Sunday, July 27, 2014

திருமணம் என்னும் நிக்காஹ் திரைவிமர்சனம் ( Thirumannam ennum nikka tamil movie review)

அன்புள்ள நண்பர்களே!!

வணக்கம். நலம்தானே? மீண்டும் ஒரு திரைவிமர்சனத்தில் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். எப்பொழுது ஒரு படம் வரும் பொழுதும் நமக்கு எதிர்ப்பார்ப்பு இருக்கும். அந்த வரிசையில் நீண்ட நாளைய எதிர்ப்பார்ப்பு படம்தாங்க இன்னைக்கி பார்க்கப் போவது. வாங்க படத்துக்கு போகலாம்.

விஜய ராகவன் (எ) அபு பக்கர் ( ஜெய்) ஒரு அய்யங்கார் ஆத்து பையன். என்ன பயங்கரமா தலை சுத்துதா ? கொஞ்சம் பொருமையா முழுசையும் படிங்க. ஒரு வேலையா கோயம்புத்தூர் போகணும் ஆனா பயணச் சீட்டு இல்லாத காரணத்தாலா , அபு பக்கர் சீட்டைப் பயன்படுத்தி போகிறார். அங்கே விஷ்ணு பிரியா (எ) ஆயிஷா ( நஸ்ரியா) வும் அதே ரயில் பெட்டியில் பயணிக்கிறார். ஆயிஷா என்கிற அவருடைய தோழிக்கு பதிலாக தொழில் தொடர்பாக செல்கிறார். பிரியா வைப் பார்த்ததும் ஜெய்க்கு மிகவும் பிடித்து விடுகிறது. ஆனால் அவர் எதுவும் பேசுவதில்லை. இவர்கள் இருக்கைக்கு பக்கத்தில் வந்து அமரும் ஒரு நபர் பிரியாவிடம் அதிகமாக வழிகிறார். உரிமையும் எடுத்துக் கொள்கிறார். அனைவரும் தூங்கும் நேரத்தில் பிரியாவை படம்பிடிக்க முயல்கிறார். அதை கண்டுபிடித்து போலிசிடம் ஒப்படைக்கிறார். அதனால் அவர் மீது பிரியாவிற்க்கு தனி மரியாதை வருகிறது.

Directed byAneesh
Produced byAascar Ravichandran
StarringJai
Nazriya Nazim
Heebah Patel
Jamal
Music byM. Ghibran
CinematographyLoganathan
Edited byKasi Vishwanath
Production
company
Aascar Films


சென்னை வந்ததும் தங்கள் வேலையை தொடர்ந்தாலும், இருவருக்கும் ஒருவர் நினைப்பாக இருக்கிறது. இருவரும் மாறி மாறி நினைத்துக் கொள்கிறார்கள் இஸ்லாமை சேர்ந்தவர் என்று. அதனால் இஸ்லாமை பற்றிய விவரங்களை சேகரிக்க ஆரம்பிக்கிறார்கள். இருவரும் மாறி மாறி பேசிக்கொண்டாலும் தாங்கள் இஸ்லாமை சேர்ந்தவர்கள் இல்லை என்று சொல்வதில்லை. பிரியாவிற்க்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்க, வீட்டில் தான் காதலிப்பதாக சொல்லி விடுகிறார். அதே நிலையில் ராகவனும் இருக்க அவரும் சொல்லி விடுகிறார். அப்பொழுதுதான் தெரிகிறது அவர்கள் இருவரும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்று. இருவருக்கும் ஏதோ நொருங்கியது போன்ற உணர்வு.


வீட்டில் இருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. அப்பொழுது இருவரும் நினைக்கிறார்கள், இந்த திருமணத்தை நிறுத்தி விடலாம் என்று. ஏன் திருமணத்தை நிறுத்தினார்கள்? மீண்டும் திருமணம் செய்து கொண்டார்களா?வேறு என்னென்ன பிரச்சினைகளை சந்தித்தார்கள் போன்றவைதான் மிச்ச கதை.

முதலில் நாம ஜெய் பத்தி சொல்லிடலாம். ரொம்ப அப்பாவியா முகத்தை வச்சிக்கிறதுக்கும் , நடிக்கிறதுக்கும் தனியா பயிற்ச்சி எடுக்கிறார்ன்னு நினைக்கிறேன். அப்படி ஒரு அப்பாவித்தனம். நஸ்ரியா என்று நினைத்துக் கொண்டு ஒவ்வொரு பர்தா போட்ட பெண் பின்னால் போய் பார்ப்பதாகட்டும், முன்ன, பின்ன தெரியாதவங்க கிட்ட நம்மை பத்தின விஷயத்தை பகிர்ந்துக் கொள்ளக் கூடாது என்று அறிவுரை வழங்குவதாகட்டும், இஸ்லாமை ஆர்வத்தோடு படிப்பதாகட்டும் அனைத்திலும் மதிப்பெண் பெற்றுவிடுகிறார்.


நஸ்ரியா கொள்ளை அழகுங்க. இஸ்லாமிய பெண்ணாகவும், பிராமினப் பெண்ணாகவும் பொருந்தும் முகம். சொல்லிட்டாப் போச்சு, செஞ்சுட்டாப் போச்சு என்று தன் துறுதுறு விழியாலும், பேச்சாலும் சுண்டி இழுக்கிறார்.


இப்ப கதைக்கு வருவோம். ரொம்ப சொதப்பல் இருக்கு கதையில. கொஞ்சம் தைரியமா முயற்ச்சி பண்ணி இருந்தார்னா கண்டிப்பா நல்ல படமாக இருந்திருக்கும். சில இடங்கள் சபாஷ் போட வைக்கும் அதே நேரத்தில், அய்யோ என்றும் சொல்ல வைத்து விடுகிறார். விறுவிறுப்பான படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, எதிர்பாராமல் யாரோ ரிமோட் கண்ரோலை நம்ம கையில் இருந்து பிடிங்கிக் கொண்டு வேறு படத்தை மாற்றியதைப் போல இருந்தது. நிச்சயமாக பாராட்டப் பட வேண்டிய படமாக இருந்திருக்கும் கொஞ்சம் திரைக்கதையை மட்டும் மாற்றி இருந்தால். முடிவாக என்ன சொல்ல வருகிறார் என்பதும் நமக்கு தெளிவாக இல்லை. முயற்ச்சியை பாராட்டுவோம். கொலு மற்றும் ஆவணி அவிட்டம் (ஸ்ரீ பெரும்பூதூர்), ரம்ஜான் (மலபார்) மற்றும் முஹரம் (ஹைட்ராபாத்) போன்ற பண்டிகைகள் உண்மையாகவே எடுத்திருக்கிறார்.

அடுத்து இசைக்கு வருவோம். இசை கிப்ரான்(Ghibran) பின்னணி இசையிலும், பாடலிலும் கலக்கி இருக்கிறார். ஜில்லென்ரா பாடல் மிக இனிமை.

அனைத்து துணை நடிகர்களும், நடிகைகளும் தங்களுக்கான பங்கை குறைவின்றி செய்திருக்கிறார்கள்.

மொத்தத்தில்  திருமணம் என்னும் நிக்காஹ் குழப்பம்.

நீங்களும் படம் பார்த்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.


மீண்டும் சந்திப்போமா?

வணக்கம். வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!!

No comments: