Thursday, March 08, 2012

காலம் யார் கையில்?



* அறிஞர்களை வெற்றிகொள்ள, அறிவீனர்களுடன் வாதம் புரிய, தன்னைச் சுற்றி கூட்டம் சேர்க்க.. இந்நோக்கங்களுக்காக கல்வி கற்பவர்கள் சுவனத்தில் (சொர்க்கத்தில்) அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
* இறைவனே உங்களுக்காக நட்சத்திரங்களைப் படைத்தான். அவற்றின் மூலம் தரை மற்றும் கடலின் இருள்களில் நீங்கள் வழி தெரிந்து கொள்வதற்காக!
* இறைவன் கூறுகிறான்: காலத்தை திட்டாதீர்கள். காலத்தைத் திட்டுபவன் என்னை துன்பத்திற்கு உள்ளாக்குகின்றான். (ஏனெனில்) காலம் என் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. நானே இரவை பகலாக ஆக்குகின்றேன்.
* காலத்தைக் கணிப்பதற்கும், வெளிச்சத்தைத் தருவதற்கும் தான் சூரியனும், சந்திரனும் படைக்கப்பட்டனவே தவிர, அவற்றின் சுழற்சியைக் கொண்டு நன்மை தீமையைக் கணிப்பதற்கு அல்ல.
* பறவைகளைப் பறக்கவிட்டு அதனால் சகுனம் பார்ப்பது, கல்லெறிந்து குறிகேட்பது ஆகியவை இறைவனன்றி மற்றவற்றை வணங்குவதற்கு இணையான செயலாகும்.
- வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து

No comments: