Wednesday, November 14, 2012


வாசனை காற்றிலே.......

புத்துணர்வு மனதிலே ......

காலையில் குளித்து முடித்து அரக்க பரக்க சாப்பிடாமல் கூட அலுவலகமோ, கல்லூரியோ கிளம்புவோம். அந்த அவசரத்திலும் சர்ரு சர்ருன்னு அடிக்க மறக்க மாட்டோம். யாராவது நம்மை கடந்து போகும் பொழுது சில நேரங்களில் காற்றினிலே தவழ்ந்து வரும் நறுமணம் நம்மையும் அறியாமல் நம்மை இன்னொரு முறை சுவாசிக்க வைக்கும். என்ன வகையா இருக்கும், என்ன பெயர் கொண்டதாக இருக்கும் இப்படியாக நம்மை யோசிக்கவும் வைக்கும். சில நேரங்களில் நாம் மனச்சோர்வு கொண்டிருந்தால் மிக மெல்லிய நறுமணங்கள் நம்மை மிகவும் புத்துணர்வு கொள்ள வைக்கும்.

வண்ண வண்ணமாய் பூத்துக் குலுங்கும் மலர்களில் கூட அதற்க்கு மணமிருந்தால் தனி அழகு. அப்படிப்பட்ட வாசனைக்கு மனிதன் பண்டைய காலம் முதலே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறான் என்பது குறிப்பித்தக்கது. ஆனால் பண்டைய காலங்களில் மலர்களை கசக்கி அல்லது நீரில் கலந்து குறுகிய காலத்திற்க்கு மட்டுமே பயன்படுத்தினார்கள்.ஆனால் அதை எப்படி ,எப்பொழுது நிரந்தரமாக பயன்படுத்தினார்கள். யார் அதை உலகிற்க்கு அறிமுக படுத்தினார்கள் என்று எப்பொழுதாவது இதைப்பற்றி யோசித்திருப்போமா? வாசனை திரவியத்தைப் பற்றிய ஒரு வாசனையான தகவல்தான் இது.

வாசனை திரவியத்தின் வரலாறு:

வாசனை திரவியம் என்பது உடல் நாற்றத்தை போக்கவும் பின்னர் மற்றவர்களை வசிகரிக்கவும் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.PERFUME என்ற வார்த்தை லத்தீன் மொழியில் இருந்து பெறப்பட்டது. இதற்க்கு புகையின் மூலம்(THROUGH SMOKE) என்று பொருள்.

இந்த வாசனை திரவியம் 1000 வருடத்து கலை என்றால் நம்ப முடிகிறதா? ஆம் நம் முன்னோர்கள் இதை வேறு வடிவங்களாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.இந்த வாசனை திரவியத்தை கண்டறிந்தவர்கள் எகிப்து மக்களே. ஆனால் முறையாக பயன்படுத்தியவர்கள் கிரேக்கர்களும், ரோமானியர்களும் ஆவார்கள். பின்னர் முறையாக மெருகேற்றியவர்கள் ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களே. இந்த கலை இத்தாலியில் இருந்து ஃப்ரான்ஸிற்க்கு 16 ஆம் நூற்றாண்டில் நுழைந்தது. இதை அறிமுகப்படுத்தியவர் கேத்தரின்(Catherine de medicis, wife of King Henri II) அரசர் இரண்டாவது ஹென்றியின் மனைவி ஆவார்.

ஒரு காலத்தில் நீரில் மலர்களை விடுவது மற்றும் மலர்களை கசக்கி அந்த வாசனையை உபயோகித்தார்கள். ஆனால் இன்று வித விதமான மணங்களில், கண்கவர் வண்ணங்களில்,பலப்பல வடிவங்களில் கிடைக்கின்றன. வாசனைத் திரவியம் என்றாலே முதலிடம் வகிப்பது ஃப்ரான்ஸ் தான். அவ்வளவு சிறப்பான , இயற்கையான முறைகளில் தாயாரிக்கப்படுகின்றன. இங்கே தாவரங்கள் மற்றும் மலர்களில் இருந்து மட்டுமே தயாரிக்கப்படுகின்றது.பலத்தொழிற்சாலைகள் இயங்குகின்றன பாரிசில். ஆனால் தயாரிப்பில் முக்கியமானதாகவும் மற்றும் இதயமாகவே இயங்கும் சிறு நகரம் க்ராஸ் (GRASS). இந்த நகரம் நீஸ்(NICE) என்ற பகுதியில் உள்ளது. இந்த நகரம் மிதமான மத்திய தரைக்கடல் காலனிலையை(mild Mediterranean climate) கொண்டுள்ளதால் ஜாஸ்மின் என்ற மலரை இங்கே வளர்க்க முடிகின்றது. மேலும் ரோஸ்,லாவண்டர் மற்றும் லில்லி போன்ற வகைகளையும் தயாரிக்கிறார்கள். செயற்கைப் பொருள் சேர்ப்பில்லாமல் , இயற்கையாக தயாரிப்பதே இதன் சிறப்பு. இங்கே குறைந்த பட்சமாக 60 தொழிற்சாலைகள் இருப்பதாக கூறப்படுகின்றது. பல தலைமுறைகளாக தொடரும் இந்த சாதனை,யாராலும் மிஞ்ச முடியாத உயரத்தில் இருக்கிறது.இந்த க்ராஸில் வாசனைதிரவியத்துக்கான பொருட்காட்சி இயங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. உலக அளவில் உற்பத்தியில் மற்றும் தரத்திலும் முதலிடம் வகிக்கிறது ஃப்ரான்ஸ் என்பது சிறப்பு. வாசனைத் திரவியங்கள் என்றாலே ஃப்ரான்ஸ்ன்னா பார்த்துங்களேன்.அதிகமான வருமானமும் இதன் மூலம் கிடைப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஃப்ரான்ஸில் புகழ் பெற்ற நிறுவனங்கள் பல உள்ளன குறிப்பாக Chanel, Christian Dior or Estée Lauder மற்றும் பல. வாசனையில வருமானம் நல்லாதான் இருக்கு.

ஃப்ரென்ஞ் பாத்( French Bath)

பல முறை நம் நண்பர்கள் கேலி செய்வதை கேட்டிருப்போம்.அப்படின்னா என்னங்க? ஃப்ரான்ஸில போயி குளிப்பதா? அட அதுதாங்க இல்ல. வாசனை திரவியங்கள் பயன்படுத்தி குளிப்பதைதான் இப்படி கூறுவார்களாம்.

"மங்கை இவள் வாய்த்திறந்தால் மல்லிகைப்பூ வாசம்ன்னு" வைரமுத்து அவர்கள் எழுதி இருக்கிறார்களே, ஒரு வேளை அந்த பெண்மணி மல்லிகைப்பூ திரவியம் பயன்படுத்தி இருப்பாரோ!!! அப்படித்தான் இருக்கும். எது எப்படியோ நாடும் வீடும் மணந்தால் சந்தோஷமே!! என்னங்க நான் சொல்றது சரிதானே!!

No comments: