Saturday, August 27, 2011

படித்ததில் பிடித்தது........



ஆசிரியர் : அனுராதா ரமணன்

கதை : இரண்டாவது வாழ்க்கை

" இதோ ... இதுதான் சந்தோஷம். இந்த நிமிஷத்து இனிமை ...
நாளைக்கு எப்படியோ? இரண்டாவதாய் ஒரு வாழ்வு வரும்....
அது வரையில் மூலையில் முடங்கி கிடப்போம்
என்று விரக்தியுடன் இருக்காதே....
முதல் வாழ்க்கையை கூடுமான வரையில் செப்பனிடப் பார்.
பசுமைகளைத் தாங்கப் பழகு .... அதனால் வலுவிழக்கமாட்டாய். பலசாலியாவாய்... நாளை வரும் காலம் நமதில்லை....
கிடைத்த போது அனுபவி... கிடைத்ததை அனுபவி....."

நீ


ஒவ்வொரு விருட்சமும் மண்ணோடு போரடித்தான் மேலே வருகின்றது!

ஒவ்வொரு பூக்களும் தினம் தினம் போராடித்தான் மலர்கின்றது!

ஒரு ஈக் கூடத்தான் இந்த உலகத்தில் வாழ போராடுகின்றது!!

விதைத்தவனும் தூங்கலாம், ஆனால் விதைகள் தூங்குவதில்லை,
இந்த உலகை காண முட்டி மோதி பயிராகிறது, பயன் தருகின்றது!

உலக வரலாற்றில் போர்களங்கள் மாறுகின்றன,
போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது!!

கருவினிலேயே இலட்சம் அணுக்களோடு
போராடித்தான் வெளியே வருகிறோம் ..

போராடும் வரைதான் மனிதன்...
போராடு !! போராட்டத்தின் முடிவில் ஆயிரத்தில் ஒருவனாய் நீ

(Chillzee competition poem)