், அவளுடைய திறமையை எப்படி ஊக்கப்படுத்த வேண்டும் என்பதும் நன்றாக சொல்லியிருக்கிறார்கள். சஷி(shashi) என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்ரீதேவி அவர்களுக்கு ஆங்கில அறிவு குறைவாக இருக்கும். தன் தாய்க்கு ஆங்கில அறிவு இல்லை என்பதை அவமானமாக கருதுகிறது பெண் குழந்தை. தன் தந்தையிடம் மட்டும் அனைத்தையும் பகிர்கிறாள். மொழி அறிவு , தாய்க்கும், குழந்தைக்கும் இடைவெளி ஏற்படுகிறது. ஒரு தாய்க்கு குழந்தையின் விலகல் எவ்வளவு வேதனையான விஷயம்.அதை அழகாக வெளிப்படுத்தி இருப்பார். ஆங்கிலம் தெரியாமல் உடைந்து அழும்பொழுது, நம் கண்களிலும் கண்ணீர்.
சஷி சிறு தொழிலாக லட்டு செய்து விற்பதை கணவன் கேலி செய்வது , சிறு விஷயத்தில் கூட மனைவியை ஊக்கப்படுத்தாமல் புண்படுத்துவது எவ்வளவு வலிகளை உண்டு பண்ணுகிறது என்பதை ஆண்களுக்கு கொடுத்திருக்கும் குட்டு. அங்கங்கு சர்க்கரைப் பொங்களில் வரும் முந்திரியைப் போல் நகைச்சுவையையும் இயக்குனர் கலந்திருக்கிறார்.
சஷி சூழ்நிலைக் காரணமாக நியூயார்க் செல்கிறார் தனியாக. அங்கேயும் ஆங்கிலம். நொந்து விடுகிறார் சஷி. ஒரு ஆங்கிலம் கற்று கொடுக்கும் விளம்பரம் பார்க்கிறார். ஆங்கில வகுப்பில் போய் சேர்கிறாரா ? இல்லையா? வாழ்வை எப்படி சுவையாகவும் சுவாரஷ்யமாகவும் மாற்றுகிறார்? இதுதான் கதை. இயக்குனரின்(Gauri Shinde) முயற்சியை நிச்சயமாக பாராட்ட வேண்டும். மிக நுண்ணிய உணர்வுகளைக் கூட அழகாக சொல்லியிருக்கிறார்.படம் பார்த்துட்டு உங்களோடு கருத்தையும் இங்கே பதிவு பண்ணுங்க.
சின்ன சின்ன விஷயங்கள் கூட நச்சுன்னு உரைக்கும். சஷி செய்திதாளை கையில் எடுத்து பிரிக்கும் நேரம், கணவன் "சஷி டீ கொடு" என்ற குரல் வரும். செய்திதாளை கணவன் கையில் கொடுத்து விட்டு, ஏக்கமாக பார்த்து செல்வார். முதல்முறை என்பது ஒரு முறை மட்டுமே வரும் விஷயம், அதை நம்பிக்கையோடும், சந்தோஷத்தோடும் எதிகொள்ளுங்கள் என்று ஒரு வசனம் வரும். ரொம்ப நன்றாக இருக்கும். சமையல் "ஆண் செய்தால் கலை , அதுவே பெண் செய்தால் வேலை" என்று ஒரு வசனம் வரும். அழகாக சொல்லப்பட்டிருக்கும். ஒரு மொழி தெரிந்து பேசினால் சிறப்பு, ஆனால் தெரியாத மொழியை முயன்று பேசினால் அது அதைவிட சிறப்பு ஆமாதானங்க!!!
படிச்சிட்டு, படத்தை பார்த்துட்டு உங்க கருத்த சொல்லுங்க !! மீண்டும் சந்திபோமா....
Friday, May 25, 2012
தண்ணீர் தேவதை!!!
தண்ணீர் தேவதை!!!
·
மழை
நீரை சேமிக்கிறோமா?
தண்ணீர்..
தண்ணீர்.. என்று படமெடுத்து விட்டார் திரு K.பாலசந்தர் அவர்கள்.
தண்ணீருக்காக
ஒரு புது தேசத்தையே
காட்டிவிட்டார் திரு வைரமுத்து
அவர்கள்.
கோடைகாலத்தில் அனைவராலயும் மகிழ்ச்சியாக
இருக்க முடிவதில்லை... காரணம்,வெப்பமும்,
வேர்வையும்.
எங்கேயும்
தண்ணீர் தட்டுப்பாடு. விவசாயிகள் படும் பாடு சொல்லி மாளாது. வறட்சி.. வெருமை.. தாகம்... தவிப்பு..
தண்ணீர். அனைத்து ஜீவ ராசிகளும்
பாதிக்க படுகின்றன.ஆனால்
மழைக் காலத்தில் ...
ஆறும்,குளமும்,ஏரியும் நிரம்பி வழிந்து
அதன் சந்தோஷத்தை
காட்டுகின்றன..
நீர் நிலைகளிலோ மீன்களின் கொட்டம்... நீரால்..
கொக்குகளுக்கும், மனிதர்களுக்கும்
கொண்டாட்டம்... மீனால்..
குளத்திலோ
அல்லியும், தாமரையும் கதை பேசிக்கொண்டிருக்கின்றன.
இப்படியாக புல்வெளிகள், தோட்டம், தோப்புகள் அனைத்தும் ஆரவரித்து தாகம் தீர்க்கின்றன.
விவசாயிகளுக்கோ
ஆனந்த பரபரப்பு..
எங்கும்
பசுமையும், அது
தரும் குளிர்ச்சியும்
மட்டுமே..
இந்த சந்தோஷங்களை எல்லாம் பார்த்து மகிழ்ச்சியாக
மரங்களும் தங்களின் பணிகளை தொடங்குகின்றது அடுத்த
மழைக்காக...
இப்படிப்பட்ட சந்தோஷத்தை அள்ளித்தரும் தண்ணீர்
தேவதையை
நாம் எப்படி பாதுகாக்கிறோம்?
·
மரங்களை
நடுகிறோமா?
·
விளை
நிலங்களில் வீடுகட்டுவதை நிறுத்தி விட்டோமா?
·
மரங்கள்
வெட்டுவதை எப்பொழுது நிறுத்தப்போகிறோம்?
·
இதை
எல்லாம் எப்பொழுது செய்யப்போகிறோம்?
·
வரும்
சந்ததியினருக்கு என்ன விட்டுப்போகப்போகிறோம்?
நமது
சந்ததியினருக்கு காசு பணம் வேண்டாம்.
தண்ணீரும்,ஆரோக்கியமும் மட்டுமே வேண்டும். நீரின்றி
அமையாது உலகு என்ற கூற்றின்
படி, உலகை வாழ
வைப்போம்.
மனிதர்களைப் போல்
தன்னைமட்டும் நினையாமல்,
உலகையே வாழ வைக்கும் மகாத்மாக்களான
மரங்களை வளர்த்து மனித
வளம் மற்றும்
நாட்டின் வளத்தைக் காப்போம்!
வாழ்க வையகம்!!
Friday, May 18, 2012
REIKI
The Five
Admonitions
• Observe throughout the day, with all your effort, the arising of anger, then look deeper for its true cause.
• Observe your mind throughout the day for the arising of worry and restlessness, look deeper at their roots.
• Be mindful, each moment of your day, appreciating the gift of life, find the right livelihood for yourself and be honest in your work.
• In your day, as you appreciate your life, be kind to yourself and to all beings.
• Your mind and body will truly transform with the power of Reiki, practice daily, connect to the universal nature of mind, and develop these Reiki ideals everyday.
— From Jin Ki Do Reiki

Wednesday, May 09, 2012
கடவுளை எளிமையாக வழிபடுங்கள்
உன்னை யாராவது புகழும்போது மகிழ்ச்சி அடையாதே. அதேபோல், உன்னை இகழும் போது கவலையும்
கொள்ளாதே.
புகழையும், இகழையும் சமமாகக் கருதுபவனே மனஅமைதியுடன் வாழ முடியும். ஆண்டவனை வழிபடுவதைக் காட்டிலும், அடியாரை வழிபடுவது சிறந்தது. ஆண்டவனை வழிபட்டால் ஒரு மடங்கு பலன். அடியாரை வழிபடுவோருக்கு இருமடங்கு பலன். தாய், தந்தையரின் பழக்கம் தான் பிள்ளைகளிடத்தில் உண்டாகும். ஆகவே, நல்ல பழக்கவழக்கங்களைப் பிள்ளைகளிடத்தில் உண்டாக்க தாயும், தந்தையும் நெறிமுறைகளைப் பின்பற்றி ஒழுக்கத்தோடு வாழ வேண்டும்.
நாம் செய்த செயல்களின் விளைவு நம்மை வந்து சேரும். நல்வினையும், தீவினையும் வயலில் விதைத்த விதைபோல, பலமடங்கு பெருகி நம்மையே வந்தடையும். இளகிய தங்கத்தில் ரத்தினக்கல் பதியும். அதுபோல,
இறைவனை மனமுருக வழிபட்டால் உருகிய நமது உள்ளத்தில் கடவுள் ஒன்றி விடுவார். எங்கும் நிறைந்த இறைவனை எளிமையாகவே வழிபடுங்கள். சாதாரணநீரும், பூவும் கொண்டு இறைவனின் திருப்பாதங்களை பூஜியுங்கள். அவரை ஆடம்பரமாக பூஜிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. அன்பையும், ஒழுக்கத்தையும் மட்டுமே ஆண்டவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்
-- கிருபானந்த வாரியார்

Thursday, March 08, 2012
காலம் யார் கையில்?
* அறிஞர்களை வெற்றிகொள்ள, அறிவீனர்களுடன் வாதம் புரிய, தன்னைச் சுற்றி கூட்டம் சேர்க்க.. இந்நோக்கங்களுக்காக கல்வி கற்பவர்கள் சுவனத்தில் (சொர்க்கத்தில்) அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
* இறைவனே உங்களுக்காக நட்சத்திரங்களைப் படைத்தான். அவற்றின் மூலம் தரை மற்றும் கடலின் இருள்களில் நீங்கள் வழி தெரிந்து கொள்வதற்காக!
* இறைவன் கூறுகிறான்: காலத்தை திட்டாதீர்கள். காலத்தைத் திட்டுபவன் என்னை துன்பத்திற்கு உள்ளாக்குகின்றான். (ஏனெனில்) காலம் என் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. நானே இரவை பகலாக ஆக்குகின்றேன்.
* காலத்தைக் கணிப்பதற்கும், வெளிச்சத்தைத் தருவதற்கும் தான் சூரியனும், சந்திரனும் படைக்கப்பட்டனவே தவிர, அவற்றின் சுழற்சியைக் கொண்டு நன்மை தீமையைக் கணிப்பதற்கு அல்ல.
* பறவைகளைப் பறக்கவிட்டு அதனால் சகுனம் பார்ப்பது, கல்லெறிந்து குறிகேட்பது ஆகியவை இறைவனன்றி மற்றவற்றை வணங்குவதற்கு இணையான செயலாகும்.
- வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து
தெய்வத்தன்மையை இழக்காதீர்
* தெய்வீகம் எப்போதும் மனிதனிடம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதை விழிப்படையச் செய்து எழுந்திருக்கச் செய்யுங்கள்.
* ஒவ்வொரு கடமையும் புனிதமானது தான். கடமையில் பக்தியுடன் இருப்பது தெய்வ வழிபாட்டில் மிக உயர்ந்த முறையாகும்.
* நம்மிடமுள்ள தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழி, பிறர் தங்கள் தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கு உதவி செய்வதே.
* இன்னல்கள் அனைத்துக்கும் நடுவிலும், நமது தெய்வத்தன்மையை இழக்காமல் இருக்க வேண்டும்.
* கோயிலாலோ, விக்ரகத்தின் அழகாலோ இறைவன் மகிமை பெற்றான் என்பதில்லை. கடவுளால் தான் அவற்றுக்குப் பெருமை.
* பணத்திற்காக, உடல்நலத்திற்காக, சொர்க்கத்திற்காக, ஞானத்திற்காக அல்லாமல் மன சுத்தத்துக்காக பிரார்த்தனை செய்யுங்கள். பிற பிரார்த்தனைகள் அனைத்தும் சுயநலம் தான்.
- விவேகானந்தர்

வினாடியைக் கூட வீணாக்காதே
கடமைகளைச் செய்யாமல் வீணே காலம் கழிக்கும்போது, நேரம் உன் கரங்களில் கனக்கிறது. உனக்கென கொடுக்கப்பட்ட வாழ்நாட்களில் ஒரு வினாடியைக்கூட வீணாக்கக்கூடாது. இறைவன் காலஸ்வரூபன், நேரம் இறைவனின் உடல்.
தாய் குழந்தைக்குப் பாலூட்டுவது அவள் கடமை. ஆனால், கடமை என்று நினைத்து அவள் அதைச் செய்வதில்லை. அன்பு மயமாகிப் பாலூட்டுகிறாள். தெய்வநிலைக்கு உயர்கிறாள். அப்படி நமது கடமைகளையும் அன்பு மயமாகிச் செய்யக்கூடுமானால் கடமை சுமையாகத் தெரியாது. அந்தப் பரிபக்குவத்தை எய்தும்போது நாம் கடவுள் தன்மையை எய்தியவர்களாவோம். கடமை உணர்வு வெளியே இருந்து உள்ளுக்குள் பாய்வது. அன்புணர்வு உள்ளேயிருந்து பிரவகிப்பது.
ஆன்மிக வெற்றியை அடைவதற்கு மிகவும் நேரான வழி நிஷ்காம கர்மமேயாகும். செயலின் பலனை நாம் அனுபவிக்க வேண்டும் என்று பற்றுதலில்லாமலும், அக்கறை கொள்ளாமலும் செயலே நிஷ்காமகர்மம் செயலை கடமையாக, அர்ப்பணமாக, வழிபாடாகச் செய்தல் வேண்டும். செயலும் பயனும் வெவ்வேறான வஸ்துக்கள் அல்ல. செயலின் முடிவுநிலை, உச்சகட்டம் முற்றுப்புள்ளி. பலனாகும் மலரே கனி. கனியே மலர். ஒன்று தொடக்கம், மற்றொன்று அதன் தார்மீகமான முடிவு. மலரே பழமாகிறது. செயலே அதன் விளைவுகளாகிறது. செயல் புரிவது ஒருவர் கடமை. நன்றாகச் செயல் புரியுங்கள். கடவுள் பயத்துடன் புரியுங்கள். அன்பினில் தோய்ந்து செயல் புரியுங்கள். மலருக்குப் பிறகு பழம் கனிவதுபோல, செயலை, விளைவுகள் இயல்பாகத் தொடரும். இடைவிடாத நம்பிக்கை, உற்சாகத்துடன் செயல் புரியுங்கள். வெற்றி நிச்சயம்.
-Saibaba

Subscribe to:
Posts (Atom)