Dear All,
Good Morning!!!!

Good Morning!!!!

குழந்தைகளுடன் பேசுங்கள்!
கோடைகால விடுமுறையில், குழந்தைகள் இருக்க, என்ன செய்வதென்று அறியாது பெற்றோர், மாணவர்களை பல கோடைகால வகுப்புகளுக்கு அனுப்புவதில் முனைப்பு காட்டுகின்றனர். இப்போதாவது குழந்தைகளுடன் உட்கார்ந்து பேசுங்களேன் பெற்றோரே!
ஒவ்வொரு குழந்தையும், 1-5ம் வகுப்பு வரை கற்றுத்தரும் அடிப்படை கல்வியை வைத்தே, உயர்கல்வி கற்கும் ஆற்றலை பெறுவர். 1-5ம் வகுப்பு வரைதான் அவர்களின் மனதில், எந்தவொரு சிந்தனையும் இல்லாது, எடுத்து கூறுவனவற்றை உள்வாங்கும் ஆற்றல் பெற்றிருப்பர்.
இச்சமயத்தில், குழந்தைகளுக்கு படிப்பையும், நற்பண்புகளை வளர்க்கும் குணத்தையும் உருவாக்குவது முக்கியம். நாகரீக உலகில் பரபரப்பான சூழலில் அங்கும், இங்கும் பறக்கும் பெற்றோர், குழந்தைகளுடன் அமர்ந்து நேரத்தை செலவிடுவது அரிதாக உள்ளது.
படிப்பில்லாத கலையை கற்க, செலவழித்து பல பள்ளிகளுக்கு அனுப்புவது சிறந்த காரியம் தான்.
ஓராண்டு முழுவதும் புத்தகப்பையும், பேனாவும் பிடித்து அலைந்த கைகள், அடுத்தபடியாக எதை கற்க விரும்புகிறதோ, அதில் நாட்டத்தை செலுத்த விடுங்கள். நம் பிரியத்தையும், கனவையும் அவர்களின் தலையில் வைக்காமல், அவர்களின் விருப்பத்தை அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்வது நல்லது. விடுமுறையில் ஒரு நாளைக்கு குறைந்தது, 3 மணி நேர வகுப்புக்கு மட்டும் அனுப்புங்கள். மீதமுள்ள நேரத்தில், பெற்றோர், குழந்தைகளுடன் அமர்ந்து பேசலாம். இந்த விடுமுறையில்...
* பெற்றோர், குழந்தைகளுடன் அமர்ந்து பேசும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். இதுவே, அவர்களின் மனநிலையையும், விருப்பங்களையும் அறிந்து கொள்ள உதவும்.
* விடுமுறை நாட்களில் அனுப்பும் வகுப்புகள், அவர்களுக்கு பிடித்தவையாக இருக்க வேண்டும். அப்போது தான், அதில் முழு ஈடுபாடு செலுத்தி சிறந்து விளங்குவர்.
* இதெல்லாவற்றையும் விட, ஊரில் இருக்கும் பாட்டி, தாத்தா உடன் நாட்களை கழிக்க வைப்பது, இன்னும் பல அனுபவங்களை கற்று தருவதோடு, வித்தியாசமான சூழலை அறியும் வாய்ப்பாகவும் அமையும்.
* சில குழந்தைகள், வீடியோ கேம் விளையாடியே நேரத்தை போக்குவர். அதில் மூழ்கி விளையாடும் போது, ஏதாவது ஒரு விளையாட்டில் தோற்றால், மன வருத்தம் அடைகின்றனர். இதற்கெல்லாம் இடம் தராமல், உங்கள் அன்பான பேச்சு காதில் விழுந்தால் மன அழுத்தம் ஏற்படாது.
குழந்தைகளின், 1-5 வகுப்பு வரையிலான பராமரிப்பு முக்கியமானது, ஆகையால், அவர்களுடன் முடிந்தளவு பெற்றோர்கள் உடன் இருந்து பார்த்துக் கொண்டால், எதிர்காலம் சிறப்பாக அமையும்



தினமும் குறைந்தது இரண்டு முறை குளிக்கவேண்டும். கேலமைன் (calamine)லோஷன் தடவுவது நல்லது.
நல்ல காற்றோட்டமான அறையில் இருந்தால், தோலில் ஏற்படும் அடைப்பு
சரியாகிவிடும். பருத்தி ஆடைகளைப் பயன்படுத்த வேண்டும். சன்ஸ்க்ரீன் மற்றும்
ஆன்டிபயாடிக்ஸ் பயன்படுத்துவது நல்லது.
இளம் சூடான நீரில் உள்ளங்கைகள், பாதங்களை 10 முதல் 15 நிமிடங்கள்
வைத்திருந்து எடுத்தால் வியர்வை குறையும். வியர்வையை அழுத்தித்
துடைக்காமல், மிருதுவான துணியால் ஒத்தி எடுக்கவேண்டும். இது தற்காலிகத்
தீர்வுதான்.
சித்த மருத்துவத்தில் தீர்வு தேடுவோர் 100 கிராம் செண்பகப்பூ, ரோஜா
மொட்டு, பொன் ஆவாரம்பூ, தவனம் போன்ற பூக்களை உலர்த்தி, அத்துடன் கடலைப்
பருப்பு சம அளவு எடுத்து, சிறிதளவு வெட்டிவேர், சந்தனம், வெள்ளரி விதை,
முல்தானி மட்டி, கால் கிலோ பயத்தம்பருப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
இந்தப் பொடியைத் தினமும் தேய்த்துக் குளிக்க, வியர்வை நாற்றம் நீங்கும்.
வியர்வையில் பூஞ்சைகள் வளரக்கூடும். அதனால், குளித்து முடித்ததும்
வியர்க்குரு பவுடர் போடுவதன் மூலம் இதுபோன்ற பூஞ்சைப் பிரச்னையைத்
தவிர்க்கலாம்.
உணவில் வெங்காயம் அதிகம் சேர்க்கக் கூடாது. டியோடரன்ட், சென்ட், க்ரீம்கள் பயன்படுத்துவதையும் தவிர்க்கவும்.
வெயிலில் அதிகம் அலைபவர்களுக்கு நிறம் மங்கும். கை, கழுத்து, முகம்
பகுதிகளில் கறுத்துவிடும். நல்ல நிறத்துடன் இருப்பவர்கள் வெயிலில்
போய்விட்டு வந்தால், கன்னம் மற்றும் முகம் சிவந்துவிடும். உடலில் மூடப்படாத
பகுதியைத்தான் சூரியக் கதிர் நேரடியாகத் தாக்கி, எரிச்சலை
ஏற்படுத்துகிறது.
கழுத்தில் அணியும் நகைகள், மஞ்சள் கயிறு இவற்றால் அலர்ஜி, அரிப்பு ஏற்பட்டு, தோலின் நிறம் மாறிவிடும்.
பாதிக்கப்பட்ட இடத்தில் பப்பாளியை அரைத்துப் பூசுவதன் மூலம் பலன் கிடைக்கும்.
தோல் பாதிக்கப்படாமல் இருக்க சன்ஸ்கிரீன் போடலாம். முடிந்தவரை, பகல் 11
மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்கலாம்.
அழகுப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதற்குப் பதில், கேலமைன் க்ரீம்களைப் பயன்படுத்தலாம்.
தினமும் ஐந்து முறை முகத்தை உங்கள் சருமத்துக்கு ஏற்ற சோப்பினால் கழுவ வேண்டும்.
ஜாதிப்பூ மொட்டு, முல்லை மொட்டு இரண்டையும் சம அளவு எடுத்து, பால் விட்டு
நைஸாக அரைத்து, பருக்களின் மீது பூசுங்கள். பருக்கள் மறைந்துவிடும்.
நிறமும் கூடும்.
எலுமிச்சம்பழச் சாறு, பாதாம் பருப்பு, தயிர் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால், முகப்பருக்கள் மறையும்.
ஆறு மாதங்கள் தொடர்ந்து டாக்டரின் அறிவுரையின்பேரில் மாத்திரை, மருந்துகள்
மற்றும் களிம்பு பயன்படுத்துவதன் மூலம், முகப்பரு மறுபடியும் வராமல்
தடுக்கலாம்.
