Wednesday, May 27, 2015

36 வயதினிலே திரை விமர்சனம்

அன்புள்ள நண்பர்களே!!!

வணக்கம்!! நலம்தானே? மீண்டும் உங்களை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
ஒரு சிலர் ஒரு சில விஷயங்களுக்காக பிரபலமானவர்களாக இருப்பார்கள். அதே போல் சில திரைப்படங்கள் பெண்களுக்கான திரைப்படங்களாக இருக்கும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும். அது மட்டுமில்லாமல் பெண்களை சுற்றி மாற்றத்தைக் கொண்டு வரும். அந்த வரிசையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம். கண்டிப்பா கண்டுபிடிச்சிருப்பீங்க ஆமாங்க 36 வயதினிலே படத்தை தாங்க பார்க்க போகிறோம்.

ஜோதிகா ஒரு ரெவுன்யு துறையில் பணிபுரியும் அரசு அதிகாரி. இவரது கணவர் ரஹ்மான் வானொலியில் பணிபுரிகிறார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தாலும் வசந்தி சராசரி குடும்பங்களில் இருக்கும் குடும்ப தலைவியைப் போலவே இருக்கிறார். வீட்டுத் தோட்டம் அமைத்து காய்கறிகளை பயிரிடுகிறார். இது இவரது கணவனுக்கு பிடிப்பதில்லை. கணவருக்கும், பெண் மிதிலாவிற்க்கும் ஐயர்லேண்ட் போயி, அங்கேயே படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனால் பொருளாதார சூழ்நிலைக் காரணமாக ஜோதிகாவும் வெளி நாட்டில் வேலை தேட நினைக்கிறார். ஆனால் இங்கே 36 வயது ஒரு பெரும் தடையாக இருக்கிறது. வேலை கிடைக்க வில்லை. இதற்க்கிடையில் ஜோதிகாவை கமிஷ்னர் பார்க்க விரும்புவதாக கூறுகிறார்கள். அங்கே இவருடைய பெண் மிதிலா ஜனாதிபதியிடம் ஒரு கேள்விக் கேட்க, அதை சற்றும் எதிர்பார்க்காத ஜனாதிபதி "உனக்கு யார் இந்த கேள்வியை சொல்லி கொடுத்தது?" இவரும் என்னுடைய அம்மாதான் எனறு சொல்கிறார். அதனால் அவர் ஜோதிகாவை சந்திக்க விரும்புகிறார். இதற்கிடையில் ரஹ்மான் ஒரு விபத்தில் ஒரு சிறுவன் மீது ஏற்றி அது கேஸ் ஆகி விடுகிறது. இதனால் ஜோதிகாவின் டிரைவிங் லைசென்ஸை உபயோகிக்கலாம் என்று பார்க்கிறார். அது காலாவதி ஆகி இரண்டு வருடம் ஆகி விட்டது(ஐயோ பாவம்) சொல்ல வேண்டுமா கணவன்களுக்கு, தை தக்கா தை தக்கா என்று குதிக்கிறார் ரஹ்மான். இப்படி ஒரு பக்கம் பிரச்சினை.
இதற்கிடையில் வீட்டுத் தோட்டத்தில் விளையும் காய்கறிகளில் 2000 பேருக்கு காய்கறி கேட்க, அனைத்து வீட்டு மொட்டை மாடிகளிலும் பயிரிடலாம் என்று முடிவு செய்ய அங்கேயும் பிரச்சினை. நிறைய காமெடி கலாட்டாவும் உண்டு.

மற்றொரு பக்கம் இவரையும், மாமனார், மாமியாரையும் மட்டும் விட்டு விடு கணவன், குழந்தையும் மட்டும் வெளி நாடு செல்ல திட்டமிடுகிறார். மிகவும் உடைந்து போகிறார் ஜோ(நாமும்தான்). அவர்கள் சென்றதும் ஜோ வின் தோழி அபிராமி இவரை சந்திக்க வருகிறார். இவர் மார்கெட்டிங் தொழிலில் அதிக அளவில் சாதித்து பெரிய நிறுவனத்திலும் இருக்கிறார். அவர் சந்தித்து சொல்லும் ஒவ்வொரு வாக்கியமும் நிச்சயம் பெரிய கைத்தட்டலை பெருகிறது. ஜோவை
தூக்கி நிறுத்துகிறதா? இவரது இயற்க்கை விவசாயம் ஜெயித்ததா? இவர் வெளி நாடு சென்றாரா? ஜனாதிபதியை சந்தித்தாரா? திரையில் பார்த்து விட்டு சொல்லுங்களேன்.

ஜோவிற்க்கு 8 வருடத்திற்க்கு பிறகான படம். நல்ல முதிற்ச்சி தெரிகிறது. ஒவ்வொரு இடத்திலும் தனியாக தெரிகிறார். நிச்சயமாக ஓங்கிச்சொல்லாம் இந்தியப் பெண்களின் பதிப்பு இவர் என்று. ஒரு தாயாக, மருமகளாக, மனைவியாக இப்படியாக பல பரிணாமங்களில் ஜொலிக்கிறார். பேருந்தில் வரும் சக பயணி ஒருவரிடம செய்யும் கலாட்டாவாகட்டும், மகளிடம் மன்றாடும் போது கோபத்தில் வா அயன் பாக்ஸ் வைச்சு மூஞ்சுல தேய்க்கிறேன் என்று சொல்வதாகட்டும் எல்லாமே தூள்.



ரஹ்மானும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால் மனிதன் எப்பொழுதுமே சிடுசிடு...

பாரட்ட வேண்டிய விஷயம் வசனங்கள்தான். குறிப்பாக எதற்கெடுத்தாலும் அழுவது இந்த தலைமுறையோடு முடியட்டும், பிரசவ வலியைவிட கொடுமையானது கணவன் அவமானப் படுத்துவதுதான், இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் நிறைய இடங்களில் கைத்தட்டலை வாங்குகிறார் விஜி.

தயாரிப்பு சூர்யா, இசை சந்தோஷ் நாரயணன், இயக்கம் ரோஷன். பல விஷயங்களில் நன்றாக இயக்கி இருக்கிறார்கல். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் இயக்கத்தில் கவனித்து இருக்கலாம்.

ஆனால் நிச்சயம் பாராட்ட வேண்டிய விஷயம் பெண்கள் எப்படி தங்கள் கனவுகளை தொலைக்காமல் திருமணத்திற்க்கு பிறகும் இருப்பது, மற்றும் இயற்கை விவசாயத்தை தூக்கி நிறுத்துவதாலும். நிச்சயம் ஓ போடலாம். படத்தை பார்த்து முடிக்கும் பொழுது அடுத்து அந்த சாதனை வரிசையில் நாம்தான் என்று நினைக்க வைக்கிறது.

தோழிகளே படத்தை உங்கள் கணவனோடு சேர்ந்து பாருங்கள். இன்னும் அர்த்தமுள்ளதாகிறது.
மொத்தத்தில் 36 வயதினிலே முற்பாதி இளமை, பிற்பாதி இயற்கை.
நன்றி!! வாழ்க வையாகம்!! வாழ்க வளமுடன்!!

No comments: